பாஸ்ரா மாகாணம்

பாஸ்ரா கவர்னரேட் ( அரபு மொழி: محافظة البصرةMuḥāfaẓa al-Baṣra (அல்லது பாஸ்ரா மாகாணம்) என்பது தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாக தெற்கில் குவைத்தும் கிழக்கில் ஈரானும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக பசுரா அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களாக பசுரா மாவட்டம், அல்-குர்னா மாவட்டம், அல்-ஜுபைர் மாவட்டம், அல்-மிதினா மாவட்டம், ஷட் அல்-அரபு மாவட்டம், அபு அல்-காசீப் மாவட்டம் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அல்-ஃபா மாவட்டம் போன்றவை ஆகும்.

வரலாறு

1920 ஆம் ஆண்டில், முதலாம் உலகப் போரின்போது உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பின்னர், ஐக்கிய இராச்சியமானது முன்னாள் உதுமானிய விலேட்களான பாஸ்ரா, பாக்தாத் மற்றும் மொசூல் ஆகியவற்றைக் கைப்பற்றியது, இதைக்கொண்டு ஈராக் அரபி அல்லது ஈராக் பாபிலோனியா என்னும் வரலாற்றுப் பகுதியை ஒன்றாக உருவாக்கி, அதை மெசொப்பொத்தேமியாவின் பிரித்தானிய உரிமைக்கட்டளை என்ற பெயரில் பிரித்தானியரின் பராமரிப்பில் வைக்கப்பட்டது. இதன் பின்னர் 1932 இல் ஈராக் இராச்சியம் உருவாக்கப்பட்டது.

சதாம் ஆட்சி காலத்தில் ஷியா பிரிவு மக்கள் நீண்ட காலமாக கடும் பாதிக்குப்புக்கு உள்ளாயினர். ஈரான் மற்றும் நேச நாட்டு குண்டுவெடிப்புடன் எட்டு ஆண்டுகால போரின்போதும், 1991 இல் வளைகுடாப் போரின்போதும், பாஸ்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் சதாம் அரசுக்கு எதிரான மனக்கசப்பு கொண்ட மக்கள் பெருமளவில் இருந்தனர். அமெரிக்கா அவர்களுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அரசுக்கு எதிரான புரட்சியில் இறங்கினர். பிரபலமான ஒரு செவிவழிக் கதையின்படி அதிருப்தியில் இருந்த படையினரால் பொது இடத்தில் இருந்த சதாம் உசேனின் மாபெரும் உருவப்படத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பாஸ்ராவில் புரட்சி தொடங்கப்பட்டது.[1] தெருக்களில் பொதுமக்கள் திரண்டு தொடர்ந்து, கோஷங்களை எழுப்பினர். பாத் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் இரகசிய பொலிஸ் போன்றோர் தூக்கிலிட்டனர். மேலும் சதாம் உசேனின் படங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்பட்டன. புரட்சியின் பங்கேற்பாளர்கள் அமெரிக்க துருப்புக்களின் ஆதரவை எதிர்பார்த்தனர். ஆனால் அந்த நேரத்தில் நேச நாட்டு இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவு நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் நிலைகொண்டிருந்தது. பாஸ்ரா நகரம் கிளர்ச்சியாளர்களுக்கு முற்றிலும் அடிபணியவில்லை; ஈராக்கிய இராணுவத்திலிருந்து புரட்சியில் ஈடுபட்ட 5,000 வீரர்களுக்கு எதிராக அரசுக்கு விசுவாசிகள் தரப்பைச் சேர்ந்த சேர்ந்த சுமார் 6,000 படையினர் புரட்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தனர். சுமார் மூன்று நாட்களுக்குப் பிறகு, அரசு ஆதரவு படையினர் "அவர்களுக்கு முன்னால் இருந்த அனைத்தையும்" அழித்து, நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினார். கிளர்ச்சியாளர்களில் பலரை வீதிகளில் கொன்றார். மேலும் பொது இடங்களில் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனைகளை நிறைவேற்றினர்.

2003 முதல் ஈராக் போரின் போது பிரித்தானிய மற்றும் அமெரிக்கர்கள் படையெடுத்தபோது இந்த மாகாணமானது போர் மையங்களில் ஒன்றாக இருந்தது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 7 வரை மேஜர் ஜெனரல் ராபின் பிரிம்ஸின் கீழ் பிரித்தானிய 1 வது கவச பிரிவு படைகளுக்கும், ஜெனரல் அலி ஹசன் அல்-மஜித் (கெமிக்கல் அலி) இன் கீழ் ஈராக் படைகளுக்கும் இடையே பாஸ்ரா போர் நடந்தது.[2] மிகப் பெரிய போரின் பெரும்பகுதி அடுத்த வாரங்களில் மாகாணத்தில் நடந்தன. மதச்சார்பற்ற ஈராக்கியர்களுக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கும் இடையில் பல வன்முறைகள் 2006 கோடையில் வெடித்தன. செப்டம்பர் 2007 இல், பிரித்தானிய துருப்புக்கள் பாஸ்ரா விமான நிலையத்திற்கு திரும்பப் பெறப்பட்டன, டிசம்பர் 2007 இல் நகரத்திலிருந்து முற்றிலுமாக விலகின. வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தன்னாட்சி பிராந்தியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, திஸ் கார் மற்றும் மேசன் போன்ற பிற மாகாணங்களுடன் ஒரு தன்னாட்சி பிராந்தியமாக ஒன்றுபட பாஸ்ரா முன்மொழிந்தது. 20005 அக்டோபர் 15 அன்று, புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக 691,024 பேர், அதாவது சுமார் 96.02% பேர், வாக்களித்தனர்.

அரசு

பாஸ்ரா கவர்னரேட் மாவட்டங்கள்
  • ஆளுநர்: ஆசாத் அல் ஈதானி
  • துணை ஆளுநர்: முகமது தாஹிர்
  • மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): சபா அல் பஸூனி

மாவட்டங்கள்

  • அபு அல்-காசீப்
  • பாஸ்ரா
  • அல்-ஃபவா
  • அல்-மிதைனா
  • அல்-குர்னா
  • ஷட் அல்-அரபு
  • அல் ஜுபைர்

குறிப்புகள்