நப்தாலி பென்னெட்

நப்தாலி பென்னட்
Naftali Bennett
13-வது இசுரேலியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சூன் 2021
குடியரசுத் தலைவர்ரூவன் இருவ்லின்
முன்னையவர்பெஞ்சமின் நெத்தனியாகு
பொருளாதார, சமயத் துறைகளுக்கான அமைச்சர்
பதவியில்
2013–2015
புலம்பெயர்ந்தோருக்கான அமைச்சர்
பதவியில்
2013–2019
கல்வி அமைச்சர்
பதவியில்
2015–2019
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
2019–2020
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மார்ச்சு 1972 (1972-03-25) (அகவை 52)
கைஃபா, இசுரேல்
அரசியல் கட்சிபுதிய வலதுக் கட்சி (2018–இன்று)
பிற அரசியல்
தொடர்புகள்
  • லிக்கூட் (2005–2008)
  • யூதர் வீட்டுக் கட்சி (2012–2018)
துணைவர்
கிலட் பென்னட் (தி. 1999)
பிள்ளைகள்4
வாழிடம்இராணனா, இசுரேல்
முன்னாள் கல்லூரிஎருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்
வேலை
  • இராணுவ அதிகாரி
  • தொழிலதிபர்
  • அரசியல்வாதி
இணையத்தளம்naftalibennett.co.il இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
Military service
கிளை/சேவைஇசுரேலிய பாதுகாப்புப் படைகள்
சேவை ஆண்டுகள்1990–1996
தரம்மேஜர்
அலகு
போர்கள்/யுத்தங்கள்
  • தெற்கு லெபனான் சர்ச்சை (1985–2000)
  • 2006 லெபனான் போர்

நப்தாலி பென்னெட் (Naftali Bennett; பிறப்பு:25 மார்ச் 1972) இசுரேலிய அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார்.[1][2][3] இவர் இஸ்ரேல் தேசிய அரசியலில் 2012-ஆம் ஆண்டு முதல் திறம்பட செயல்பட்டு வருபவர் ஆவார். இவர் யூதர்கள் தாயகக் கடசியின் (HaBayit HaYehudi) அரசியல்வாதி ஆவார். நெப்தாலி பென்னெட் 2013-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் ஓரவை முறைமை கொண்ட நாடாளுமன்றமான கெனெசெட்டில் உறுப்பின்ராக உள்ளார். பெஞ்சமின் நெதன்யாகு அமைத்த மூன்றாவது அமைச்சரவையில், நப்தாலி பென்னெட், 2013-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பொருளாதாரம மற்றும் சமயத்துறை அமைச்சராக இருந்தார். 2015-ஆண்டு முதல் பெஞ்சமின் நெதன்யாகுவின் நான்காம் அமைச்சர்வையிலும் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். மேலும் இவ்ர் பாலஸ்தீனர்கள் தன்னாட்சி கொண்ட தனி நாடு அமைக்கும் உரிமைக்கு எதிராக செயல்பட்டவர்.

பணி ஓய்வு பெறும் போது, இஸ்ரேலிய பாதுகாப்புத் துறையில் மேஜர் பதவியில் இருந்த நப்தாலி பென்னெட், பல சிறப்புப் படைகளில் பணியாற்றிய போது பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெற்றார். படைத்துறையிலிருந்து விலகிய நப்தாலி பென்னெட் ஜெருசலம் ஹூப்ரு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். நெப்தாலி பென்னெட் அரசியலில் நுழைவதற்கு முன்னர், கணினித் துறையில் மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களை நிறுவி, செல்வந்தரானார். தற்போது இவர் சியோட்டோ மற்றும் சொலுட்டோ ஆகிய மென்பொருள் நிறுவனங்களில் தலைமைச் செயல் அலுவலராக உள்ளார்.

மேலும் நப்தாலி பென்னெட் நவீன மரபு வழி யூத சமயத்தின் பார்வையாளராக உள்ளார். இவர் முதன்முறையாக 2013-இல் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் போது, இவரது பெற்றோர்கள் ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களாக இருந்ததால், நெப்தாலி பென்னெட்டும் ஐக்கிய அமெரிக்காவின் குடிமகன் உரிமையை பெற்றிருந்தார்.

2021 இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிணக்குகளுக்குப்[4] பின்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவின் அரசை நீக்க, நப்தாலி பென்னெட் சிறு சிறு கட்சிகளின் கூட்டணியை உருவாக்கியுள்ளார்.[5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்