தொடரி (திரைப்படம்)
தொடரி | |
---|---|
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | டி. ஜி. தியாகராசன் (Presenter) செந்தில் தியாகராசன் அருண் தியாகராசன் பிரபு சாலமன் |
கதை | பிரபு சாலமன் |
இசை | இமான் |
நடிப்பு | தனுஷ் கீர்த்தி சுரேஷ் தம்பி இராமையா கருணாகரன் |
ஒளிப்பதிவு | வெற்றிவேல் மகேந்திரன் |
படத்தொகுப்பு | எல். வி. கே. தாசு |
கலையகம் | சத்ய ஜோதி பிலிம்சு காட் பிக்சர்சு |
விநியோகம் | சத்ய ஜோதி பிலிம்சு |
வெளியீடு | செப்டம்பர் 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தொடரி 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ் திகில் கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். சத்ய ஜோதி பிலிம்சு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரபு சாலமன் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். தனுஷ், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.[1]
நடிகர்கள்
- தனுஷ் - பூச்சியப்பன்
- கீர்த்தி சுரேஷ் - சரோஜா
- பூஜா ஜாவேரி - நடிகை சிரிஷா
- கணேஷ் வெங்கட்ராமன்
- ஹரிஷ் உத்தமன்
- தம்பி ராமையா - சந்திரகாந்த்
- ராதாரவி
- கருணாகரன் - வைரம்
- ஆர். வி. உதயகுமார் - ஓட்டுநர்
- பிரேம்
- போஸ் வெங்கட்
- நாசர்
- ஞானசம்பந்தன்
- பட்டிமன்றம் ராஜா
- அனு மோகன்
- படவா கோபி
- அசுவின் ராஜா
- தர்புகா சிவா
- இமான் அண்ணாச்சி
- ஏ. வெங்கடேஷ்
- சின்னி ஜெயந்த்
- பாரதி கண்ணன்
ஒலிப்பதிவு
தொடரி | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 06 சூன் 2016[2] | |||
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | லகாரி மியூசிக் டி - சீரியஸ் | |||
இசைத் தயாரிப்பாளர் | இமான் | |||
இமான் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.[3] இவர் ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் 2006 இல் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும், இப்படத்தின் மூலமாக இவர் பிரபு சாலமன் உடன் ஆறாவது முறையாக இணைந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் யுகபாரதி எழுதியிருக்கிறார்.
பாடல்கள்
எண் | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|---|
1. | அடடா இதுயென்ன | ஹரிசரண், வந்தனா சீனிவாசன் | 4:52 |
2. | ஊரெல்லாம் கேக்குதே | ஸ்ரேயா கோசல், மேரி ராய் | 4:.09 |
3. | மனுசனும் மனுசனும் | கானா பாலா | 3:34 |
4. | போன உசுரு | ஹரிசரண், ஸ்ரேயா கோசல் | 4:33 |
5. | லவ் இன் வீல்சு | சின்னப்பொண்ணு, நாதன் | 3:03 |
6. | அடடா இதுயென்ன (Instrumental Version) | 4:53 | |
7. | போன உசுரு (Instrumental Version) | 4:25 |
மேற்கோள்கள்
- ↑ Avinash Pandian. "Dhanush next movie titled as Rail?". Behindwoods.
- ↑ Thodari audio launch: what's the buzz?. The Hindu (6 June 2016)
- ↑ "Thodari (Original Motion Picture Soundtrack) by D. Imman on iTunes". iTunes. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.