பல்நோக்கு நீர்த்தேக்கம்
பல்நோக்கு நீர்த்தேக்கம் (Multipurpose reservoir) என்பது ஒரு அணைக்குப் பின்புறமாக அமைந்துள்ள விரிவாக்கப்பட்ட ஏரியாகும், இது பொதுவாக புத்தம்புதிதான நீரை சேமிப்பதற்காகக் கட்டப்படுகிறது. இவ்வாறான நீர்த்தேக்கங்கள் பெரும்பாலும் நீர் மின் உற்பத்தியைச் செய்யவும் பயன்படுகிறது.
நீர்த்தேக்கங்கள், ஏற்கனவே உள்ள நீரின் போக்கை வெளியேற்றும் ஒரு நீர்வழியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன, நீரைச் சேமித்து வைப்பதற்காக அணையின் பகுதிகளை அடைக்கும் வகையில் தடுப்புச் சுவர்கள் அல்லது கரைகளை உருவாக்குவதன் மூலம் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்தச் சொல்லானது தொழில்நுட்பரீதியாக ஒரு தானியக்கமான குளிர்விக்கும் அமைப்பின் பெயரை, அதாவது ஒரு தானியக்கியின் குளிர்விக்கும் அமைப்பில் குளிர்விப்பான் நிரம்பி வழிவதைத் தடுத்து சேமிக்கும் ஒரு சொல்லிலிருந்து இந்தச் சொல் வருவிக்கப்பட்டுள்ளது.[1][2]
வகைகள்
பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம்
முழுவதுமாக மனித முயற்சியாலான தடுப்புச்சுவர்களுக்குப் பதிலாக இயற்கையாகவே அமைந்துள்ள பள்ளத்தாக்கின் இயற்கையான அமைப்பினைப் பயன்படுத்தி ஒரு அணைக்கட்டை உருவாக்கும் போது அது பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகிறது.
கடலோர நீர்த்தேக்கம்
இவ்வகை நீர்த்தேக்கங்கள் ஆறுகள் கடலுடன் சேரும் முகத்துவாரப் பகுதியில் கட்டப்படும் அணைகளால் உருவாகும் நீர்த்தேக்கங்கள் ஆகும். இவ்வகையான நீர்த்தேக்கங்கள் வெள்ளப்போக்கின் போது கடலில் கலந்து வீணாகும் நீரைச் சேமிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளன.[3]நிலத்தை அடிப்படையாகக் கொண்ட நீர்த்தேக்கக் கட்டுமானமானது கணிசமான கட்டமைப்பைக் கோருவதாக இருக்கும். ஆனால், கடலோர நீர்த்தேக்கம் அமைப்பதில் நிலமானது பெருமளவு நீரில் மூழ்கியிருப்பதால், பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் இவ்வகை நீர்த்தேக்கங்கள் விரும்பப்படுகின்றன.[4] ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அதிக எண்ணிக்கையிலான கடலோர நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன.
கரையோர நீர்த்தேக்கம்
கரையோர நீர்த்தேக்கங்கள், ஒரு ஆற்றிலிருந்தோ அல்லது மற்ற நீர்நிலைகளில் இருந்தோ உயரமான கரைகளுடன் இருக்கும் நீர்த்தேக்கத்திற்கு நீரின் போக்கைத் திருப்புவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன.இத்தகைய நீர்த்தேக்கங்கள் பொதுவாக பகுதியளவு நிலப்பகுதியை அகழ்வதன் மூலமும், பகுதியளவு சுற்றிலும் 6 கிமீ (4 மைல்கள்) சுற்றளவைத் தாண்டக்கூடிய ஒரு முழுமையான சுற்றுச்சுவர் அல்லது கரையைக் கட்டுவதன் மூலமும் உருவாக்கப்படுகின்றன.[5]
சேவை நீர்த்தேக்கம்
சேவை நீர்த்தேக்கங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோக இடத்திற்கு அருகில் சேமிக்கின்றன.[6] பல சேவை நீர்த்தேக்கங்கள் நீர்க் கோபுரங்களாக கட்டப்படுகின்றன, பெரும்பாலும் ஒப்பீட்டளவில் தட்டையாக இருக்கும் நிலப்பரப்புகளில் கற்காரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட தூண்களுடனான உயரமான கட்டமைப்புகளாக இவை அமைகின்றன. மற்ற சேவை நீர்த்தேக்கங்கள் நீர் சேமிப்புக் குளங்களாகவோ, தண்ணீர்த் தொட்டிகளாகவோ அல்லது சில நேரங்களில் குறிப்பாக அதிக மலைப்பாங்கான நிலப்பகுதியைக் கொண்ட நாடுகளில் முற்றிலும் நிலத்தடித் தொட்டிகளாகவோ இருக்கலாம்.
பொது
பல்நோக்கு நீர்த்தேக்கமானது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றின் சில அல்லது பல செயல்பாடுகளைச் செய்யும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது[7].
- தண்ணீர் விநியோகம்
- வெள்ளக் கட்டுப்பாடு
- மண் அரிப்பு
- சுற்றுச்சூழல் நிர்வகித்தல்
- நீர்மின்னாற்றல் உற்பத்தி
- படகுப்போக்குவரத்து
- பொழுதுபோக்கு
- நீர்ப்பாசனம்
- மீன் வளர்ப்பு மற்றும் மீன் பிடித்தல்
இதன் பல்நோக்கு தேவையைப் பார்க்கும்போது, நிர்வகிக்கும் முகவர்கள் தான் இந்த அத்தியாவசிய தேவையைச் சமப்படுத்தி வழங்கும் கடமையுள்ளவர்கள். எடுத்துக்காட்டாக நீர்மின் ஆற்றல் உற்பத்தியை கவனிக்கும் மேலாளர் ஏரியின் கொள்ளளவை எவ்வளவு அதிகமாக வைக்க முடியும் என்பதில் கவனமாக இருப்பார். ஏனென்றால் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் அவர்களின் மின்னாக்கிக்கு ஒரு எரிபொருளாக பயன்படும். ஆனால் வெள்ளக் கட்டுப்பாடுக்கு மேலாளராக இருப்பவர் தங்கள் ஏரியின் அளவை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்திருப்பார். ஏனென்றால் இருக்கும் இடம் மழைநீர் சேமிக்கப் பயன்படும்.
மேற்கோள்கள்
- ↑ "Coolant Reservoir". Canadian Tire.
- ↑ "Reservoir". education.nationalgeographic.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-21.
- ↑ "International Association for Coastal Reservoir Research". பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "Assessment of social and environmental impacts of coastal reservoirs (page 19)". Archived from the original on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ Bryn Philpott-Yinka Oyeyemi-John Sawyer (2009). "ICE Virtual Library: Queen Mary and King George V emergency draw down schemes". Dams and Reservoirs 19 (2): 79–84. doi:10.1680/dare.2009.19.2.79.
- ↑ "Open Learning – OpenLearn – Open University". பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
- ↑ "TVA Document" (PDF). Archived from the original (PDF) on 2008-07-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26.