பாக்தாத் திருடன்
பாக்தாத் திருடன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் சதேர்ன் மூவீஸ் |
கதை | ஏ. எஸ். முத்து |
இசை | ஜி. கோவிந்தராயுலு நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ராமச்சந்திரன் வைஜெயந்திமாலா டி. எஸ். பாலையா டி. ஆர். ராமச்சந்திரன் நம்பியார் அசோகன் எம். என். ராஜம் சந்தியா ஹெலன் பத்மினி பிரியதர்சினி |
வெளியீடு | மே 6, 1960 |
நீளம் | 16721 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாக்தாத் திருடன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
திரைக்கதை
துணைத் தளபதி கையூமின் (அசோகன்) வஞ்சகம் காரணமாக நாட்டின் அரசனும் அரசியும் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பச்சிளம் குழந்தையான அவர்களின் மகன் அபு ஒரு பசுவுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, பசுக்கூட்டத்துடன் கலந்து தப்ப வைக்கப்படுகிறான். திருடர் கூட்டமொன்று குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்கிறார்கள். நாளைடைவில் அபு வளர்ந்து திருடர் கூட்டத்தின் தலைவனாகிறான். அபு (எம். ஜி. ஆர்) இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறான்.
போலி அரசன் (டி. எஸ். பாலையா) கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறான். போலி அரசனுக்கும் போலி அரசிக்கும் (சந்தியா), சுபேரா (எம். என். ராஜம்) என்ற மகள் இருக்கிறாள். போலி இளவரசர் ஹைதர் (எம். என். நம்பியார்).
அரசனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கும் தன் கூட்டத்தினருக்கும் மகிழ்ச்சி இல்லை என சூளுரைக்கிறான் அபு.
அடிமைப் பெண்ணான ஜெரீனாவை (வைஜெயந்திமாலா) அடிமைத் தளையிலிருந்து மீட்கிறான் அபு.
எடுத்துக்கொண்ட சபதத்தை முதல் ஆளாக மீறி ஜெரீனாவை அபு திருமணம் செய்கிறான்.
நண்பர்களை சமாதானப்படுத்தி நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டி, பல போராட்டங்கள், சமயோசித திட்டங்கள் மூலம் கொடுங்கோல் அரசனையும் துரோகி தளபதியையும் போலி இளவரசனையும் வென்று உரிமையை நிலை நாட்டுகிறான் அபு.[1]
நடிகர்கள்
எம். ஜி. இராமச்சந்திரன் - அபு
வைஜெயந்திமாலா - ஜெரினா
டி. எஸ். பாலையா - போலி அரசன்
ஏ. சந்தியா - போலி அரசி
எம். என். ராஜம் - இளவரசி சுபேரா
எம். என். நம்பியார் - போலி இளவரசர் ஹைதர்
எஸ். ஏ. அசோகன் - வஞ்சக தளபதி கையூம்
டி. ஆர். இராமச்சந்திரன் - அபுவின் தோழன்
பத்மினி பிரியதர்சினி
எஸ். என். லட்சுமி
எம். எஸ். எஸ். பாக்கியம்
கே. எஸ். அங்கமுத்து
நடனம்
கோபி கிருஷ்ணா
ஹெலன்
பத்மினி
லலிதா
ராகினி [2]
தயாரிப்புக் குழு
தயாரிப்பாளர்: டி. பி. சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம்: சதர்ன் மூவிஸ்
இயக்குநர்: டி. பி. சுந்தரம்
திரைக்கதை, வசனம்: ஏ. எஸ். முத்து
இசை: ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
பாடல்கள்: ஏ. மருதகாசி
கலை: ராஜு
படத்தொகுப்பு: ஜி. டி. ஜோஷி
படப்பிடிப்பு: எம். கிருஷ்ணசுவாமி
நடனம்: ஆர். கிருஷ்ணராஜ், பி. சோகன்லால், ஜெயசங்கர், வி. எஸ். முத்துசாமி பிள்ளை
சண்டைப் பயிற்சி: ஆர். என். நம்பியார்
ஒலிப்பதிவு இயக்குநர்: சி. பி. கன்னியப்பன்[2]
தயாரிப்பு விபரம்
மேனாள் கோல்டன் ஸ்டூடியோ அதிபர் நாயுடு பாக்தாத் திருடன் படத்துக்கான நிதியைக் கொடுத்தார். எம். ஜி. ஆர். ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாக 'செட்' போட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஒரு காட்சிக்கு 'செட்' போட ₹30, 000 செலவாயிற்று. இந்த ரீதியில் படம் எடுத்து முடிய ₹5 லட்சம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. இதற்கு மேலும் ₹2 லட்சம் செலவிட வேண்டும் என எம். ஜி. ஆர். சொன்னபோது நாயுடுவுக்கு பயம் ஏற்பட்டது. [3]
எம். ஜி. ஆர். வைஜெயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் இதுவாகும். படம் படத்தொகுப்பு செய்யப்பட்ட போது எம். ஜி. ஆர். உடனிருந்தார். "(வைஜெயந்திமாலாவின்) அசைவுகள் சீராக இருந்ததால் படத்தொகுப்பு செய்வது சுலபமாக இருந்தது" என எம். ஜி. ஆர். குறிப்பிட்டார் என வைஜெயந்திமாலா தெரிவித்தார்.[4] இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த எஸ். என். லட்சுமி ஒரு சந்தர்ப்பத்தில் 'டூப்' போடாமலேயே புலியுடன் மோத வேண்டி ஏற்பட்டது. "இந்தப் படத்தின் கதாநாயகன் நானா அல்லது இந்த இளம் பெண்ணா?" என எம். ஜி. ஆர். வேடிக்கையாகக் கேட்டாராம்.[5]
பாடல்கள்
பாக்தாத் திருடன் படத்துக்கு இசையமைத்தவர் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு. அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஏ. மருதகாசி. பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, ஜிக்கி, பி. சுசீலா, கே. ஜமுனாராணி ஆகியோர்.[6]
வரிசை எண். | பாடல் | பாடகர்கள் | கால அளவு |
---|---|---|---|
1 | அழகு லைலா | ஏ. பி. கோமளா | 02:28 |
2 | எந்தன் கதை இதானா | பி. சுசீலா | 02:51 |
3 | வெற்றி கொள்ளும் வாளேந்தி | 05:24 | |
4 | கண்ணீரின் வெள்ளம் இங்கே ஓடுதையா | 03:16 | |
5 | பூத்துக் குலுங்குதே .. சொக்குதே மனம் | 03:30 | |
6 | புள் புள் பார்வையிலே | கே. ஜமுனாராணி | 02:12 |
7 | சிரிச்சா போதும் | குழுவினருடன் ஜிக்கி | 02:44 |
8 | உண்மை அன்பின் | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 02:18 |
9 | யாருக்கு டிமிக்கி | டி. எம். சௌந்தரராஜன் | 02:34 |
மேற்கோள்கள்
- ↑ "திரையோவியம் : பாக்தாத் திருடன்". பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
- ↑ 2.0 2.1 திரைப்பட தலைப்புக் காட்சி
- ↑ "Kannadasan's Minor Book(let) on MGR Random notes". பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
{cite web}
: line feed character in|title=
at position 36 (help) - ↑ "Screen, stage and beyond". The Hindu (Chennai, India). 2007-01-15. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/screen-stage-and-beyond/article2239100.ece. பார்த்த நாள்: 5 Octorber 2016.
- ↑ Raman, Mohan V (2012-02-20). "An actor par excellence". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/features/cinema/an-actor-par-excellence/article2912927.ece. பார்த்த நாள்: 5 October 2016.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 204.