பீலே: பெர்த் ஆஃப் எ லெஜெண்ட்
பீலே: பெர்த் ஆஃப் எ லெஜெண்ட் Pelé: Birth of a Legend | |
---|---|
இயக்கம் |
|
தயாரிப்பு |
|
கதை |
|
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு லிபடிக் |
படத்தொகுப்பு |
|
கலையகம் |
|
விநியோகம் | ஐஎஃப்சி பிலிம்ஸ் |
வெளியீடு | மே 6, 2016(United States) |
ஓட்டம் | 107 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய மாநிலங்கள் |
மொழி | ஆங்கிலம் போர்ச்சிகீசியம் |
மொத்த வருவாய் | $2.3 மில்லியன்[1] |
பீலே: பெர்த் ஆஃப் எ லெஜெண்ட் (Pelé: Birth of a Legend) என்பது ஒரு அமெரிக்க வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இது பிரேசில் கால்பந்தாட்ட வீரரான பீலேவின் ஆரம்பகால வாழ்கையைப் பற்றிய ஒரு படமாகும். இப்படத்தை ஜெஃப் ஜிம்பால்ஸ்ட்டும் மைக்கேல் ஜிம்பால்ஸ்ட்டும் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
படத்தில் சிறுவயது பீலேயாக லியோனார்டோ லிமா கார்வால்ஹோ நடிக்க, 17 வயது பீலேயாக கெவின் டி பவுலா நடித்துள்ளார். பீலேவின் தந்தையாக பிரேசிலின் புகழ்பெற்ற இசைக்கலைஞரான சீ ஜார்ஜ் நடித்துள்ளார். மேலும் ரோட்ரிகோ சாண்டோரோ, டியோகோ பொன்னேடா, கோல்ம் மினி ஆகியோரும் நடித்துள்ள படத்தில் பீலே ஒரு சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார். இந்தப் படம் பீலேவுக்கும் அவரது தந்தைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டுள்ளது.
2013 செப்டம்பரில் படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது ரியோ டி ஜெனிரோவில் எடுக்கப்பட்டு, படப்பிடிப்பானது 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, திரைப்பட விமர்சகர்கள், கதையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.
தயாரிப்பு
2013 செப்டம்பர் 30 அன்று படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது ரியோ டி ஜெனிரோவில் தொடங்கியது.[2][3] படமானது 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டி நடக்கும் காலப்பகுதியில் வெளியிடப்பட மாட்டாது என்று 2014 பெப்ரவரி 9 அன்று அறிவிக்கப்பட்டது, ஏனெனில் படத்தின் பிந்தைய தயாரிப்புப் பணிகள் மற்றும் மறு படப்பிடிப்பு போன்ற வேலைகள் இருந்ததே காரணம்.[4]
கதைச்சுருக்கம்
1950இல் பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், உருகுவேயிடம் பிரேசில் தோல்வியடைந்தது. அந்த தோல்வியால் ஒட்டுமொத்த பிரேசிலும் சோகத்தில் மூழ்கியது. பீலேவின் தந்தை வானோலியில் பிரேசில் தோற்றதைக் கேட்டுக் கண்ணீரோடு புலம்புவார். அப்போது சிறுவனான பீலே, தான் வளர்ந்து அந்தக் கோப்பையை நாட்டுக்காக வெல்வேன் என்று அவரிடம் சத்தியம் செய்வார். அந்தச் சத்தியத்தை அவர் எப்படி நிறைவேற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
மேற்கோள்கள்
- ↑ "Pelé: Birth of a Legend". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் August 2, 2016.
- ↑ "Production Begins on Brazilian Soccer Biopic Pelé". comingsoon.net. 2 October 2013 இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131005004028/http://www.comingsoon.net/news/movienews.php?id=109709. பார்த்த நாள்: 9 October 2013.
- ↑ "Hollywood treatment for Pele". sowetanlive.co.za. 4 October 2013. http://www.sowetanlive.co.za/sport/2013/10/04/hollywood-treatment-for-pele. பார்த்த நாள்: 9 October 2013.
- ↑ Roxborough, Scott (9 February 2014). "'Pele' Biopic Won't Be Ready in Time for World Cup". hollywoodreporter.com. http://www.hollywoodreporter.com/news/berlin-pele-biopic-wont-be-678716. பார்த்த நாள்: 10 February 2014.