பத்திக்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Collectie_NMvWereldculturen%2C_RV-847-81%2C_Batikpatroon%2C_%27Parang_sawut%27%2C_voor_1891.jpg/240px-Collectie_NMvWereldculturen%2C_RV-847-81%2C_Batikpatroon%2C_%27Parang_sawut%27%2C_voor_1891.jpg)
பத்திக் (மலாய்; ஆங்கிலம்: Batik) என்பது மெழுகைப் பயன்படுத்தி சாயமிடும் நுட்பத்தைக் குறிப்பிடுவதாகும். அந்த நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட துணிமணிகளை விவரிக்கவும் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
சாயம் ஒரு நீர்மக் கரைசலாகப் பயன்படுத்தப்படும் போது சாயக் கலவைகள் துணிக்குள் உறிஞ்சப் படுவது இயற்கையானது. அதைத் தடுக்க, அந்தத் துணிகளில் முதலில் மெழுகு பூசப்படுகிறது அல்லது மெழுகு முத்திரையிடப் படுகிறது.
அதன் மூலம் வண்ணக் கலவைகள் துணிக்குள் உறிஞ்சப் படுவது தடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் பத்திக் தயாரிக்கப் படுகிறது.[3]
பொது
பழங்காலத்திலிருந்தே மெழுகு சாயமிடுதல் நடைமுறையில் உள்ளது. எகிப்து, தெற்கு சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை போன்ற பல உலகப் பண்பாடுகளில் இந்த நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.[4]
இந்தோனேசியாவில் (குறிப்பாக ஜாவாவில்) உருவாக்கப்பட்ட இந்தச் சாயமிடும் நுட்பம் மிகவும் அதிநவீனமானது. 20- ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜாவானிய பத்திக் தயாரிப்பு பல மாற்றங்களுக்கு உள்ளானது. உற்பத்தித் திறனை அதிகரிக்க மெழுகின் மூலமாக முத்திரை பதிக்கும் முறைமை செயல்பாட்டிற்கு வந்தது.
இன்றைய நிலையில் இந்தோனேசியாவில் பல பட்டறைகள் மற்றும் கைவினைஞர்கள் பத்திக் துணி தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். பரந்த அளவிலான பத்திக் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Poerwadharminta, W.J.S. (1939). Baoesastra Djawa. Batavia: J.B Wolters'.
- ↑ Robson, Stuart; Wibisono, Singgih (2002). Javanese-English Dictionary. Hong Kong: Periplus Editions.
- ↑ "Batik". Cambridge. Archived from the original on 3 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.
- ↑ "Batik". Merriam-Webster. Archived from the original on 2 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2 January 2021.