தொலைத்தொடர்பு தரப்படுத்தலுக்கான ஐரோப்பிய நிறுவனம்

ஐரோப்பிய தொலைத்தொடர்பு தரப்படுத்தல் நிறுவனம் என்பது இலாப நோக்கற்ற தரப்படுத்தல் நிறுவனம். இது ஜி. எஸ். எம் தொலைத்தொடர்பு முறையை தரப்படுத்தி வெற்றி கண்டது. இந்த நிறுவனத்தின் தரப்படுத்தல் திட்டங்கள் ஐரோப்பாவில் நடைமுறைப்படுகின்றன. உலகம் முழுவதிலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பிய ஆணையத்தினால் ஏற்கப்பட்டது.[1][2][3]

உறுப்பு நாடுகள்

இந்த அமைப்பின் முழு உறுப்பினர்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும், அல்பானியா, அண்டோரா, ஐசுலாந்து, நார்வே, சுவிட்சர்லாந்து, போசுனியாவும் ஹெர்சிகோவினாவும், செர்பியா, [[]மாசிடோனியா]], உக்ரைன், துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகள் உள்ளன.

தற்போதைய துணை உறுப்புகளாக ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, இசுரயேல், யேமன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், உசுபெகிசுத்தான், இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. பார்வையாளராக ரஷ்யா உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Definition of ETSI (European Telecommunications Standards Institute) - Gartner Information Technology Glossary". Gartner (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  2. "Feedback from: ETSI". European Commission (in ஆங்கிலம்). 2022-04-05. பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  3. European Commission, Unleashing the Potential of Cloud Computing in Europe, COM(2012) 529 final, page 10, published 27 September 2012, accessed 17 June 2024