பக்தபூர் மாவட்டம்
பக்தபூர் மாவட்டம் (Bhaktapur district) (நேபாளி: भक्तपुर जिल्लाⓘ; நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இது காத்மாண்டு சமவெளியில் பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் இது மிகவும் சிறிய மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகம் பக்தபூர் நகரம் ஆகும்.
பக்தபூர் மாவட்டம் 119 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,04,651 ஆகும்.[1] எழுத்தறிவு விகிதம் 81.68% ஆக உள்ளது.
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
நேபாளப் புவியியல்#தட்ப வெப்பம்[2] | உயரம் | பரப்பளவு % |
---|---|---|
Subtropics | 1,000 - 2,000 மீட்டர்கள் | 99.4% |
Temperate climate | 2,000 - 3,000 மீட்டர்கள் | 0.6% |
நகராட்சிகள்
- ஆனந்தலிங்கேஷ்வர் நகராட்சி
- பக்தபூர் நகராட்சி
- சங்குநாராயணன் நகராட்சி
- மத்தியப்பூர் திமி நகராட்சி
- மகாமஞ்சுஸ்ரீ – நாகர்கோட் நகராட்சி
- சூரியவிநாயக் நகராட்சி
மாவட்டப் புள்ளி விவரங்கள்
- மொத்த மக்கள் தொகை 304,651
- ஆண்கள் 154,884
- பெண்கள் 149,767
- பாலின விகிதம் 103.4
- வீடுகளின் எண்ணிக்கை 68,636
- மாவட்டப் பரப்பளவு 119 சதுர கிலோ மீட்டர்கள்
- மக்கள் தொகை அடர்த்தி 2,560[1][3]
சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள்
- பக்தபூர் நகர சதுக்கம்
- சங்கு நாராயணன் கோயில்
- கயிலாசநாத மகாதேவர் சிலை
- தௌமதி
- நாகர்கோட்
- சித்தா பொகாரி
- கைலாஷ்நாத் மகாதேவர் சிலை
- தோலேஷ்வர் மகாதேவர்
- பைலட் பாபா ஆசிரமம்
- காத்மாண்டு கேளிக்கை சமவெளி
- ஆனந்தலிங்கேஷ்வர் மகாதேவர்
படக்காட்சிகள்
-
பைவரவர் கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
-
தௌமதி சதுக்கம், பக்தபூர் நகர சதுக்கம்
-
தத்தாத்திரேயர் கோயில், பக்தபூர் நகர சதுக்கம்
இதனையும் காண்க
- பக்தபூர்
- காத்மாண்டு நகர சதுக்கம்
- அனுமன் தோகா நகர சதுக்கம்
- பதான் அரண்மனை சதுக்கம்
- நேபாளத்தின் மாவட்டங்கள்
- நேபாள மாநிலங்கள்
- நேபாள நகரங்கள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑ The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
- ↑ http://unstats.un.org/unsd/demographic/sources/census/2010_PHC/Nepal/Nepal-Census-2011-Vol1.pdf பரணிடப்பட்டது 2019-01-07 at the வந்தவழி இயந்திரம் page no 52