தேர்வு (மதிப்பிடுதல்)

இந்தியாவின் சவுராவில் மகாத்மா காந்தி சேவா அசிரமத்தில் மாணவர்கள் தேர்வெழுதுதல்.
2008இல் சிகனுவோக்வில்லேயிலுள்ள டான் பாசுக்கோ தொழினுட்பப் பள்ளியில் சேர கம்போடியா மாணவர்கள் தேர்வெழுதுதல்.
அமெரிக்க மாணவர்கள் கணினி அடிப்படைகள் வகுப்பில் கணினிசார் தேர்வெழுதுதல்

தேர்வு அல்லது பரீட்சை (examination, சுருங்க:exam) என்பது தேர்வுக்குட்பட்ட ஒருவரின் அறிவு, திறன், நாட்டம், உடல் நலத்தகுதியை (அல்லது மற்றவற்றில் வகைப்படுத்துதலுக்காக, காட்டு: நம்பிக்கைகள்) மதிப்பிடுவதாகும்.[1] இந்தத் தேர்வினை வாய்வழியாகவோ தாள் வழியிலோ கணினி மூலமாகவோ நடத்தலாம்; அல்லது உடல்திறன் தேர்வுகளில் குறிப்பிட்ட பகுதியில் தனது திறனை வெளிப்படுத்தக் கோரலாம். தேர்வுகள் நடத்தப்படும் பாணி, கடுமை மற்றும் தேவைகள் மாறுபடுகின்றன. காட்டாக, மூடிய நூல் தேர்வில் தேர்வுக்குட்பட்டவர் தனது நினைவுத் திறனைக் கொண்டு விடையளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது; திறந்த நூல் தேர்வில் தேர்வுக்குட்பட்டவர் உசாத்துணையையோ கைக்கணியையோ பயன்படுத்தி விடையளிக்க வேண்டியுள்ளது. தேர்வு முறைசார்ந்தோ முறைசாராதோ இருக்கலாம். காட்டாக தனது மகனுக்கு தந்தை நடத்தும் படிப்பறிவுத் தேர்வு முறைசாராதிருக்கலாம். ஓர் வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் இறுதித் தேர்வு முறைசார் தேர்வாகும். முறைசார் தேர்வில் பொதுவாக தரநிலை அல்லது தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.[2] இந்தத் தேர்வு மதிப்பெண் நெறிமுறைகளுக்கு ஒட்டியோ அல்லது குறிப்பிட்ட அளவுகோல்களாலோஅல்லது இரண்டையும் ஒட்டியோ புரிந்து கொள்ளப்படும். மதிப்பீட்டிற்கான நெறிமுறை தனியாகவோ, அல்லது பலமடங்கு தேர்வுக்குட்பட்டவர்களின் புள்ளியியலாய்வு மூலமாகவோ தீர்மானிக்கப்படலாம்.

சீரான முறையில் நடத்தப்பட்டும் மதிப்பிடப்பட்டும் சட்டவழியே நிலைநிறுத்தக்கூடியதுமான தேர்வு சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வு எனப்படுகின்றது. [3] சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் பெரும்பாலும் கல்வி, தொழில்முறை சான்றளிப்பு, உளவியல், படைத்துறை போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்சான்றுகள்

  1. http://www.merriam-webster.com/dictionary/test
  2. Thissen, D., & Wainer, H. (2001). Test Scoring. Mahwah, NJ: Erlbaum. Page 1, sentence 1.
  3. North Central Regional Educational Laboratory, NCREL.org பரணிடப்பட்டது 2008-03-05 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்