நுகர்வு இலத்திரனியல் கண்காட்சி
நுகர்வு இலத்திரனியல் கண்காட்சி Consumer Electronics Show | |
---|---|
நிகழ்நிலை | செயற்பாட்டில் |
வகை | நுகர்வு இலத்திரனியல் |
நிகழிடம் | லாஸ் வேகஸ் கன்வென்ஷன் சென்டர் |
அமைவிடம் | லாஸ் வேகஸ், நெவாடா |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
முதல் நிகழ்வு | 1967 |
அமைப்பாளர்(கள்) | நுகர்வு இலத்திரனியல் சங்கம் |
வந்தோர் எண்ணிக்கை | 140,000 |
இணையத்தளம் | cesweb.org |
பன்னாட்டு நுகர்வு இலத்திரனியல் கண்காட்சி (International Consumer Electronics Show, CES) ஒவ்வொரு ஆண்டும் சனவரியில் ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகஸ் நகரில் நடைபெறும் ஓர் முதன்மை வணிகக் கண்காட்சி ஆகும். பொதுமக்களுக்கு அணுக்கமில்லாத இந்தக் கண்காட்சியை நுகர்வு இலத்திரனியல் சங்கம் நடத்துகிறது. இங்கு புதிய கருவிகளைக் குறித்த அறிவிப்புகளும் வரவிருக்கும் பொருட்களின் முன்னோட்டமும் வழங்கப்படுகின்றன. 1979ஆம் ஆண்டுமுதல் 2003 வரை இயங்கிய கணினி வணிகர் கண்காட்சி (COMDEX) இரத்தான பிறகு இதன் முக்கியத்துவம் கூடியுள்ளது.
கண்காட்சி சிறப்புக் கூறுகள்
2004
நீலக்கதிர் வட்டு வடிவமைப்பைக் குறித்த முதல் அமெரிக்க பத்திரிகையாளர் கூட்டத்தை நீலக்கதிர் குழுமம் இங்குதான் நடத்தியது.[1]
2005
மைக்ரோசாப்ட் நிறுவனரும் தலைவருமான பில் கேட்ஸ் வழங்கிய தலைமை உரையின்போது விண்டோஸ் மீடியா சென்டரை அறிமுகப்படுத்துகையில் நீலத் தடங்கல் திரை தோன்றி சங்கடத்தில் ஆழ்ந்தார். [2]
சாம்சங் 102 இன்ச் பிளாஸ்மா தொலைக்காட்சியை காட்சிப்படுத்தியது.[3]
2006
உயர் வரையறு தொலைக்காட்சி பில்கேட்சின் தலைமை உரையின் மையக்கருத்தாக அமைந்திருந்தது[4]
2007
2008
2009
2010
2011
2012
இந்த ஆண்டின் கண்காட்சி சனவரி 10 முதல் சனவரி 13 வரை நடைபெறும். மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவே அந்த நிறுவனம் பங்கு கொள்ளும் கடைசி கண்காட்சி என அறிவித்துள்ளது.[5]
மேற்கோள்கள்
- ↑ "Blu-ray Disc and HD-DVD: The Bits at CES 2004". Thedigitalbits.com. 2004-01-08. Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
- ↑ "Ces 2005 - Microsoft Gaffes - Bill Gates And Remote Controll".
- ↑ John Spooner. "Samsung's big-screen plans for CES". news.com. CNET. Archived from the original on 2012-06-04. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
- ↑ Boutin, P, "Live Coverage of Bill Gates CES keynote". Engadget.com. January 4, 2006. Retrieved on January 10, 2007.
- ↑ Shaw, Frank. "2012 Marks Final CES Keynote for Microsoft". The Official Microsoft Blog. Microsoft. Archived from the original on 7 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 3 January 2012.
{cite web}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- CES 2011 Live Blogging பரணிடப்பட்டது 2011-02-18 at the வந்தவழி இயந்திரம்