நிலாத் தண்ணீர்

1976 இல் உலூனா 24 நிலாவில் 118, 184 செமீ ஆழங்களில் எடுத்த மன்னடுக்கு படிவப் பதக்கூறுகளின் விரவிய எதிரொளிர்வுக் கதிர்நிரல். இது நீர் மூலக்கூறுகளின் சிறும 3, 5, 6 நுண்மீ(µm) இணைதிற(valence0-அதிர்வுப் பட்டைகளைக் காட்டுகிறது.
நிலாவின் காணாத பக்க இளம் மொத்தல்குழியின், சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள நாசாவின் நிலாக் கனிமவியல் வரைவி எடுத்த, படிமங்கள்
இந்தப் படிமம், இந்தியச் சந்திரயான் வட்டணைக்கல நாசா நிலாக் கனிமவியல் வரைவுக் (M3) கதிர்நிரல் அளவி எடுத்த, நிலாத் தென்முனை மேற்பரப்புப் பனிப்பரவல்(இடது), வடமுனை மேற்பரப்புப் பனிப்பரவல்(வலது) ஆகியவற்றைக் காட்டுகிறது

நிலாத் தண்ணீர் (Lunar water) என்பது நிலாவில் உள்ள தண்ணீர் ஆகும். சூரிய ஒளிபடும் நிலா மேற்பரப்பில் விரவிய நீர் மூலக்கூறுகள் நிலவுவதாக நாசாவின் சோஃபியா நோக்கீட்டகம் 2020 இல் கண்டுபிடித்துள்ளது.[1].படிப்படியாக, இந்த நீரின் ஆவி ஒளியாற் சிதைந்து, விண்வெளியில் நீரகத்தையும்(ஐதரசன்) உயிரகத்தையும்(ஆக்சிசன்) விடுவிக்கிறது. அறிவியலாளர்கள் நிலா முனைகளில் நிலையாக நிழலில் உள்ள தண்ணிய மொத்தல்குழிகளில் பனி வடிவில் நீர் உள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.[2] நீர் மூலக்கூறுகள் நிலா வளிமண்டலத்தில் மிக அருகலாகவே காணப்படுகின்றன.[3]

இருநீரக ஆக்சைடு எனும் நீரும்(H2O)]], ஐதராக்சில் குழு(-OH) சார்ந்த வேதிமங்களும், நிலாக் கனிமங்களில் ஐதரேட்டுகளாகவும் ஐதராக்சைடுகளாகவும் வேதியியலாகப் பிணைந்து உள்ளனவே தவிர, கட்டற்ற தண்ணீராகக் கிடைப்பதில்லை. இதுவும் நிலா மேற்பரப்பைப் பொறுத்தவரை, சான்றுகளின் அடிப்படையில், மிகவும் தாழ்செறிவிலேயே நிலவுகிறது.[4] உண்மையில், மேற்பரப்புப் பொருள் தன் புறப்பரப்பில் உறிஞ்சிய நீர் 1000 இல் 10 பங்கு அளவிலான சுவடுகளாகவே நிலவுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்