நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி

2015 பெப்ரவர் 8 அன்று தொடுபுழாவில் நடைபெற்ற ஸ்ரீ மூகாம்பிகா மகாத்மிய கதகளி விழாவில் கம்சனாக நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி

நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி (Nelliyode Vasudevan Namboodiri, பிப்ரவரி 5, 1940 – ஆகத்து 2, 2021)[1] ஒரு கதகளி கலைஞர் ஆவார். தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து பாரம்பரிய கதகளி நடன-நாடகத்தின் "தீய சுவன்னா தாடி" ("சிவப்பு தாடி") பாத்திரங்களை இவர் துடிப்பாக சித்தரித்ததற்காக முதன்மையாகக் குறிப்பிட்டார்.

தொழில்

இவர், 1940 இல் எர்ணாகுளம் மாவட்டத்தில் சேரநல்லூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் 1957இல் கோட்டக்கல்லில் உள்ள பி.எஸ்.வி நாட்டியச் சங்கத்தில் சேர்ந்து, பத்மசிறீ வழெங்கடா குஞ்சு நாயரின் கீழ் பயிற்சி பெற்றார்.[2] கேரளாவின் கலாமண்டலத்தில் கற்பித்தல் படிப்புக்குப் பிறகு,[3] திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய உயர்நிலைப் பள்ளியில் கதகளி ஆசிரியராக சேர்ந்தார். தற்போது திருவனந்தபுரம் அருகே பூஜாப்புரத்தில் வசிக்கிறார்.[1]

விருதுகள்

இவர், சங்கீத நாடக அகாதமி, கேரள சங்கீத நாடக அகாடமி ஆகியவற்றிலிருந்து விருதுகளைப் பெற்றுள்ளார். 1976ஆம் ஆண்டில் ரிகட்டாவின் 'நாட்டியரத்னா' பட்டமும் தங்கப் பதக்கமும், 1988இல் துளசீவானா விருதும், கலாமண்டலம் விருதும், மத்திய அரசின் உதவித் தொகையும், ஓனமதுருத் கோயிலின் 'நாட்டியவிசராத்' பட்டமும் [1] 2013ஆம் ஆண்டிற்கான கேரள மாநில கதகளி பரிசும் பெற்றுள்ளார்.[4]

தொழில்

கதகளியில், இவர் முதன்மையாக காளி, திரிகரத்தன், துச்சாதனன், பாகாசுரன்,[5] வீரபத்ரன் போன்ற கொடூரமான கதாபாத்திரங்களில் நடித்தார்.[6] (சுதாமா) நக்ரதுண்டி, சிம்ஹிகா, சூர்ப்பணகை, இலங்கா லட்சுமி, கறுப்பு-தாடி கொண்ட காட்டாளன் போன்ற பேய் வேடங்களைத் தவிர குசேலன் போன்ற புனிதமான வேடங்களிலும் இவர் சிறந்து விளங்குகிறார். சமசுகிருதத்திலும், இந்து மத புராணங்களிலும் ஆழமான அறிவைப் பெற்றுள்ளார்.[7] கோயில் கலையான படாகம் எனும் கதை சொல்வதிலும் இவர் திறமையானவர்.[8] வில்லியம் சேக்சுபியரின் சோக நாடகமான கிங்லியரில் பைத்தியக்காரத்தனமான பாத்திரத்தை வகித்துள்ளார்.[9]

முக்கியத்துவம்

கதகளியில் கொடூரமான தாமச குணம் கொண்ட கதாபாத்திரங்களின் முன்னணிக் கலைஞராக நெல்லியோடு கருதப்படுகிறார்.[4][5] இந்த கதாபாத்திரங்களின் ஆழமான விளக்கத்தை இவர் முன்வைத்துள்ளா. மேலும், நாடகங்களில் அவற்றின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார்.[7]

மேற்கோள்கள்