பித்தநீர் பழுப்புடன் பச்சை நிறமுடையது. இது கல்லீரலிருந்து தோன்றும் காரப்பொருளாகும். பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுப் பித்தநாளத்தின் வழியே முன் சிறுகுடலை அடையும். பித்த நீரில் நீர், கோழைப் பொருள், உப்புகள், கொலஸ்ட்ரால், பித்த நிறமிகள், பித்த நீர் உப்புகள் போன்றவையுள்ளன. பித்த நீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருட்களைச் சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன.