நிலைகாட்டி

நிலைகாட்டி (ஆங்கிலம்: Cursor) என்பது கணினித் திரை அல்லது ஏனைய காட்சிச் சாதனங்களுள் ஒன்றில் அமைவிடத்தைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும்.[1] விட்டு விட்டுத் தோன்றும் உரைக்காட்டியானது சில சந்தர்ப்பங்களில் விடுபடல் சுட்டுக்குறி என்றும் அழைக்கப்படும். அதே போல சுட்டி நிலைகாட்டியானது சுட்டி என அழைக்கப்படும்.[2]
உரைக்காட்டி
பெரும்பாலான கட்டளைக் கோட்டு இடைமுகங்களிலும் உரை திருத்திகளிலும் உரைக்காட்டியானது கீழ்க் கோடு, செவ்வகம், கிடைக் கோடு என்பனவற்றுள் ஏதேனுமொன்றால் காட்டப்படும். உரைக்காட்டியானது விட்டு விட்டுத் தோன்றக் கூடியதாகவோ நிலையாகவோ இருக்கும். பயனரால் இடப்படும் உரை உரைக்காட்டி தோன்றும் இடத்தில் இடப்படும்.
சுட்டி
புள்ளித் துணையுறுப்பின் (பெரும்பாலும் சுட்டியின்) அசைவுகளைத் திரையில் செயற்படுத்துவதற்குச் சுட்டி பயன்படுத்தப்படும்.[3] சுட்டி பல வகைப்படும்.[4] வெவ்வேறு இயங்குதளங்களில் வெவ்வேறு சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ நிலைகாட்டி (ஆங்கில மொழியில்)
- ↑ திருத்தம்: விசுவல் ஃபாக்ஸ்புரோ 8.0இல் கொரிய உள்ளிடு முறை திருத்தியிலிருந்து (ஐ. எம். இ.) மாற்றிய பின் விடுபடல் சுட்டுக்குறி வடிவம் ஒரு தடித்த செவ்வகமாகத் தோன்றுகிறது (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)" (PDF). Archived from the original (PDF) on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-02-20. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (ஆங்கில மொழியில்)]
- ↑ "இயல் 1. குநோமைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைத் திறன்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2012-02-17.