த காபிட்டு 1
த காபிட்டு: அன் அன்எக்சுபெக்டட் ஜெர்ன்னி | |
---|---|
இயக்கம் | பீட்டர் ஜாக்சன் |
தயாரிப்பு |
|
மூலக்கதை | த காபிட்டு படைத்தவர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் |
திரைக்கதை |
|
இசை | ஹோவர்ட் ஷோர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆண்ட்ரூ லேச்னி |
படத்தொகுப்பு | ஜபேசு ஓல்சென் |
கலையகம் |
|
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | 28 நவம்பர் 2012(வெலிங்டன் முதல் காட்சி) 12 திசம்பர் 2012 (நியூசிலாந்து) 14 திசம்பர் 2012 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 169 நிமிடங்கள்[1] |
நாடு | |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200–315 மில்லியன்[3][4][5] |
மொத்த வருவாய் | $1.017 பில்லியன்[6] |
த காபிட்டு: அன் அன்எக்சுபெக்டட் ஜெர்ன்னி (ஆங்கில மொழி: The Hobbit: An Unexpected Journey) என்பது 2012 ஆம் ஆண்டு பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில், பிரான் வால்சு, பிலிப்பா போயன்சு, பீட்டர் ஜாக்சன் மற்றும் கில்லெர்மோ டெல் டோரோ ஆகியோரின் திரைக்கதையில் வெளியான அமெரிக்க நாட்டு காவிய உயர் கனவுருப்புனைவு சாகசத் திரைப்படம் ஆகும். இது 1937 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஆர். டோல்கீன் எழுதிய த காபிட்டு நாவலை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் ஜாக்சனின் இயக்கத்தில் வெளியான த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடர்களின் முத்தொகுப்புக்கு முன்னோடியாக செயல்படுகிறது.
இப்படத்தின் கதை அறுபது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய-பூமியில் நடப்பது போன்றும், த லார்ட் ஆப் த ரிங்க்ஸின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் படத்தின் பகுதிகள் டோல்கீனின் த ரிட்டர்ன் ஆப் த கிங்கின் பிற்சேர்க்கை கதையிலிருந்து தழுவி எடுக்கப்பட்டது.[7] இந்த திரைப்படத்தில் இயன் மெக்கெல்லன், ரிச்சர்ட் ஆர்மிட்டேச், ஜேம்ஸ் நெஸ்பிட், கென் சாட், கேட் பிளான்சேட், இயன் கோல்ம், கிறிஸ்டோபர் லீ, கியூகோ வீவிங், எலியா வுட் மற்றும் ஆண்டி செர்கிஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இது த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங்[8] வெளிவந்து கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, த காபிட்டு படம் 28 நவம்பர் 2012 அன்று வெலிங்டனில் திரையிடப்பட்டது, பின்னர் 12 திசம்பர் 2012 அன்று நியூசிலாந்திலும், 14 டிசம்பர் 2012 அன்று அமெரிக்காவிலும் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் பெரும்பாலும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களையும் பல பாராட்டுகளைப் பெற்றது. இது வசூல் ரீதியாக $1.017 பில்லியனை வசூலித்தது, இது 2012 ஆம் ஆண்டில் நான்காவது அதிக வசூல் செய்த திரைப்படம் ஆகும். இந்த படம் 86ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகியவற்றிற்காக பரிந்துரைக்கப்பட்டது.[9] இத்திரைப்படத்தைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு த டெசோலேசன் ஆப் சிமாக் மற்றும் 2014 ஆம் ஆண்டு த பாட்டிலே ஆப் த பைவ் அர்மிசு ஆகிய படங்கள் வெளிவந்தன.
மேற்கோள்கள்
- ↑ "The Hobbit: An unexpected Journey (2012)". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் 21 December 2013.
- ↑ "The Hobbit: An Unexpected Journey". BFI. Archived from the original on 30 January 2013. பார்க்கப்பட்ட நாள் 21 December 2013.
- ↑ "The Hobbit: An Unexpected Journey (2012)". The Numbers. பார்க்கப்பட்ட நாள் 15 January 2022.
- ↑ Masters, Kim (17 October 2012). "'The Hobbit:' Inside Peter Jackson and Warner Bros.' $1 Billion Gamble". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/hobbit-peter-jackson-warner-bros-379301. "A knowledgeable source says the first two instalments cost $315 million each, and that's with Jackson deferring his fee. A studio source insists that number is wildly inflated and, with significant production rebates from New Zealand, the cost is closer to $200 million a movie."
- ↑ "'Hobbit' Sequel Reigns at Box Office". The Wall Street Journal. https://online.wsj.com/news/articles/SB10001424052702304173704579260380920446734.
- ↑ "The Hobbit: An Unexpected Journey". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
- ↑ "The Hobbit: An Unexpected Journey : Your unexpected questions answered". CNN இம் மூலத்தில் இருந்து 12 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130412204930/http://edition.cnn.com/2012/12/18/showbiz/movies/the-hobbit-unexpected-journey-questions-answers/index.html.
- ↑ "The Hobbit Worldwide Release Dates". TheHobbit.com. Archived from the original on 15 December 2012. பார்க்கப்பட்ட நாள் 21 December 2013.
- ↑ "2013 Oscar Nominees | 85th Academy Awards Nominees". Oscar.go.com. பார்க்கப்பட்ட நாள் 21 December 2013.