பாலி கடல்
பாலி கடல் Bali Sea Laut Bali Bali | |
---|---|
![]() லொம்போக் அருகே பாலி கடல் | |
ஆள்கூறுகள் | 7°30′S 115°30′E / 7.500°S 115.500°E |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | இந்தோனேசியா |
மேற்பரப்பளவு | 45,000 km2 (17,000 sq mi) |
பாலி கடல் (ஆங்கிலம்: Bali Sea; இந்தோனேசியம்: Laut Bali) என்பது இந்தோனேசியா, பாலி தீவின் வடக்கிலும் காங்கியன் தீவின் (Kangean Islands) தெற்கிலும் உள்ள நீர்நிலையாகும். இந்தக் கடல் புளோரஸ் கடலின் தென்மேற்குப் பகுதியிலும்; மேலும் மதுரா நீரிணையின் மேற்கிலும் அமைந்துள்ளது.[1]
சில இடங்களில், பாலி கடலின் ஆழம் 5217 அடி வரை உள்ளது. இது உலகின் மிக ஆழமற்ற கடல்களில் ஒன்றாகும். பாலி கடலின் நீல நிற நீர், வளமான கடல்வாழ் உயிரினங்கள், இனிமையான காலநிலை மற்றும் அழகான கடற்கரைகளுக்காக மக்கள் அங்கு வருகை தருகின்றனர்.[2]
பொது
பாலி கடல், சில நேரங்களில் கடல்சார் நோக்கங்களுக்காக புளோரஸ் கடலுடன் இணைக்கப்படுகிறது; இருப்பினும், சில கடல்சார் விளக்கப்படங்களில், பாலி கடல் வழிப் பயணங்களுக்கு ஒரு தனித்துவமான கடலாகப் பதிவு செய்யப்ப்பட்டு உள்ளது. இந்தக் கடல் 45,000 கிமீ2 (17,000 மைல்2) பரப்பளவையும்; 1,590 மீ (5,217 அடி) ஆழத்தையும் கொண்டது.[3]
இந்தக் கடல் பல எரிமலைத் தீவுகளுக்குத் தாயகமாக உள்ளது. பாலி கடல், பசிபிக் எரிமலை வளையத்தின் ஒரு பகுதியாகும்; மேலும் அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளை அனுபவிக்கிறது.[3]
அமைவு
பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு (International Hydrographic Organization) (IHO) பாலி கடலை கிழக்கிந்திய தீவுக்கூட்டத்தின் (East Indian Archipelago) நீர்நிலைகளில் ஒன்றாக வரையறுக்கிறது.[4] கடல்சார்வியலைப் பொறுத்தவரை, பாலி கடல், இந்தோனேசிய நீரோட்டத்துடன் ஒத்துப்போகிறது. இந்தக் கடல், பசிபிக் பெருங்கடலில் இருந்து இந்தியப் பெருங்கடலுக்குள்; பெரும்பாலும் பாலி நீரிணை மற்றும் லோம்போக் நீரிணை வழியாகப் பாய்கிறது.[3]
புளோரஸ் கடலுடனான அதன் கிழக்கு எல்லை காரணமாக, கடல்சார் ஆய்வாளர்கள் சில சமயங்களில் பாலி கடலை அதன் ஒரு பகுதியாக வகைப்படுத்துகின்றனர்.[3]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Merriam-Webster's Geographical Dictionary. Merriam-Webster. 1997. ISBN 0-87779-546-0.
- ↑ Ahmed, Zahra (12 March 2024). "Bali Sea Facts - At some places, the depth of the Bali Sea reached 5217 feet". Marine Insight. Retrieved 12 March 2025.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Bali Sea - Due to its eastern border with the Flores Sea, oceanographers sometimes classify the Bali Sea as a part of it". World Atlas. 10 April 2023. Retrieved 12 March 2025.
- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 October 2011. Retrieved 28 December 2020.
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் பாலி கடல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.