பத்து கிக்கிர்

பத்து கிக்கிர்
Batu Kikir
நெகிரி செம்பிலான்
பத்து கிக்கிர் is located in மலேசியா
பத்து கிக்கிர்
      பத்து கிக்கிர்
ஆள்கூறுகள்: 2°50′N 102°19′E / 2.833°N 102.317°E / 2.833; 102.317
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம் செம்போல்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
72200
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06498000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

பத்து கிக்கிர் (மலாய்; ஆங்கிலம்: Batu Kikir; சீனம்: 峇都基基; ஜாவி: اتو كيكير) என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். [1]

காராக் - தம்பின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரம் பகாவ் மற்றும் கோலா பிலா பெரும் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. பத்து கிக்கிர் நகரம் கோலா பிலா நகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், பகாவ் நகரத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]

பொது

கடந்த காலத்தில், பத்து கிக்கிர் ஒரு சிறிய நகரமாக இருந்தது. அதன் முக்கிய சாலையின் ஓரத்தில் மரக்கடைகள் இருந்தன. பண்டிகைகள் காலம் நெருங்கும்போது, இந்த ​​நகரத்தின் வழியாகச் செல்லும் கார்கள் சாலையோரத்தில் நின்று அருகிலுள்ள கடைகளுக்குச் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆனால், இப்போது பத்து கிக்கிர் நகரத்திற்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது. பழைய நகரம் இடிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டன. ஒரு பேருந்து நிறுத்தமும் கட்டப்பட்டது. பிரதான சாலையின் அளவும் பெரிதாக்கப்பட்டது. இப்போது சாலையின் இடது புறத்திலும் வலது புறத்திலும் கடைகள் இல்லை. பிரதான சாலையின் இருந்து சற்று தொலைவில் ஒரு தனிப் பகுதிக்கு கடைகள் மாற்றப்பட்டுள்ளன.

கல்விமான் பண்டிதர் ஜாபா

மலேசியாவில் ஒரு புகழ்பெற்ற கல்விமான் பண்டிதர் ஜாபா (Pendita Za'aba - Zainal Abidin Ahmad) பிறந்த இடமாகவும் பத்து கிக்கிர் அறியப்படுகிறது. பண்டிதர் ஜாபா நாட்டின் முதல் மற்றும் ஒரே பண்டிதர் ஆகும். பண்டிதர் ஜாபாவின் நினைவாக, நெகிரி செம்பிலான் அரசாங்கத்தால் ஓர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

அருகாமை நகரங்கள்

மேற்கோள்கள்

  1. "BATU KIKIR – Ideajalan". பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.
  2. "Batu Kikir Travel Guide 2024 - Located in Negeri Sembilan, Malaysia, Batu Kikir is home to an impressive selection of attractions and experiences,". TRIP.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 January 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்