பல்துறை விளையாட்டுப் போட்டிகள்

பல்துறை விளையாட்டுப்போட்டிகள் பல்வகை விளையாட்டுகளில், (பொதுவாக) பல நாடுகளின், அமைப்பு சார்ந்த விளையாட்டு வீரர்களின் அணிகள் தொடர்ந்து பல நாட்கள் போட்டியிடும் ஓர் அமைப்புச் சார்ந்த விளையாட்டுக்கள் நிகழ்வாகும். உலகளவில் முதல் பெரும் பல்துறை விளையாட்டுப்போட்டிகள் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும்.[1][2][3]

ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட மண்டல அளவிலான பல பல்துறை விளையாட்டுப்போட்டிகள் உருவாகியுள்ளன. விளையாட்டுப் போட்டிகள் ஓர் "நிகழ்நகரை" மையமாகக் கொண்டு பலநாட்கள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்நகர் ஒவ்வொரு முறையும் மாற்றப்படுகிறது. பங்குபெறும் நாடுகள் அல்லது அமைப்புகள் தங்கள் விளையாட்டு வீரர்களை தனிநபர் மற்றும் அணி விளையாட்டுகளுக்கு அனுப்புகின்றனர். முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற வீரர்களுக்கு முறையே தங்கம்,வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.இப்போட்டிகள் பொதுவாக நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன;சில ஆண்டுக்கொருமுறையும் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்