பரிதா யாசுமின்

பரிதா யாசுமின்
Farida Yasmin
கல்விமக்கள் தொடர்பியல் மற்றும் பத்திரிகையியல்
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிபத்திரிகையாளர்[1] மற்றும் பத்திர்ரிகை ஆசிரியர்[2]
செயற்பாட்டுக்
காலம்
1989-முதல்
பணியகம்தி டெய்லி இட்டெஃபாக்
அமைப்பு(கள்)வங்காளதேச தேசிய அச்சுக் கழகம்
அறியப்படுவதுதி டெய்லி இட்டெஃபாக் இதழின் மூத்த துணை ஆசிரியர் மற்றும் வங்காளதேச தேசிய அச்சுக் கழகத்தின் செயலாளர்[3][4]
பெற்றோர்சாக்காவார் ஒசைன் புயியன் (தந்தை) யகனாரா ஒசைன் (தாய்)
வாழ்க்கைத்
துணை
நயீம் நிசாம்
பிள்ளைகள்2 குழந்தைகள்
விருதுகள்வங்காளதேச மகிளா பரிசத் விருது
கையொப்பம்

பரிதா யாசுமின் (Farida Yasmin) ஒரு வங்காளதேச பத்திரிகையாளர் [5] ஆவார். யாதியா பத்திரிகை மன்றத்தின் தலைவராக இவர் உள்ளார். [6] தி டெய்லி இட்டெஃபக்கின் மூத்த பத்திரிகையாளர் என்றும் வங்காளதேசத்தின் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆகவும் இவர் வங்காளதேசத்தின் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பெண் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் முன்னாள் இணை செயலாளராகவும் பரிதா இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

பரிதா யாசுமின் வங்காள தேசத்தின் நரசிங்கடி மாவட்டத்தின் ராய்ப்புரா துணை மாவட்டத்தில் இவர் பிறந்தார். இவரது தந்தை சாகவார் ஒசைன் புய்யான் மற்றும் தாய் யகனாரா ஒசைன் என்பவர்களாவர். இவர் நரசிங்கடியின் சிப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். சிப்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வும், ஈடன் மொகிலா கல்லூரியில் மேல்நிலைப் பள்ளி தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்றார் . யாசுமின் டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். [7]

தொழில்

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் யாசுமின் வங்காளதேச தேசிய பத்திரிலையாளர் மன்றத்தின் இணை செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 2013 ஆம் ஆண்டு இவர் குற்றவாளி என்று அறிவித்த போர்க் குற்றவாளிகள் அப்துல் குவாடர் மொல்லா மற்றும் முகம்மது கமாருச்சமான் ஆகியோர் பத்திரிகையாளர் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், "ஒருமித்த முடிவு நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்னரே இந்த வெளியேற்ற முடிவு வந்தது" என்று யாசுமின் கூறினார். [8] அப்துல் குவாடர் மொல்லா என்பவர் இசுலாமிய மதத் தலைவர், எழுத்தாளர், அரசியல்வாதி என்ற பல்வேறு சிறப்புகளுக்கு உரியவராவார். முகமது கமாருச்சமானும் ஒரு பத்திரிகையாளராகவும் அரசியல் வாதியாகவும் செயல்பட்டவாராவார்.

தெற்காசிய பெண்கள் ஊடக மன்றத்தின் இணை செயலாளராகவும் மன்றத்தின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். வங்காளதேசத்தில் திருமண வயதை பெண்களுக்கு 18 ஆக வைத்திருப்பதற்காக இவர் பேசினார். [9]

2016 ஆம் ஆண்டில், டாக்கா பல்கலைக்கழக மக்கள் தொடர்பியல் மற்றும் பத்திரிகையியல் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக யாசுமின் நியமிக்கப்பட்டார். [10] 1 ஜனவரி 2017 அன்று யாதியா பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளராகயாசுமின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அறுபத்தி இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் ஒரு பெண் பத்திரிகையாளரை கழகத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். யாதியா பத்திரிகையாளர் மன்றத்தின் முதல் பெண் பொதுச் செயலாளர் என்ற சிறப்பு [11] யாசுமினுக்குக் கிடைத்தது. 18 டிசம்பர் 2018 அன்று யாதியா பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [12] வுமனை24 .காம் என்ற இணைய இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார். [13] 31 டிசம்பர் 2020 அன்று, இவர் யாதியா பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைப்பின் நிர்வாகக் குழுத் தேர்தலில் பரிதா யாசுமின் மற்றும் எலியாசு கான் ஆகியோர் தேசிய பத்திரிகையாள மன்றத்தின் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண். [14] என்ற சிறப்பும் இவருக்குக் கிடைத்தது.

தனிப்பட்ட வாழ்க்கை

யாசுமின் பத்திரிகையாளர் நையீம் நிசாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிசாம் வங்காளதேசத்தின் தினசரி பத்திரிகையான வங்காளதேச பிரட்டிதின் என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். [15]

வெளியிடப்பட்ட புத்தகங்கள்

  • பாசா ஆண்டோலோன் ஓ நாரி, 2005
  • உச்சஜல் நாரிர் முகமுகி, 2005
  • இதெகாசர் அய்னே பங்கபந்து, 2017

மேற்கோள்கள்

  1. "30 female garment workers honoured". Independent Bangladesh இம் மூலத்தில் இருந்து 19 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119055920/http://www.independent-bangladesh.com/200803163222/business/30-female-garment-workers-honoured.html. 
  2. "Social Afforestation Improves Environ, Eradicates Poverty". The New Nation. 17 July 2013 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180728002913/https://www.highbeam.com/doc/1P3-3021116621.html. 
  3. "News Details". Bangladesh Sangbad Sangstha இம் மூலத்தில் இருந்து 2016-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161118224217/http://bssnews.net/newsDetails.php?cat=0&id=480594$date=2015-03-24&dateCurrent=2015-03-27. 
  4. "Fruit festival at Press Club". http://websbd.net/news/fruit-festival-at-press-club/. 
  5. Singh, A. K. (10 January 2010) (in en). Media Power and Press Freedom. https://books.google.com/books?id=aHpipFAzBUAC&q=farida+yasmin+journalist&pg=PT103. பார்த்த நாள்: 18 November 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Farida, Elias elected as JPC president, secretary" (in en). https://www.newagebd.net/article/125875/farida-elias-elected-as-jpc-president-secretary. 
  7. "UNB 'Light & Lens' with Farida Yasmin". Dhaka Courier. https://www.dhakacourier.com.bd/news/Essays/tete-a-tete-with-farida-yasmin/680. 
  8. "Quader Mollah, Kamaruzzaman lose Press Club memberships" இம் மூலத்தில் இருந்து 18 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161118224253/http://sharemarket24.com/2013/02/13/quader-mollah-kamaruzzaman-lose-press-club-memberships/. 
  9. "Majority for retaining girls' marriage age at 18". Hawker இம் மூலத்தில் இருந்து 19 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119055548/http://www.hawker.com.bd/news_details.php?news_id=387140&news_category_id=21&val_lan=. 
  10. "DUMCJAA forms new committee". The Daily Star. http://www.thedailystar.net/city/dumcjaa-forms-new-committee-1261981. 
  11. "National Press Club gets Farida Yasmin as first female general secretary; Shafiqur elected president". bdnews24.com. https://bdnews24.com/bangladesh/2017/01/01/national-press-club-gets-farida-yasmin-as-first-female-general-secretary-shafiqur-elected-president. 
  12. "Saiful-Farida panel sweeps National Press Club polls". Dhaka Tribune. https://www.dhakatribune.com/media/2018/12/18/saiful-farida-panel-sweeps-national-press-club-polls. 
  13. "WomenEye24.com – Communication for equality" (in en-US). http://womeneye24.com/. 
  14. "Farida elected first Jatiya Press Club female president" (in English). 31 December 2020. http://unb.com.bd/category/Bangladesh/farida-elected-first-jatiya-press-club-female-president/62688. 
  15. সাপ্তাহিক, অন্যধারার কাগজ (January 2018) (in bn). Dhaka. பக். 21. 

புற இணைப்புகள்