பவர்புக் 100

பவர்புக் 100
PowerBook 100
பவர்புக் 100
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
வகைமடிக்கணினி
வெளியீடு தேதிஅக்டோபர் 21, 1991
அறிமுக விலைஅமெரிக்க டாலர் 2,300
நிறுத்தம்செப்டம்பர் 3, 1992
இயங்கு தளம்சிஸ்டம் 6.0.8L
7.0.1–7.5.5
நுண்செயலிமோடோரோலா 68000 16  மெகாஹெர்ட்ஸ்
நினைவு அளவு2 to 8 எம்பி

பவர்புக் 100 (PowerBook 100) ஓர் கையடக்க கணினி ஆகும். தனி நபர் கணினி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தினால் அக்டோபர் 21, 1991 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அப்போதைய பெறுமதியாக 2300 அமெரிக்க டொலர் ஆகும். இதன் மையச் செயலக வேகம் முன்னைய மசிண்டோஷ் கையடக்க கணினியை ஒத்தது. இது மோடோரோல 6800016- MHz செயலாக்கி , 2-8 எம்.பி நினைவகம் , 9-இன்ச் (23 செ.மீ) ஒரே நிறமுடைய திரவப் படிகக் காட்சி யும் 640 × 400 படவணு பிரிதிறனையும், சட்டகம் (system) 7.0.1 இயக்கு தளத்தையும் கொண்டது. ஆனால் இதில் மென் தட்டு உபயோகிக்க முடியாது .

ஆப்பிள் நிறுவன நிறைவேற்று அதிகாரியான ஜான் சிகில்லே பவர்புக் திட்டத்தை 1990 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இதற்காக ஒரு மில்லியன் அமெரிக்கா டொலர் செலவளித்தார். இருப்பினும் இதன் வெற்றி காரணமாக சுமார் ஒரு வருடத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது. சோனி நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பவர்புக்100 தயாரித்தது. பவர்புக்100 இன் உற்பத்தி செப்டம்பர் 3, 1992 அன்று நிறுத்தப்பட்டது. அதற்பு பதிலாக பவர்புக்145 மற்றும் பவர்பூக் டுஒ ஆகிய தயாரிப்புகள் அறிமுகபடுத்தப்பட்டன. பவர்பூக்100 ஆனது பலமுறை வடிவமைப்புக்கான பாராட்டை பெற்றது. கணினி உலகில் இதற்கு தனி இடம் உண்டு. 2006 ஆம் ஆண்டு சிறந்த கணினிகள் வரிசையில் பத்தாவது இடத்தை பெற்றது. அத்துடன் அமெரிக்க சஞ்சிகையான மொபைல் பிசி ஆல் 2005 ஆம் ஆண்டு சிறந்த கருவியாகத் தேர்ந்து எடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்