பாமியான் முற்றுகை (1221)
பாமியான் முற்றுகை என்பது செங்கிஸ் கான்[1] தலைமையிலான மங்கோலியப் பேரரசு ஆப்கானித்தானின் தற்போதைய பட்டணமான பாமியானில் நடத்திய முற்றுகைப் போராகும்.
பின்புலம்
ஆப்கானித்தானில் புதிதாக இராணுவத்தை சேர்த்துக் கொண்டிருந்த குவாரசமிய அரசமரபின் கடைசி ஆட்சியாளரான மிங்புர்னுவை மங்கோலியர்கள் துரத்தியபோது இந்த முற்றுகை நடைபெற்றது.[2]
முற்றுகை
இந்த யுத்தத்தின் போது முற்றுகையிடப்பட்டிருந்த மதில் சுவற்றில் இருந்து வந்த அம்பு தாக்கி சகதை கானின் மகனும், செங்கிஸ் கானின் விருப்பத்திற்குரிய பேரனுமாகிய முத்துகன் கொல்லப்பட்டான்.[3][4][5] அவனது இறப்பு, இந்த முற்றுகையின் போது தனது இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் இறந்தது மற்றும் தானும் ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்தது ஆகியவை செங்கிஸ் கானைக் கோபப்பட வைத்தது. பாமியான் கைப்பற்றப்பட்ட பிறகு அந்த நகரை முழுவதுமாக அழித்து, அந்த நகர் மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களை மொத்தமாகக் கொல்லச் செங்கிஸ் கான் உத்தரவிட்டார். மங்கோலியர்கள் இந்நகரைக் "கவலைகளின் நகரம்" (அதாவது "துயர நகரம்"[5]) என்று அழைக்கும் அளவிற்கு அவர்கள் ஏற்படுத்திய அழிவானது முழுமையுடையதாக இருந்தது. இந்த நகரின் மற்றொரு பெயரானது கொல்லப்பட்ட மக்களின் கூக்குரலைக் குறிக்கும் விதமாக "சத்த (அல்லது அலறல்) நகரம்" ஆகும்.[1][2]
விளைவுகள்
இந்த முற்றுகைக்குப் பிறகு செங்கிஸ் கான் இந்தியாவிற்கு தப்பி ஓடிய மிங்புர்னுவைத் துரத்தினார்.[2]
ஒரு பொதுவான நம்பிக்கை மற்றும் பெரும்பாலான கசாரா மக்களும் நம்புவது யாதெனில்,[6] உள்ளூர் ஆப்கானிய மக்கள் முழுவதுமாகக் கொல்லப்பட்ட பின்னர் இந்தப் பகுதியைப் பாதுகாக்கத் தனது மங்கோலிய வீரர்கள் மற்றும் அவர்களது அடிமைப் பெண்களை இப்பகுதியில் செங்கிஸ் கான் வாழ வைத்தார் என்பதாகும். அந்த மக்களே தற்போதைய கசாரா மக்களின் முன்னோர்கள் ஆவர். "கசாரா" என்ற சொல்லானது மங்கோலிய இராணுவப் பிரிவான 1,000 வீரர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பாரசீகச் சொல்லான "யக் கசர்" ("ஓர் ஆயிரம்") என்ற சொல்லிலிருந்து வந்திருப்பதற்கே பெரும்பாலான வாய்ப்புள்ளது.[7]
மேலும் காண்க
உசாத்துணை
- ↑ 1.0 1.1 A Historical Atlas of Afghanistan, by Amy Romano, p.25.
- ↑ 2.0 2.1 2.2 Dictionary of Wars, by George C. Kohn, p.55.
- ↑ Jack Weatherford (2005). Genghis Khan and the Making of the Modern World. Crown/Archetype. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780307237811.
- ↑ Brendan Cassar; Sara Noshadi (2015). Keeping history alive: safeguarding cultural heritage in post-conflict Afghanistan. UNESCO Publishing. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231000645.
- ↑ 5.0 5.1 Anwarul Haque Haqqi, Chingiz Khan: The Life and Legacy of an Empire Builder, (Primus Books, 2010), 152.
- ↑ James B. Minahan (10 Feb 2014). Ethnic Groups of North, East, and Central Asia: An Encyclopedia. ABC-CLIO. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610690188.
Many Hazara believe that their ancestors who entered the region as part of the armies of Genghis Khan in the 13th century were Mongol soldiers and their slave women who settled to garrison the highlands in central Afghanistan following the 1221 siege of the city of Bamiyan.
- ↑ Ratchnevsky, Paul. Genghis Khan His Life and Legacy. Cambridge and Oxford U.K.: Blackwell, 1991, p.164.