நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு

நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு
संघीय समाजवादी फोरम, नेपाल
சுருக்கக்குறிFSFN
தலைவர்உபேந்திர யாதவ்
ராஜேந்திர சிரேஸ்தா
பொதுச் செயலாளர்ராம் சகாய் யாதவ்
தொடக்கம்சூன் 15, 2015 (2015-06-15)
இணைந்தவைநேபாள மாதேசி ஜன அதிகார மையம்
பெடரல் சோசலிஸ்ட் கட்சி
கஸ் சமபேசி கட்சி
தலைமையகம்தின்குனே, காட்மாண்டு, நேபாளம்
இளைஞர் அமைப்புஇளைஞர் கூட்டமைப்பு ஒன்றியம்
மாணவர் அணிசோசலிச மாணவர் கூட்டமைப்பு
மகளிர் அணிபெடரல் சோசலிச மகளிர் மையம்
கொள்கைஜனநாயக சோசலிசம்
சமய சார்பின்மை
முன்னேற்றம்
இனக்குழுக்களின் இணக்கம்
அரசியல் நிலைப்பாடுமைய-இடது - இடதுசாரி அரசியல்
நேபாள பிரதிநிதிகள் சபையில்
16 / 275
நேபாள தேசிய சபையில்
2 / 59
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
இணையதளம்
federalsocialist.org

நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு (Federal Socialist Forum, Nepal) (நேபாளி: संघीय समाजवादी फोरम, नेपाल; சுருக்கப் பெயர் FSFN) நேபாளத்தின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். நேபாளத்தின் தராய் பகுதிகளின் பல வட்டார கட்சிகளின் இணைப்பால் இக்கட்சி 15 சூன் 2015 அன்று நிறுவப்பட்டது.[1]உபேந்திர யாதவ் மற்றும் இராஜேந்திர சிரேஸ்தா ஆகியவர்கள் இக்கட்சியின் நிறுவனத் தலைவர்கள் ஆவார்.

2017 - 2018 தேர்தல்களில்

உள்ளாட்சித் தேர்தலில்

இக்கட்சி 2017 நேபாள உள்ளாட்சித் தேர்தலில், 34 மேயர் பதவிகளையும், 32 துணைமேயர் பதவிகளையும், 262 வார்டு தலைவர் பதவிகளையும், 1,111 வார்டு உறுப்பினர்கள் பதவிகளையும் கைப்பற்றியது. [2]

நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017

2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், நேபாள பிரதிநிதிகள் சபைக்கு இக்கட்சி 16 இடங்களை வென்று, தேசிய அளவில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.[3] The party was one of five parties to be declared "national parties".[4]மேலும் நேபாள தேசிய சபையில் இக்கட்சி இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

மாநில சட்டமன்றத் தேர்தல்களில்

2017 நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. [5]

நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் 29 இடங்களையும், நேபாள மாநில எண் 1ல் 3 இடங்களையும், நேபாள மாநில எண் 5ல் 5 இடங்களையும் கைப்பற்றியது. [6][7]

நேபாள மாநில எண் 2ன் சட்டமன்றத்தில் இக்கட்சி, நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. [8][9] நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது லால்பாபு ரவுத் நேபாள மாநில எண் 2ன் கூட்டணி அரசின் முதலமைச்சராக பதவியேற்றார்.[10][11]

கொள்கை

இக்கட்சி கூட்டாச்சித் தத்துவம் மற்றும் சோசலிசம் ஆகிய கருத்துக்களைக் கொண்டுள்ளது.

தேர்தல் திறன்

தேர்தல் தலைவர் வாக்குகள் இடங்கள் தர வரிசை ஆட்சி அமைத்தல்
நேபாள பிரதிநிதிகள் சபை உபேந்திர யாதவ் 470,201 4.93
16 / 275
5ம் இடம் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்- மாவோயிஸ்ட்

நேபாள மாநில எண் 2

நேபாள மாநில எண் 2ல் இக்கட்சி நேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளது.

பெயர் படம் பதவிக் காலம்
முகம்மது லால்பாபு ரவுத் 2018-தற்போது வரை

மேற்கோள்கள்

  1. "Three parties merge to become Sanghiya Samajbadi Forum-Nepal". Ekantipur. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
  2. "FSF-N wins mayor and NC deputy mayor in Birgunj" (in en-US). The Himalayan Times. 2017-09-27. https://thehimalayantimes.com/nepal/federal-socialist-forum-nepal-wins-mayor-nepali-congress-deputy-mayor-birgunj-metropolitan-city/. 
  3. "PR vote counting concludes" (in en). My Republica. http://www.myrepublica.com/news/32740/?categoryId=81. 
  4. "Only five parties crossed the threshold margin in PR votes - People's Review" (in en-US). People's Review. http://peoplesreview.com.np/2017/12/20/only-five-parties-crossed-the-threshold-margin-in-pr-votes/. 
  5. "FSFN, RJPN sign poll alliance deal in Province 2" (in en). My Republica. http://www.myrepublica.com/news/29894/. 
  6. "EC allots proportional seats of provincial vote" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-12-23/ec-allots-proportional-seats-of-provincial-vote.html. 
  7. "UML, NC and Maoists win 75, 72 and 35 provincial assembly PR seats" (in en). My Republica. http://www.myrepublica.com/news/33048/?categoryId=81. 
  8. "FSF-N and RJP-N agree to form coalition government in Province 2" (in en-US). The Himalayan Times. 2018-02-06. https://thehimalayantimes.com/nepal/fsf-n-rjp-n-agree-form-coalition-government-province-2/. 
  9. "Province 2: Chief Minister to FSFN, Speaker to RJPN" (in en). My Republica. http://www.myrepublica.com/news/36063/. 
  10. "Lalbabu Raut appointed as Chief Minister of Province-2" (in en). My Republica. http://www.myrepublica.com/news/36296/. 
  11. "Lalbabu Raut to be sworn in Province 2 CM today" (in en-US). The Himalayan Times. 2018-02-14. https://thehimalayantimes.com/nepal/lalbabu-raut-sworn-province-2-cm-today/.