பல்வள இயைபுப் பரவல்
பல்வள இயைபுப் பரவல் (Cosmopolitan distribution[1], exhibit cosmopolitanism) என்பது உயிர்ப்புவியியல் கலைச்சொல் ஆகும். ஒரு உயிரலகின் பரவலிடம், புவி முழுவதும் விரவி இருந்தால், அவ்வுயிரிலகின் பரவலிடத்தினைக் குறிப்பிட்ட இச்சொல்லைப் பயன்படுத்துவர். இத்தகைய வளரியல்பு உள்ள உயிரியானது, ஒரு குறிப்பிட்ட, தனக்கு உகந்த வாழிடங்களைத் தேர்ந்தெடுத்து, அச்சூழலுள்ள உலகின் அனைத்துக் கண்டங்களிலும், நாடுகளிலும் பரவி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் இயல்புடையதாகத் திகழ்கிறது. இதற்கு எதிராக உள்ள உயிரலகினை என்பது புவியின் குறிப்பிட்ட வாழிடத்தில், குறிப்பிட்ட வாழிடச் சூழலியலில் வாழும் தன்மையுயைடயது. அதனை அகணிய உயிரி என்கிறோம். எனவே, “பல்வள இயைபுப் பரவல்” என்ற வாழிடத்தின் மீதான கலைச்சொல்லும், “அகணிய உயிரி” என்ற சொல்லும் எதிர் எதிர் தன்மைகளைக் கொண்டதாகும்.
தகுதி
“பல்வள இயைபுப் பரவல்” என்று குறிப்பிடும் போது, "பொருத்தமற்ற வாழிடம்" என்பது குறிக்கப்படுகிறது. அது குறித்த முன்னறிவிப்பு யாதெனில், பெரும்பாலான நேரங்களில் வட துருவம், தென் துருவம் ஆகிய துருவப் பகுதிகள், மிக உயர்மட்ட நிலப்பகுதிகள், பெருங்கடல்கள், பாலைவனங்கள், சிறிய அல்லது தனித்து இருக்கும் தீவுகள் ஆகியன அடங்காத வாழிடங்களையேக் குறிக்கிறது.[2]
இத்தகு வாழிட உயிரிகள்
- ஓர்க்கா திமிங்கலம் என்பது இந்த வாழிட கலைச்சொல்லால் குறிக்கப்பட்டாலும், இது ஆர்டிக் பெருங்கடல் முதல் அன்டார்டிக் பெருங்கடல் வரை உலகின் பெரும்பாலான கடற்பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. அதனால், இச்சொல் நிலப் பகுதிகளைக் குறிப்பதாக முடிவெடுத்தல் கூடாது.
- வீட்டு ஈ, இந்த வாழிட வகையானது என்றாலும், இது ஓர்க்கா திமிங்கலத்தின் வாழிடங்களில் வாழ்வதில்லை. இருப்பினும், இவ்வகையின் கீழ் வகைப்படுத்தப் படுகிறது.[3]
- அபுதிலோன் தியோஃப்ராசுடி போன்று இன்னும் பல தாவரங்களைப் பொருத்தவரை, உலகின் பெரும்பாலான நிலப்பகுதிகளில் இவை பரவியிருந்தால், அதனை விவரிக்கும் போது, இத்தாவரம் “பல்வள இயைபுப் பரவல்” உடையது என்கிறோம்.
மேற்கோள்கள்
- ↑ oxfordreference
- ↑ Encyclopedia of Ecology and Environmental Management. John Wiley & Sons. 15 July 2009. p. 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4443-1324-6.
- ↑ Richard C. Russell; Domenico Otranto; Richard L. Wall (2013). The Encyclopedia of Medical and Veterinary Entomology. CABI. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78064-037-2.