நரம்புத் திசு
நரம்புத் திசு | |
---|---|
நரம்புத்திசுக்களுக்கான எடுத்துகாட்டு | |
நரம்புத் திசுக் கலங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
MeSH | D009417 |
உடற்கூற்றியல் |
நரம்புத் திசு அல்லது நரம்பிழையம் (Nervous tissue) என்பது நரம்பு மண்டலத்தின் முதன்மை திசு உறுப்பாகும். நரம்பு மண்டலம் உடல் செயல்களை ஒழுங்குபடுத்தி கட்டுபடுத்துகிறது. இதில் மைய நரம்பு மண்டலத்தின் மூளையும், தண்டுவடமும், உட்புற நரம்பு மண்டலத்தின் புற நரம்பு மண்டலமும் ஆகிய இருபகுதிகள் அமைகின்றன. இதில் நரம்புகள் அல்லது நரம்புக் கலங்கள், தூண்டுதல்களுக்கும் உதவிபுரிகின்றன. கிளியா (கிரேக்கப் பொருள், பசை), எனும் நரம்பிழையம் , தூண்டுதக்கும் நரம்பனுக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்குதல் போன்ற பணிகளைச் செய்கின்றது.[1]
நரம்புத் திசு வெவ்வேறு வகையான நரம்புன்களால் ஆயது. இவை அனைத்தும் சேர்ந்து நரம்புக் கற்றைகளாக உருவாகி உயிர்க்கலச் செயல்திறன் தொடர்பான குறிகைகளை அனுப்பும் நீண்ட தண்டு போன்ற நரம்பன்நுனியாக அமைகிறது. நரம்பு கற்றைகள் நரம்புகளை புறநரம்பு மண்டலத்திலும் நரம்புத் தடவழிகளை மைய நரம்பு மண்டலத்திலும் உருவாக்குகின்றன.
நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் உணர்திறன் மண்டல ஒருங்கிணைப்பு, தசைகள், சுரப்பிகளின் கட்டுப்பாட்டு, நீர்ச்சமனிலை (ஹோமியோஸ்டிஸ்), மனநிலை ஆகிய அனைத்தையும் செயல்படுத்துகின்றன.
கட்டமைப்பு
நரம்புத் திசு நரம்புக்கலங்கள் எனும்நரம்பன்களையும், நரம்புக் கடத்துக் கலங்களையும் கொண்டுள்ளன. மையநரம்பு மண்டலத்தில் உடுக்கலங்கள் நுண்கடத்துகலங்கள், ependymal cells, and oligodendrocyte ஆகிய நான்கு நரம்புகடத்து கலங்கள் உல்ளன. புற நரம்பு மண்டலத்தில் துணைக் கடத்து கலங்கள், சுவான் கலங்கள் ஆகிய இரண்டு நரம்புக் கடத்து கலங்கள் உள்ளன. மைய நரம்பு மணடலத் திசு வகைகள் வெண்பொருளாகவும் சாம்பற்பொருலாகவும் அமைகிறன. நரம்புத் திசு நரம்பன்களாகவும் நரம்புகடத்திகளாகவும் அமைகின்றன.[2]
உட்கூறுகள்
நரம்பன்கள் சிறப்புச் செயல்பாட்டிக் கலங்களாகும். இவை நரம்புத் தூண்டல்களைப் பெற்று அடுத்த நரம்பன்களுக்கு அளிக்கின்றன அல்லது தம் படலத்துக்குக் குறுக்கே அமைந்த செயல் மின்னிலைகளை அடுத்த நரம்பனுக்கு அளிக்கின்றன.[3] இவை இழைகளைப் போன்ற நீட்சிகள் உள்ள பெரிய கல உடலையும் நரம்புநுனியையும் பெற்றுள்ளன. இந்த கிளை பரப்பிய இழைநீட்சிகள் மின்வேதிக் குறிகை ந்ரம்புஇயச் செலுத்திகளைப் பெறுகின்றன. இந்நில்நி கல மின்னழுத்தத்தை மாற்றுகிறது. நரம்புநுனிகள் அடுத்த நரம்பனுக்குக் கடத்தும் மின்னிலைகளை ஏற்கும்படி நீண்ட நீட்சியயைப் பெற்றுள்ளன. குமிழொத்த நரம்புநுனி முடிவு செயல்முனையம் எனப்படுகிறது. இது அடுத்த நரம்பனின் இழைநீட்சிகளில் இருந்து இணைகவை எனும் சிறுசந்தால் பிரிக்கப்பட்டிருக்கின்றன. செயல்மின்னிலை ந்ரம்புநுனி வழி நரம்புமுனையத்துக்குச் செல்லும்போது, நரம்புசெலுத்த்கள் இணைகவைக்குக் குருக்கே விடுவிக்கப்பட்டு நரம்புசெலுத்தி ஏற்பி அல்லது இணைகவை ஏற்பியுடன் பிணைந்து நரம்புத் தூண்டல்கள் தொடர்கின்றன.[4] [5]
நரம்பன்கள் செயல்பாடு சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வகைபடுத்தப்படுகின்றன்.
- செயல்பாட்டு வகைபாடு
- [6]
- உணர்திற நரம்பன்கள் ( உட்தரவு): இது உணர்வுத் த்கவலை செயல்மின்னிலை(நரம்புத் தூண்டல்) வடிவில் புற நரம்பு மண்டலத்தில் இருந்து மைய நரம்பு மண்டலத்துக்கு அஞ்சல் செய்கிறது
- இயக்க நரம்பன்கள் (வெளிச்செயல்): மைய நரம்பு மண்டலத்தின் செயல் மின்னிலையை சரியான இயக்கிக்கு(தசைகள், சுரப்பிகள்) அஞ்சல் செய்கிறது
- இணைநரம்பன்கள்: மூளை, தண்டுவடம் போன்ற தனிக்களப் பகுதி வரம்புக்குள் நரம்பன்களை இணைக்கும் கலங்கள் இணைநரம்பன்கள் ஆகும்
- கட்டமைப்பு வகைபாடு
- [6]
- பலமுனைய நரம்பன்கள் கல உடலில் இருந்து வரும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட செயல்முறைகளைக் கொண்டிருக்கும். இவற்றில் மைய நரம்பு மண்டல முதன்மை நரம்பன் வகை, இணைநரம்பன்கள், இயக்க நரம்பன்கள் ஆகியன அடங்கும்.
- இருமுனைய நரம்பன்கள் இரண்டு செயல்முறைகள் கல உடல், இழைநீட்சி, நரம்புத்தண்டு ஆகியவறின் இருமுகச் செயல்முறைகள் நரம்பன்கள் ஆகும்,
- போலிமுனைய நரம்பன்கள் இவை ஒரு செயல்முறை இரண்டு கிளைகளாக பிரிந்து நரம்புத்தண்டுக்கும் இழைநீட்சிக்கும் செல்லும் உணர்திற நரம்பன்களாகும்.
- ஒருமுனையத் தூவிக் கலங்கள் இவை கிளர்வுற்ற குளுட்டமட்டர்சிக் இடைநரம்பன்களாகும். இவை நம்பிழைநீட்சியக தூவி போன்ற சிறு தனி இழைநீட்சியில் முடிகின்றன. சிறுமூளைக் குறுணை அடுக்குகளில் காணப்படுகின்றன.
- நரம்புக் கடத்துகல வகைபாடு
- [7]
- நுண்கடத்துகலங்கள்: இவை பேருண்ணிக் கலங்களாகும். எனவே இவை மைய நரம்பு மண்டல நோயெர்ப்பு அமைப்பாகும்.[8] இவை மிகச் சிறிய நரம்புகடத்துகலமாகும்.
- உடுக்கலங்கள்: இவை விண்மீன் வடிவ பெருநரம்புகடத்து கலங்களாகும். இவை மைய நரம்பு மண்டலத்தின் பல செயல்முறைகளைச் செய்கின்றன. இவை மூளையில் மிகவும் செறிவாக அமைந்துள்ளன. இவை இயல்பார்ந்த மைய நரம்பு மண்டலத்துக்கு நலம் தருவன..[9]
- குறைநரம்பிணர்க் கலங்கள்: இவை சில செயல்களையே செய்யும் மைய நரம்பு மண்டலக் கலங்களாகும். இவை நரம்பனின் நரம்புத்தண்டுக்கு கொழுப்புறையை தருகின்றன. இவை கொழுப்பு சார்ந்த மின்காப்பி ஆகும். இது நரம்புத்தன்டில் செல்லும் செயல்மின்னிலையை வேகப்படுத்துகின்றன.[6]
- NG2 நரம்பு கடத்துகலம்: இவை உடுக்கலங்கள், குறைநரம்பிணர்கலம், நுண்கடத்துகலம் ஆகியவற்றில் இருந்து வேறுபட்டு குறைநரம்பிணர்கலங்களின் முன்னோடியாக விளங்கும் மைய நரம்பு மண்டல மண்டலத்தின் உயிர்க்கலங்களாகும்CNS[7]
- சுவான் கலங்கள்: இவை புற நரம்பு மண்டலத்தின் குறைந்ரம்பிணர்கலங்கள் ஆகும். இவை நரம்புத்தன்டுகளைப் பேணவும் புற நரம்பு மண்டல கொழுப்புறைகளை உருவாக்கவும் உதவுகிறது.[6]
- துணை நரம்பு கடத்துகலம்: இவை புற நரம்பு மண்டலத்தின் உடல் நரம்புக் கலங்கள கர்ரையாக அ மையும் நரம்பு முடிச்சின் நம்பன்கல மேர்பரப்பின் புற்ணியாக அமையும் கலங்களாகும்.[10]
- குடல் நரம்பு கடத்துகலம்: இவை வயிற்று சிறுகுடல் தடவழியில் உள்ல குடல் நரம்பு மண்டலத்தில் அமைகின்றன.[11]
- திசுக்களின் வகைபாடு
மைய நரம்பு மண்டலம்:[5]
- சாம்பற்பொருள் கல உடல்கள், இழைநீட்சிகள், கொழுப்புறையற்ர ந்ரம்புத்தண்டுகள், முற்கணிக உடுக்கலங்கள் ( உடுக்கலத் துணைவகை), துணைக் குறைநரம்பிணர்க் கலங்கள் ( கொழுப்புறையற்ற குறைநரம்பிணர்க் கலத் துணைவகை), நுண்நரம்புகடத்துகலம், மேலும் மிகச் சில கொழுப்புறை நரம்புத் தண்டுகள் ஆகியவர்றைப் பெற்றுள்ளது.
- வெண்பொருள் கொழுப்புறை நரம்புத்தண்டுகள், நாரிழை உடுக்கலங்கள், கொழுப்புறை குறைநரம்பிணர்க் கலங்கள், நுண்நரம்புகடத்துகலங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.
புற நரம்பு மண்டலம்:[12]
- நரம்பு முடிச்சு இழையம் கல உடல்கள், இழைநீட்சிக, துணை நரம்புகடத்து கலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- நரம்புகள் கொழுப்புறை, கொழுப்புறையற்ற நரம்புத்தண்டுகள், சுவான் கலங்கள் ஆகியவற்றை இணைப்பிழையங்கள் சூழப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு நரம்பையும் சுற்றி இணைப்பு திசுக்களின் பின்வரும் மூன்று அடுக்குகள் உள்ளன:[5] [12]
- அகநரம்புக்குழல். ஒவ்வொரு நரம்புத்தண்டும் ஓர் அகநரம்புக்குழலால் சூழப்பட்டிருக்கும். இது இணைப்பிழையத்தின் மெலிந்த, நுட்பமான, காப்பு அடுக்காகும்.
- இடைநரம்புக்குழல். ஒன்று அல்லது அதற்கு மேலான நரம்புக் கட்டும் இடைந்ரம்புக்குழலால் ஏழு அல்லது எட்டு மையமொன்றிய படல அடுக்குகள் வரை சூழப்பட்டிருக்கும். இது நரம்புநாரிழைகளைத் தாங்கவும் காக்கவும் உதவும். மேலும், இது புறநரம்புக்குழல் கட்டு ஊடாக பெரிய மூலக்கூறுகள் ஊடுருவுவதைத் தடுக்கும்.
- அகநரம்புக்குழல். ஒவ்வொரு நரம்புத்தண்டும் ஓர் அகநரம்புக்குழலால் சூழப்பட்டிருக்கும். இது இணைப்பிழையத்தின் மெலிந்த, நுட்பமான, காப்பு அடுக்காகும்.
- புறநரம்புக்குழல். இது வெளிப்புற நரம்பை மூடிய அடர் இணைப்பிழைய வெளிப்புற அடுக்கு ஆகும். புறநரம்புக்குழல் அல்லது உறை என்பது துளையுறு நரம்புடன் இணைந்த அடர்த்தியான இணைப்பான இழையங்களின் வெளிப்புற அடுக்கு ஆகும்.
செயல்பாடு
நரம்பிழையத்தின் வேலை நரம்பு மண்டலத்தின் நரம்பிழையங்களை ஒரு தொடர்புவலையாக்கி இழையத்தூடே மின்குறிகைகளை கடத்துவதாகும்.[13]மைய நரம்பு மண்டலத்தில், இணைகவைகளைக் கொண்ட சாம்பற்பொருள் தகவல் செய்ல்முறையாக்கத்துக்கு முதன்மையானதாகும். கொழுப்புறையுள்ல் நரம்புத்தண்டைக் கொண்டுள்ள வெண்பொருள், சாம்பற்பொருள் பகுதியில் நரம்பு உந்தல்களை இணைத்து வழங்குகிறது.[14]
புற நரம்பு மண்டலத்தில், கல உடல்களையும் இழைநீட்சிகளையும் கொண்ட நரம்பு முடிச்சு இழையங்கள் நரம்பிழைய உந்தல்களுக்கான அஞ்சல் புள்ளிகளை கொண்டுள்ளன. கொழுப்புறையிட்ட நரம்புத்தண்டுக் கற்றைகளைக் கொண்ட நரம்பிழையம், செயல்மின்னிலை உந்தல்களை ஏந்திச் செல்கிறது.[5]
மருத்துவமனை புற்றுக் குறிப்பீடுகள்
புற்றுகள்
நரம்புத் திசு புற்றுகள பின்வருமாறு:
- நரம்பியக்கடத்திப் புற்றுகள் ( நரம்பியக் கடத்துகலப் புற்றுகள்)
- பெருமூளைத் திசுப்புற்று, மூளைக்கழலை, தண்டுவடப்பின்னல் காம்புப் புற்று, மூளை உட்படலப் புற்று, மூளைக்கழலை (நுண்நரம்பு மூளைக்கழலை, மூளைக்கட்டி), முளைய நரம்புப் புறணிப்புற்று]], மூளை நரம்புக்குழல் புற்று, முகுளப்புற்று, முதனிலை நரம்புப் புறணிப்புற்று
- நரம்புப் புறணிமுகைப் புற்றுகள்
- நரம்பு முடிச்சுப்புற்று, நரம்புமுகைப்புற்று, கருவக இயக்குதசைப் புற்று, விழித்திரைமுகைப் புற்று, புறநரம்புமுகைப் புற்று
- நரம்புப் புறணிப்புற்றுகள்
- நரம்பிழைக்கழலை, (நரம்பிழைக் கடும்புற்று, நரம்புநாரிழை வீக்கம்), சுவான்புற்று, நரம்புறைக்கட்டி, ஒலி நரம்புக்கழலை, நரம்புக்கழலை
மேற்கோள்கள்
- ↑ "Nervous Tissue | SEER Training". training.seer.cancer.gov. பார்க்கப்பட்ட நாள் 5 February 2020.
- ↑ "Peripheral Nervous System". Histology and Virtual Microscopy Learning Resource. University of Michigan Medical School. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
- ↑ Byrne, John; Roberts, James (2004). From Molecules to Networks. California: Academic Press. p. 1.
- ↑ 4.0 4.1 Swenson, Rand. "Review of Clinical and Functional Neuroscience". Dartmouth Medical School. Archived from the original on 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 30 January 2015.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Neurons and Support Cells". SIU Med. Southern Illinois University School of Medicine. Archived from the original on 17 ஏப்ரல் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 January 2015.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) பிழை காட்டு: Invalid<ref>
tag; name "cns and pns tissue" defined multiple times with different content - ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Waymire, Jack. "Organization of Cell Types". Neuroscience Online. The University of Texas Medical School. Archived from the original on 9 February 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ 7.0 7.1 7.2 Verkhratsky, Alexi; Butt, Arthur (2013). Glial Physiology and Pathaphysiology (PDF) (First ed.). Chinchester, UK: John Wiley & Sons. p. 76. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "Glial Physiology and Pathaphysiology" defined multiple times with different content - ↑ Brodal, Per (March 1, 2010). The Central Nervous System: Structure and Function (Fourth ed.). Oxford University Press. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199701049. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ Sofroniew, Michael; Vinters, Harry (2009). "Astrocytes: biology and pathology". Acta Neuropathol 119 (1): 7–35. doi:10.1007/s00401-009-0619-8. பப்மெட்:20012068.
- ↑ M, Hanani (2010). "Satellite glial cells in sympathetic and parasympathetic ganglia: in search of function". Brain Research Reviews 64 (2): 304–27. doi:10.1016/j.brainresrev.2010.04.009. பப்மெட்:20441777.
- ↑ Gershon, Michael; Rothman, Taube (1991). "Enteric Glia". Glia 4 (2): 195–204. doi:10.1002/glia.440040211. பப்மெட்:1827778.
- ↑ 12.0 12.1 Hof, Patrick R.; Kidd, Grahame; Defelipe, Javier; De Vellis, Jean; Gama Sosa, Miguel A.; Elder, Gregory A.; Trapp, Bruce D. (2013). Cellular Components of Nervous Tissue (PDF). Randolph-Macon College. pp. 41–59. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-12-385870-2.00003-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123858702. S2CID 14442865. Archived from the original (PDF) on 1 August 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
{cite book}
:|website=
ignored (help) பிழை காட்டு: Invalid<ref>
tag; name "components" defined multiple times with different content - ↑ "Nervous Tissue". Sidwell School. Archived from the original on 12 June 2016. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ Robertson, Sally (November 2010). "What is Grey Matter". News Medical. AZo Network. பார்க்கப்பட்ட நாள் 30 January 2015.