பஜ்ரகிட்டியபா

பஜ்ரகிட்டியபா (Bajrakitiyabha) இளவரசி நரேந்திர தேபியாவதி, இளவரசி ராஜசரினிசிரி பஜ்ரா' இளவரசி பா அல்லது பாட்டி என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.[1] 1978 டிசம்பர் 7 இல் பிறந்த இவர் தாய்லாந்தின் தாய் தூதர் மற்றும் இளவரசி ஆவார்., பூமிபால் மன்னர் மற்றும் தாய்லாந்தின் ராணி சிரிகிட் ஆகியோரின் முதல் பேரக்குழந்தை, மற்றும் மன்னன் மகா வஜிரலோங்க்கார்னின் முதல் மனைவி இளவரசி சோம்சவலிக்கு ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தையாகப் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

இளவரசி பஜ்ரகிட்டியபா தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது அனைத்து ரஜினி மகளிர் பள்ளியில் படித்தார். அவர் இங்கிலாந்துக்குச் சென்று முதலில் அஸ்காட்டில் உள்ள ஹீத்ஃபீல்ட் பள்ளியில் தனது இடைநிலைக் கல்வியை தொடங்கினார், பின்னர் சித்ரலாடா பள்ளியில் படிப்பை முடித்தார்.

2000 இல் இளவரசி பஜ்ரகிட்டியபா தம்மாசாட் பல்கலைக்கழகத்த்தில் 2000 இல் இளவரசி பஜ்ரகிட்டியபாசட்டங்களில் இளையர் பட்டம் பெற்றார். பின்னர் சுக்கோதாய் தம்மதிரத் பல்கலைக்கழகத்திலிருந்து சர்வதேச உறவுகளில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் 2002 இல் அவர் சட்டங்களில் முதுகலை கார்னெல் சட்டப் பள்ளியில் பெற்றார். மற்றும் 2005 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் அறிவியல் பட்டம் பெற்றார்.[1][2]

2012 மே 12 அன்று, இவருக்கு ஐ.ஐ.டி சிகாகோ-கென்ட் சட்டக் கல்லூரி எல்.எல் (டாக்டர் ஆஃப் லாஸ்) வழங்கி கௌரவித்தது.[3]

தொழில்

முனைவர் பட்டம் பெற்றதும் இளவரசி பஜ்ரகிட்டியபா தாய்லாந்திற்கு திரும்புவதற்கு முன்பு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தாய் நிரந்தர மிஷனில் சிறிது காலம் பணியாற்றினார். செப்டம்பர் 2006 இல், அவர் பாங்காக்கில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், தற்போது உடோன் தானி மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் துணை நிறுவனமான குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆணையத்தில் ஒரு தீர்மானத்தை சமர்ப்பிக்க தாய்லாந்தை தூண்டுவதில் இளவரசி முக்கிய பங்கு வகித்தார், இது ஆண்களுக்காக முக்கியமாக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பில் பெண்கள் சிறையில் அடைக்கப்படுவதை விவரிக்கிறது. அவரது முயற்சிகள் ஐ.நா. " பாங்காக் விதிகளை " ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தன,[5] நீதி அமைப்பில் பெண்கள் நடத்தப்படுவதைக் குறிக்கும் உலகளாவிய வழிகாட்டுதல்களின் முதல் தொகுப்பாகும் [6]

கர்ப்பிணி கைதிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து பெண்களுக்கு சென்றடைந்த "கம்லாங்ஜாய்" அல்லது "இன்ஸ்பயர்" திட்டத்தை பஜ்ரகிட்டியபா நடத்தி வருகிறார், மேலும் விடுதலையானவுடன் சமூகத்தில் மீண்டும் சேர பெண் மற்றும் கர்ப்பிணி கைதிகளுக்கு போதுமான உதவிகளை வழங்குவதாக உறுதியளிக்க விரும்புகிறார்.[7] சிறைக்கைதிகளின் சிகிச்சைக்கான 1955 ஆம் ஆண்டின் பெண் கைதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய விதிகள் மற்றும் பெண்கள் குற்றவாளிகளுக்கு காவலில்லாத நடவடிக்கைகள் ஆகியவற்றை முன்மொழிகின்ற "பெண் கைதிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல்" (ELFI) என்ற திட்டத்திலும் அவர் பணியாற்றி வருகிறார்.[8] 2012 முதல் 2014 வரை, அவர் நீதி அமைச்சக அலுவலகத்தில் ஒரு பதவியைப் பெறும் வரை, ஆஸ்திரியாவிற்கான தாய் தூதராக இருந்தார். 2014 அக்டோபர் 7 அன்று ஆஸ்திரியா குடியரசின் சேவைகளுக்கான விருதினைப் பெற்றார்.[9][10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Commencement 2005: Cell phones, cameras, congratulations, challenges and a princess". Cornell University News Service. 29 May 2005. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  2. CURRICULUM VITAE Her Royal Highness Princess Bajrakitiyabha Mahidol of Thailand- website Thailand Institute of Justice பரணிடப்பட்டது 20 திசம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்
  3. "Her Royal Highness Princess Bajrakitiyabha Mahidol of Thailand and ABA President-elect Laurel G. Bellows to address 2012 IIT Chicago-Kent graduates". Kentlaw.iit.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
  4. "Hrh Princess Bajrakitiyabha Will Serve As Attorney Of The Office Of The Attorney-general". Thaivisa.com. 21 August 2006. பார்க்கப்பட்ட நாள் 19 September 2011.
  5. "The Bangkok Rules; United Nations Rules for the Treatment of Women Prisoners and Non-custodial Measures for Women Offenders with their Commentary" (PDF). UN Office on Drugs and Crime (UNODC). பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  6. "Dialogue—Issue 43: Bangkok Rules Address the Plight of Women in Prison". Dui Hua. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.
  7. "History of Inspire". The Kamlangjai Project. Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
  8. Enhancing the lives of female inmates. UNODC (23 April 2009). Retrieved on 19 September 2011.
  9. [1] பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2016 at the வந்தவழி இயந்திரம்
  10. "Photographic image". Mfa.go.th. Archived from the original (JPG) on 2016-10-18. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.

வெளி இணைப்புகள்