பாக்கித்தான் முன்மொழிவு

இலாகூரில் அகில இந்திய முசுலிம் லீக் செயற்குழு அமர்வில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம் தலைவர்கள்

இலாகூர் முன்மொழிவு (Lahore Resolution, உருது: قرارداد لاہور‎, கறார்டாடு-இ-இலாகூர்; வங்காளம்: লাহোর প্রস্তাব, லாகோர் பிரஸ்தாபு), 1940ஆம் ஆண்டில் மார்ச் 22-24 நாட்களில் இலாகூரில் மூன்று நாட்கள் நடந்த அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த வங்காளப் புலி ஏ.கே. ஃபசுலுல் ஹக் முன்மொழிந்த முறைசார் அரசியல் அறிக்கையாகும். இதன் முக்கியக் கூறு பிரித்தானிய இந்தியாவில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு, கிழக்குப் பகுதிகளில் "தனி மாநிலங்களை" உருவாக்க வேண்டும்; இந்த மாநிலக் குழுக்களுக்கு தன்னாட்சியும் இறைமையும் வழங்கப்பட வேண்டும்.[1][2] இந்த முன்மொழிவு பின்னர் தனியான, ஒரே நாடாக பாக்கித்தானைக் கோருவதற்கு காரணமாக அமைந்தது.[3]

"பாக்கித்தான்" என்ற பெயரை சவுத்திரி ரகமத் அலி 1933இல் பாக்கித்தான் சாற்றுரையில்[4] முன்மொழிந்திருந்தபோதும், ஏ.கே. ஃபசுலுல் ஹக்கும் முகமது ஜின்னாவும் மற்ற முசுலிம் தலைவர்களும் இந்துமுஸ்லிம் ஒற்றுமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.[5] இருப்பினும், பிரித்தானியரின் தூண்டுதல்களாலும் இந்துக்களிடையே எழுந்த நம்பிக்கையின்மையாலும் அரசியல் நிலை கொந்தளித்து தனிநாடு கோரிக்கை வலுத்தது.[6]

மேற்சான்றுகள்

  1. "North Western and Eastern Zones of British India should be grouped to constitute ‘independent states’ in which the constituent units should be autonomous and sovereign"- Lahore Resolution. [1]
  2. "Do we know anything about Lahore Resolution?". Alarabiya.net. March 24, 2009. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் June 2, 2013. {cite web}: Check date values in: |archive-date= (help)
  3. Christoph Jaffrelot (Ed.) (2005), A History of Pakistan and Its Origins, Anthem Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84331-149-2
  4. Choudhary Rahmat Ali, (1933), Now or Never; Are We to Live or Perish Forever?, pamphlet, published January 28. (Rehmat Ali at the time was an undergraduate at the கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்)
  5. Ian Talbot (1999), Pakistan: a modern history, St. Martin's Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-21606-8
  6. Reginald Coupland (1943), Indian Politics (1936–1942), Oxford university press, London

வெளி இணைப்புகள்