பயணித்தல்

ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு நகர்வது அல்லது இடம்மாறுவது பயணித்தல் ஆகும். மனிதர் அன்றாடம் செய்யும் செயற்பாடுகளில் பயணித்தலும் ஒன்று. பெருந்தூரங்களுக்கு கால் நடையாகவோ, வாகனங்கள் மூலமாகவோ பயணிக்கலாம். வீட்டிலிருந்து வேலைக்கு, கல்லூரிக்கு, கடைக்கு, கோயிலுக்கு, பிறர் வீடுகளுக்கு, மற்றும் பிற பல இடங்களுக்கும் அங்கிருந்து வீட்டுக்கும் மனிதர் பயணிப்பர். ஒரு நாளில் குறிப்பிடத்தக்க நேரம் பயணித்தலிலேயே செலவாகின்றது.