நகாமோ மாவட்டம்
நகாமோ மாவட்டம்
নগাঁও জিলা | |
---|---|
மாவட்டம் | |
Location of Nagaon district in Assam | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையகம் | நகோன் |
இணையதளம் | nagaon |
நகாமோ மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது அசாமில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் ஆகும். [1] இதன் தலைமையகம் நகோன்வில் உள்ளது. இந்த மாவட்டம் 3831 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] காசிரங்கா தேசியப் பூங்காவின் சில பகுதிகள், இந்த மாவட்டத்தின் வரையறைக்குள் வருகின்றன.
பொருளாதாரம்
இங்கு நெல் பயிரிடுகின்றனர். உழவுத் தொழிலே முதன்மையானது. இங்கு நெசவு ஆலைகளும், தேயிலை, சணல் தொழிற்சாலைகளும் உள்ளன.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 2,826,006 மக்கள் வாழ்கின்றனர். [1] சதுர கிலோமீட்டருக்குள் 711 பேர் வசிக்கின்றனர். [1] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 962 பெண்கள் உள்ளனர். [1] இங்கு வசிக்கும் மக்களில் 74% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1] இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர்.
இங்கு அசாமிய மொழி, வங்காளம், இந்தி, போடோ, கர்பி, திமாசா, மணிப்பூரி ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அசாமிய மொழியை பொது மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{cite book}
:|last1=
has generic name (help)
இணைப்புகள்
- மாவட்ட அரசு பரணிடப்பட்டது 2021-01-27 at the வந்தவழி இயந்திரம்