பி. எம். சயீத் கடல் பறவைகள் காப்பகப் பகுதி

இந்தியாவில் கடல் பறவைகளுக்கான முதல் பாதுகாக்கப்பட்ட பகுதி பி.எம் சயீத் கடல் பறவைகள் காப்பகப் பகுதி (PM Sayeed Marine Birds Conservation Reserve) ஆகும். இது இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் அமைந்துள்ளது . இது 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது 62 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [1]

பி எம் சையது கடற்பறவைகள் பாதுகாப்புப் பகுதியானது, கிரேட்டர் க்ரெஸ்டட் டெர்ன், லெசர் க்ரெஸ்டட் டெர்ன், சூட்டி டெர்ன் மற்றும் பிரவுன் நோடி ஆகிய நான்கு வகையான கடற்பரப்பு வாழ் பறவைகளைக் கொண்டிருக்கும். [1] [2]

மேற்கோள்கள்