நிக்கொலா சார்கோசி
நிக்கொலா சார்கோசி Nicolas Sarkozy | |
---|---|
பிரெஞ்சு அதிபர் | |
பதவியில் மே 16 2007 – மே 15 2012 | |
பிரதமர் | பிரான்சுவா பிலோன் |
முன்னையவர் | ஜாக் சிராக் |
அண்டோராவின் இளவரசர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 16 2007 | |
தலைமை ஆளுநர் | பிலிப் மசோனி |
பிரதமர் | ஆல்பேர்ட் பிண்டா |
முன்னையவர் | ஜாக் சிராக் |
பிரான்சின் உள்ளூராட்சி அமைச்சர் | |
பதவியில் மே 31 2005 – மார்ச் 26 2007 | |
பிரதமர் | டொமினிக் டி வில்லெபின் |
முன்னையவர் | டொமினிக் டி வில்லெபின் |
பின்னவர் | பிரான்சுவா பரோயின் |
பதவியில் மே 7 2002 – மார்ச் 31 2004 | |
பிரதமர் | Jean-Pierre Raffarin |
முன்னையவர் | டானியல் வாய்லண்ட் |
பின்னவர் | டொமினிக் டி வில்லெபின் |
பிரான்சின் பொருளாதார அமைச்சர் | |
பதவியில் மார்ச் 31 2004 – நவம்பர் 28 2004 | |
பிரதமர் | Jean-Pierre Raffarin |
முன்னையவர் | பிரான்சிஸ் மேர் |
பின்னவர் | ஹெர்வே கேமார்ட் |
வரவு செலவுத் திட்ட அமைச்சர் | |
பதவியில் மார்ச் 29 1993 – மே 10 1995 | |
பிரதமர் | எடுவார்ட் பலடூர் |
முன்னையவர் | மைக்கல் கராசே |
பின்னவர் | none |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 சனவரி 1955 பாரிஸ், பிரான்ஸ் |
அரசியல் கட்சி | Union for a Popular Movement (UMP) (2002–) |
துணைவர்(கள்) | மரீ-டொமினிக் கூலியோலி (மணமுறிவு) செசிலியா சிகானர்-அல்பேனிஸ் (மணமுறிவு) கார்லா புரூனி |
வேலை | வழக்கறிஞர் |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
இணையத்தளம் | sarkozy.fr |
நிக்கொலா சார்கோசி (Nicolas Sarkozy, (IPA: [nikɔla saʁkɔzi] — ⓘ(முழுப்பெயர்:நிக்கொலா பால் ஸ்டெஃப்னெ சார்கோசி தெ நாகி-போக்சா) பிறப்பு: ஜனவரி 28, 1955 பிரான்சின் (23-வது) முன்னால் அதிபரும் அண்டோராவின் இளவரசரும் ஆவார். மே 16, 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
அதிபராக பொறுப்பேற்கும் முன்னர் பிரான்சின் யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட் கட்சியின் தலைவராக விளங்கினார். ஜாக் சிராக் ஆட்சியில் 2002 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகவும் பின்னர் 2004 -2005 ஆண்டுகளில் நிதி அமைச்சராகவும் 2005-2007 காலத்தில் மீண்டும் உள்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருந்தார். 1983 முதல்2002 வரை பிரான்சின் மிகுந்த செல்வம் கொழிக்கும் நகர்ப்புறமான நியுலி-சுர்-சீன் (Neuilly-sur-Seine) மேயராகவும் பணியாற்றியுள்ளார்.முந்தைய ராலி ஃபார் ரிப்ப்ளிக் கட்சி ஆட்சி புரிந்த பான்சுவா மித்தரோந்த் (François Mitterrand) அதிபராட்சியில் வரவுசெலவு அமைச்சராகவும் இருந்துள்ளார்.
பிரெஞ்சுப் பொருளாதாரத்திற்கு புத்துயிர் ஊட்ட சார்கோசி விரும்பினார்.[1][2][3] வேலை ஒழுங்கை மீட்கவும், சகிப்புத்தன்மையை வளர்க்கவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.[1] ஐக்கிய இராச்சியத்துடனான (entente cordiale)உறவையும் [4] ஐக்கிய அமெரிக்காவுடனான உறவையும்[5] வலுப்படுத்த உறுதி பூண்டிருந்தார்
பாரிசின் எலிசீ அரண்மனையில் 2 பிப்ரவரி 2008 அன்று கார்லா புரூனியுடன் காதல் திருமணம் புரிந்தார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Profile: Nicolas Sarkozy (BBC)
- ↑ Astier, Henri; What now for Nicolas Sarkozy?, BBC News, 16 May 2007
- ↑ Bennhold, Katrin; Sarkozy pledges quick action on French economy, International Herald Tribune, 7 May 2007
- ↑ David Byers (26 March 2008). "Nicolas Sarkozy calls for 'Franco-British brotherhood' as state visit begins". தி டைம்ஸ் (London: Times Online). http://www.timesonline.co.uk/tol/news/uk/article3624398.ece. பார்த்த நாள்: 26 March 2008.
- ↑ Anderson, John Ward and Molly Moore; "Sarkozy Wins, Vows to Restore Pride in France", Washington Post, 7 May 2007
வெளி இணைப்புகள்
- “Hosing Sarkozy" an article in the TLS by Sudhir Hazareesingh, November 28, 2007
- Interview after One Month in Office in Le Figaro, 07.06.2007 பரணிடப்பட்டது 2011-12-14 at the வந்தவழி இயந்திரம்