நாரெக் நகரின் கிரகோரி
நாரெக் நகரின் கிரகோரி | |
---|---|
திருச்சபையின் மறைவல்லுநர் | |
பிறப்பு | 951 Rshtunik, Vaspurakan, Bagratid Armenia |
இறப்பு | 1003 Narekavank, Vaspurakan, ஆர்மீனியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | ஆர்மீனிய அபோஸ்தலிக்க திருச்சபை, கத்தோலிக்க திருச்சபை |
திருவிழா | அக்டோபர் 13 |
நாரெக் நகரின் கிரகோரி (ஆர்மீனியம்: Գրիգոր Նարեկացի Grigor Narekatsi; 951 – 1003) அர்மேனியத் துறவியும், கவிஞரும், இறையியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். ஆர்மீனியவின் முதல் பெரும் கவிஞர் ஆவார்.[1] இவர் பல கவிதைகளை இயற்றியுள்ளார். இனிமைமிகு பாடல்களுக்கு மறைபொருள் நிறைந்த விளக்கம் அளித்துள்ளார். இவர் 977இல் புலம்பல் நூல் (Book of Lamentations) என்னும் பெயரில் இயற்றிய மன்றாட்டுத்தொகுப்பு, 95 பிரிவுகளைக்கொண்ட ஒரு பாடல் ஆகும். இது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஆர்மீனிய இலக்கியத்தில் மிகப்பெரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.
இவரை ஆர்மீனிய அபோஸ்தலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபை புனிதரென ஏற்கின்றது. 23 பெப்ரவரி 2015இல் திருத்தந்தை பிரான்சிசு இவரை மறைவல்லுநராக அறிவித்தார்.
மேற்கோள்கள்
- ↑ Shoemaker, M. Wesley (2013). Russia and The Commonwealth of Independent States 2013. Lanham: Rowman & Littlefield. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781475804911.