தொங்கு பாலம்

யிச்சாங் பாலம், யாங்சி நதி, சீனாவில் உள்ள ஒரு வகை தொங்கு பாலம்

தொங்கு பாலம் என்பது பால வகைகளுள் ஒன்று. இதில் பாலம் (பளு-தாங்கும் பகுதி) இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த வகைப் பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும். மேலும் பக்கவாட்டு கம்பிகளில் இருந்து செங்குத்து இடைநிறுத்த கம்பிகள் இணைக்கப்பட்டு அவை போக்குவரத்து செல்லும் சாலை உள்ள தளத்தின் எடையை தாங்கும்படி அமைக்கப்படுகின்றது.[1][2][3]

சாதகமான நிலைகள்

  • மற்ற பால வகைகளைக் காட்டிலும் இதில் நீளமான தாங்கியை (span) அமைக்கலாம்.
  • நிலநடுக்க அசைவுகளை இந்தப் பாலம் தாங்கும்.
  • குறைவான மூலப்பொருளே இதைக் கட்டுவதற்குத் தேவைப்படும்.
செவரன் தொங்கு பாலம்

மேற்கோள்கள்

  1. "Why Turkey Built the World's Longest Suspension Bridge". The B1M. 11 May 2022. பார்க்கப்பட்ட நாள் 22 May 2022.
  2. "Groundbreaking ceremony for bridge over Dardanelles to take place on March 18". Hürriyet Daily News. 2017-03-17. http://www.hurriyetdailynews.com/groundbreaking-ceremony-for-bridge-over-dardanelles-to-take-place-on-march-18.aspx?pageID=238&nID=110948&NewsCatID=345. 
  3. "Port Authority of New York and New Jersey - George Washington Bridge". The Port Authority of New York and New Jersey. Archived from the original on 20 September 2013. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.