நன்னீர் உயிரியல்

நன்னீர் உயிரியல் (Freshwater biology) என்பது நன்னீர் சூழல்மண்டலச் சூழலியல் பற்றிய அறிவியலார்ந்த உயிரியல் ஆய்வும் நன்னீர் உயிரியலின் ஒரு கிளையும் ஆகும். நன்னீர் வாழும் உயிரினங்களுக்கும் அவற்றின் இயற்பியல் வேதியியல் சூழலுக்கும் இடையே நிலவும் தொடர்புகளையும் புரிந்துகொள்ள முற்படுகிறது. கழிவுநீர் பதப்படுத்துதல் [1] போன்ற தொழிற்சாலை முறை, உயிரியல் முறையில் தண்ணீர் தூய்மைப்படுத்துதல் போன்ற செயல்முறைகளிலும் இத்துறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் கும்பிரியாவில் உள்ள விண்டெர்மேரில் நன்னீர் உயிரியல் சங்கம் [2] அமைந்து செயற்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்