பனிக்கூரி

மரத்தில் தொங்கும் பனிக்கூரிகள்

ஏதாவது ஒர் பொருளிலிருந்து நீரானது துளித்துளியாகச் சிந்தும்போது அந்த நீர் உறையுமாயின், சிந்தும் நீர் ஈட்டி போன்ற, கூரான திண்ம தோற்றத்தைப் பெறும்போது, அது பனிக்கூரி (Icicle) என அழைக்கப்படும். பொதுவாக பனித்தூவி, அல்லது பனிக்கட்டி, சூரிய வெப்பத்தினாலோ அல்லது வேறு ஏதாவது வெப்ப மூலங்களிலிருந்து கிடைக்கும் வெப்பத்தினாலோ உருகி, நீராக திரவ நிலைக்கு வந்து, ஒரு பொருளிலிருந்து சிந்தும்போது, அதன் புறச் சூழலின் வெப்பநிலை நீரின் உறைநிலையைவிடக் (0 °C / 32 °F) குறைவாக இருக்குமாயின், சிந்தும் நீரானது மீண்டும் உறையும். அப்போது, மீண்டும் அது பனிக்கட்டியாகும். இவ்வாறு தொடர்ந்து நடைபெறும்போது, அந்தப் பனிக்கூரியானது நீண்டு வளர்ந்து செல்லும்.

இந்தப் பனிக்கூரிகள் ஆபத்தை விளைவிக்கக் கூடியவை[1]. இந்தப் பனிக்கூரிகள் உடைந்து விழுமாயின், அது விழும் இடத்திற்குக் கீழாக இருக்கும் பொருளுக்கோ, அல்லது உயிர்களுக்கு ஆபத்து விளையும். இவை மிகவும் கூராக இருப்பதனால் கத்தி போன்று காயம் ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கும். மேலும் இந்தப் பனிக்கூரிகள் மிகவும் பாரமானவையாக இருப்பதனால், இவை உருவாகும் பொருட்கள் பாரத்தால் உடையக் கூடிய நிலையை அடையலாம்.

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. "CityNews.ca - Dangerous Icicles A Concern As Pieces Fall From Above". Archived from the original on 2009-02-04. Retrieved 2012-08-25.