பப்பி லினக்சு

பப்பி லினக்ஸ்
Puppy Linux 1.0.5 running JWM with custom defaults
More screenshots of Puppy Linux
விருத்தியாளர் பாரி கொலர்
இயங்குதளக்
குடும்பம்
லினக்ஸ்
மூலநிரல் வடிவம் திறந்த மூலநிரல்
பிந்தைய நிலையான பதிப்பு 2.12 / நவம்பர் 18, 2006
கருனி வகை Monolithic kernel
அனுமதி Various
தற்போதைய நிலை விருத்தியில் உள்ளது
வலைத்தளம் www.puppylinux.org

பப்பி லினக்ஸ் இறுவட்டில் (CD) இல் இருந்தே இயங்கும் ஓர் லினக்ஸ் வழங்கல் ஆகும். இது பாரி காலரினால் ஆரம்பிக்கப்பட்டது. பப்பி மிகச்சிறிய நம்பகரமான இலகுவாகப் பாவிக்கக்கூடிய முழுமையான வசதியுடைய ஓர் லினக்ஸ் வழங்கலாகும். முழுமையான இய்ங்குதளமும் நினைவகத்தில் (ராம்) இல் இருந்தே இருந்தே இயங்கக் கூடியது. இயங்குதளம் ஆரம்பித்த்தும் நொப்பிக்ஸ் லினக்ஸ் பொன்றல்லாமல் இறுவட்டை அகற்றி விடலாம். இதில் மொஸிலா அப்பிள்கேசன் ஸ்சூட், அபிவேட், சொடிபோடி, ஜெனீயுமறிக், எக்ஸ்சைன் போன்ற பிரயோகங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வழங்கலானது ஆரம்பத்தில் இருந்தே தனியாக விருத்தி செய்யப்பட்டது. இது கீழ்வருவனவற்றில் இருந்து ஆரம்பிகக் கூடியது.

  • ஓர் யுஎஸ்பி பிளாஷ் டிரைவ்
  • சீடிரொம் (CD ROM)
  • ஜிப் டிரைவ்
  • ஓர் வன்வட்டு (ஹாட்டிஸ்க்) (ஹாட் பப்பி)
  • ஓர் கணினி வலையமைப்பு (தின் பப்பி)
  • ஓர் எமியூலேட்டர் (எமியூலேட்டர் பப்பி)
  • ஓர் ஆரம்பிக்கும் (பூட் - Boot) நெகிழ்வட்டு (புளப்பி - Floppy Disk)[1][2][3]

பப்பி லினக்ஸ் நிறுவல்கள் ஹாட்டிஸ்கில் அல்லது யுஎஸ்பி டிஸ்க், ஜிப் டிஸ்க் இல் நிறுவுவதை லைவ் சீடியில் இருந்தோ வேறு ஓர் நிறுவலில் இருந்தோ செய்துகொள்ளலாம்.

வரைகலை இடைமுகம்

பப்பி அண்மையில் விண்டோ மனேஜரில் இருந்து தனித்தியங்க ஆரம்பித்துள்ளது.

பப்பி லினக்ஸ் ஆரம்பிக்கும் போது ராமின் ஓர் பகுதியை ராம் டிஸ்காகப் பாவித்து அதில் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளும். இதற்கு ஆகக் குறைந்ததது 128 மெகாபைட் நினைவகமாவது தேவைப்படும் (நினைவகமானது வீடியோவுக்கும் பகிரப்பட்டு இருந்தால் பகிரப்பட்ட அளவானது 8 மெகாபைட் அளவு அல்லது அதனிலும் குறைவாக இருக்கவேண்டும். எவ்வாறெனினும் 48 மெகாபைட் ராம் உள்ள கணினிகளில் கூட இந்த லினக்ஸ் பாவிக்கப் படக்கூடியதே. இந்தமாதிரியான சந்தர்ங்களில் லினக்ஸ் இயங்குதளத்தில் பகுதிகளை வன்வட்டிலோ அல்லது இறுவட்டிலோ வைத்திருக்கலாம்.

பப்பி ஓரளவு முழுமையான லினக்ஸ் வழங்கல் இது லினக்ஸ் இயங்குதளத்தை ராம்டிஸ்க்கூடாக இயங்க வைக்கக் கூடியது. பப்பியின் வரைகலை இடைமுகம் வேகமாக வேலைசெய்யக் கூடியது. இந்த வழங்கலின் நோக்கமானது இலகுவாகவும் வேகமாக இயங்கும் லின்கஸ் வழங்கலொன்றை உருவாக்குவதே. பொதுவான வேலைகளை மேதாவித்தனமூடாக (விசாட் - Wizard) ஊடாகச் செய்யலாம்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "Puppy Time Line pre-Puppy Version 1 (2003-2005)". PuppyLinux. Archived from the original on 2013-05-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-06.
  2. "Puppy Linux FossaPup64 Puppy 9.5 Released". 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  3. "Github Puppy Linux Releases - Browse /NoblePup32_release at SourceForge.net". sourceforge.net. 2024-05-04. பார்க்கப்பட்ட நாள் 2024-05-05.