தொடக்க மெனு

தொடக்க மெனு
மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
விண்டோசு 7இன் தொடக்க மெனு
Details
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
விண்டோசு 95இலிருந்து விண்டோசு சர்வர் 2008 ஆர்2 வரை
முன்வந்ததுவிண்டோசு 3.1இன் புரோகிராம் மனேசர்
பின் வந்ததுவிண்டோசு 8இன் தார்ட்டு கிரீன்
Related components
பணிப்பட்டி, விண்டோசுத் துருவி

தொடக்க மெனு அல்லது துவங்கு மெனு (Start Menu) என்பது மைக்ரோசாப்டு விண்டோசு இயங்குதளங்களிலும் (விண்டோசு 95இலிருந்து விண்டோசு சர்வர் 2008 ஆர்2 வரை) சில எக்சு விண்டோ மனேசர்களிலும் பயன்படுத்தப்பட்ட பயனர் இடைமுக மூலகம் ஆகும்.

விண்டோசு விசுட்டாவுக்கு முந்தைய விண்டோசுப் பதிப்புகளில் இடம்பெற்ற தொடக்க மெனுவில் துவங்கு என்ற சொல்லும் விண்டோசின் அடையாளச் சின்னமும் காணப்பட்டன.[1] பின்னர், விண்டோசு விசுட்டாவிலும் விண்டோசு 7இலும் விண்டோசின் அடையாளச் சின்னம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.[2] ஆனாலுங்கூட, கருப்பொருளை விண்டோசு கிளாசிக்குக்கு மாற்றுவதன் மூலம் தொடங்கு என்ற சொல்லைக் காண்பிக்கச் செய்ய முடியும் (ஆங்கில மொழி விண்டோசில் துவங்கு என்பதும் தொடங்கு என்பதும் Start என்றே அமைந்திருக்கும்.).[3]

தொடக்க மெனுவானது கணினி, ஆவணங்கள், படங்கள், இசை, விளையாட்டுகள், கட்டுப்பாட்டுப் பலகம், சாதனங்கள் மற்றும் அச்சுப்பொறிகள், இயல்புநிலை நிரல்கள், உதவி மற்றும் ஆதரவு ஆகிய இடங்களுக்குச் செல்லவும் மென்பொருட்களைத் திறக்கவும் கோப்புகளையும் கோப்புறைகளையும் தேடவும் கணினியை நிறுத்தவும் தேவையான பயனர் இடைமுகத்தை வழங்குகின்றது.[4]

விண்டோசு 8இலிருந்து தொடக்க மெனுவின் பயன்பாடு கைவிடப்பட்டதுடன், தார்ட்டு கிரீன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்