பன்னிரு ஒலிம்பியர்கள்

பன்னிரு ஒலிம்பியர்கள் எனப்படுவோர் கிரேக்கத் தொன்மவியலில் மிகவும் சிறப்பாகக் கருதப்படும், ஒலிம்பசு மலையின் உச்சியில் வாழ்ந்த பன்னிரண்டு கடவுளர் ஆவர். இவர்கள் டைட்டானோமாச்சி போரில் சியுசின் தலைமையில் டைட்டனக்ளுடன் போராடி அவர்களை வீழ்த்தினர்.

உறுப்பினர்கள்

ஒலிம்பியர்கள் பன்னிருவர் என்று கூறப்பட்டாலும்[1] அவற்றில் சில ஏற்றுக்கொள்ளத் தகுந்த வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இலக்கியம் மற்றும் கவிதைகளில் பன்னிரு ஒலிம்பியர்களாக சியுசு, எரா, பொசைடன், டிமிடர், ஏதெனா, அப்பல்லோ, ஆர்ட்டெமிசு, ஏரெசு, அப்ரோடிட், எப்பெசுடசு, எர்மெசு மற்றும் எசுடியா அல்லது டயோனிசசு ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர். [2] கிரேக்க கடவுள்களில் முக்கியமானவராகவும் சியுசின் சகோதரராகவும் ஏடிசு இருந்தாலும் பாதாளக் கடவுளாக இருந்ததால் அவர் பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவராக இருக்க இயலாது.

பன்னிரு ஒலிம்பியர்கள்

கிரேக்கம் உரோமை படம் குறிப்பு
சியுசு யூபிடர் கடவுள்களின் அரசன் மற்றும் ஒலிம்பிய மலையின் ஆளுநர்; வானம், மின்னல், இடி, சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் கடவுள். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகன். இடி, கழுகு, ஓக் மரம், செங்கோல் மற்றும் தராசு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். ஈராவின் கணவர் மற்றும் சகோதரர். பல காதலர்களைக் கொண்டவர், பெசைடன், ஏடிசு, டிமிடர் மற்றும் எசுடியாவின் சகோதரர்.
எரா சூனோ கடவுள்களின் அரசி, திருமணம் மற்றும் குடும்பம் ஆகியவற்றின் கடவுள். மயில், குயில், மற்றும் பசு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இளைய மகள். சியுசின் மனைவி மற்றும் சகோதரி. சியுசின் காதலர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளைப் பழிவாங்க நினைத்தவர்.
பொசைடன் நெப்டியூன் கடல், நிலநடுக்கம், மற்றும் கடல் அலைகள் ஆகியவற்றின் கடவுள். குதிரை, எருமை, டால்பின் மற்றும் திரிசூலம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இரண்டாவது மகன். இவரது மனைவி அம்பிட்ரைட். பல காதலர்களைக் கொண்டவர்.
டிமிடர் செரிசு செழிப்பு, விவசாயம், இயற்கை மற்றும் பருவ காலங்கள் ஆகியவற்றின் கடவுள். கோதுமை, தீப்பந்தம், கானுகோபியா மற்றும் பன்றி ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். குரோனசு மற்றும் ரியாவின் இரண்டாவது மகள்.
ஏதெனா மினெர்வா ஞானம், காரணம், அறிவார்ந்த செயல்கள், இலக்கியம், கைவினைப்பொருட்கள், அறிவியல், பாதுகாப்பு மற்றும் போர் உத்திகள் ஆகியவற்றின் கடவுள். ஆந்தை மற்றும் ஒலிவ மரம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் மெட்டிசின் மகள். தன் தந்தையின் தலையில் இருந்து போர்க்கவசத்துடன் பிறந்தவர்.
அப்பல்லோ அப்பல்லோ ஒளி, கணிப்பு, உத்வேகம், கவிதை, இசை, கலை, மருத்துவம் மற்றும் குணப்படுத்துதல் ஆகியவற்றின் கடவுள். கதிரவன், யாழ், அன்னப்பறவை மற்றும் எலி ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் லெடோவின் மகன். ஆர்ட்டெமிசின் இரட்டைச் சகோதரன்.
ஆர்ட்டெமிசு டயானா வேட்டை, கன்னித்தன்மை, வில்வித்தை, நிலவு மற்றும் விலங்குகள் ஆகியவற்றின் கடவுள். நிலவு, மான், வேட்டை நாய், பெண் கரடி, பாம்பு, சைப்ரசு மரம் மற்றும் வில்-அம்பு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் லெடோவின் மகள். அப்பல்லோவின் இரட்டைச் சகோதரி.
எரெசு மார்சு போர், வன்முறை மற்றும் இரத்தக்களரி ஆகியவற்றின் கடவுள். காட்டுப்பன்றி, பாம்பு, நாய், பிணந்தின்னிக் கழுகு, ஈட்டி மற்றும் கேடயம் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் ஈராவின் மகன்.
அப்ரோடிட் வீனசு காதல், அழகு மற்றும் காமம் ஆகியவற்றின் கடவுள். புறா, பறவை, ஆப்பிள், தேனீ, அன்னப்பறவை மற்றும் ரோசா மலர் ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். யுரேனசின் மகளாகக் கடல் நுரையில் இருந்து தோன்றியவர். கணவர் எப்பெசுடசு. இருப்பினும் அவரை விரும்பவில்லை. ஏரிசு மற்றும் அடோனிசு இவரின் விருப்பமான காதலர்கள் ஆவர்.
எப்பெசுடசு வல்கன் கொல்லர்கள் மற்றும் நெருப்பு ஆகியவற்றின் கடவுள். கடவுள்களின் ஆயுதங்களைச் செய்பவர். நெருப்பு, பட்டறை, கோடாரி, கழுதை, சுத்தி, குறடு மற்றும் காடை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் ஈராவின் மகன். மனைவி அப்ரோடிட். அவர் தன்னை விரும்பாததால் மணமுறிவு செய்துவிட்டு பிறகு அக்லெயாவை மணந்தவர்.
எர்மெசு மெர்க்குரி கடவுள்களின் தூதுவர்; வர்த்தகம், தகவல் தொடர்பு, எல்லைகள், சொற்பொழிவு, அரசதந்திரம், திருடர்கள் மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் கடவுள். கடுசியசு, இரண்டு பாம்புகள் சுற்றிய கோல், இறகுகள் கொண்ட தொப்பி மற்றும் காலணிகள், நாரை மற்றும் ஆமை ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் மையாவின் மகன். டயோனைசை அடுத்து இவரே இளைய ஒலிம்பியர்.

பொதுவாக கீழ்க்கண்ட இருவரில் ஒருவர் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கிரேக்கம் உரோமை Image Functions and Attributes
எசுடியா வெசுடா அடுப்பு மற்றும் கன்னித்தன்மை ஆகியவற்றின் கடவுள். மனிதராக வாழ எண்ணிய இவர் தன் இடத்தை டயோனைசசிற்கு விட்டுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார்.
டயோனிசசு பாச்சசு மதுபானம், கொண்டாட்டங்கள் மற்றும் பரவசம் ஆகியவற்றின் கடவுள்.முந்திரிக்கொடி, கோப்பை, புலி, சிறுத்தை, டால்பின் மற்றும் ஆடு ஆகியவற்றைப் புனிதச் சின்னங்களாகக் கொண்டவர். சியுசு மற்றும் செமிலியின் மகன். கிரீட்டன் இளவரசி அரியாட்னேவை மணந்தவர். இளைய ஒலிம்பிய கடவுளும் மனிதத் தாய்க்குப் பிறந்த ஒரே ஒலிம்பியக் கடவுளும் இவர்.

மேற்கோள்கள்

  1. Rutherford, p. 47; Burkert, p. 125; Ogden, [https://books.google.com/books? id=yOQtHNJJU9UC&pg=PA2, pp. 2–3].
  2. Hansen, p. 250; Burkert, pp. 125 ff.; Dowden, p. 43; Chadwick, p. 85; Müller, pp. 419 ff.; Pache, pp. 308 ff.; Thomas, p. 12; Shapiro, p. 362; Long, pp. 140–141; Morford, p. 113; Hard p. 80.