புக்கிட் பிந்தாங் நகர மையம்

புக்கிட் பிந்தாங் நகர மையம்
Bukit Bintang City Centre
Pusat Bandar Bukit Bintang
BBCC
கோலாலம்பூர் புறநகர்ப் பகுதி
புக்கிட் பிந்தாங் நகர மையம் (2022)
புக்கிட் பிந்தாங் நகர மையம் (2022)

சின்னம்
ஆள்கூறுகள்: 3°08′24″N 101°42′25″E / 3.140°N 101.707°E / 3.140; 101.707
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
மாவட்டம்புக்கிட் பிந்தாங்
திறப்புசனவரி 2022
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கோலாலம்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்7.9 ha (19.4 acres)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
55100

புக்கிட் பிந்தாங் நகர மையம் அல்லது பிபிசிசி (மலாய்: Pusat Bandar Bukit Bintang; ஆங்கிலம்: Bukit Bintang City Centre; (BBCC) சீனம்: 武吉免登城中城) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங், புடு சிறைச்சாலையின் முன்னாள் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கலப்பு-பயன்பாட்டுப் பகுதி ஆகும். 19.4 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட இந்த வளர்ச்சிப் பகுதி, புக்கிட் பிந்தாங்கின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.

பிபிசிசி (BBCC) எனும் சுருக்கம், புக்கிட் பிந்தாங் நகர மையம் (Bukit Bintang City Centre) என்பதைக் குறிப்பதாகும்.

20 சூன் 2017-இல், புக்கிட் பிந்தாங் நகர மையம் மற்றும் லாலாபோர்ட் மிட்சுயி வணிகப் பூங்கா கட்டுமானத்திற்கான (Mitsui Shopping Park LaLaport Bukit Bintang City Centre) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2018 மார்ச் மாதம், RM 8.7 பில்லியன் ரிங்கிட் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடக்கப்பட்டன.[1]

வரலாறு

கட்டுமானத்திற்கு முன் 2013-இல் புக்கிட் பிந்தாங் நகர மையத் தளம்
கட்டுமானத்திற்கு முன் 2020-இல் புக்கிட் பிந்தாங் நகர மையக் கட்டுமானம்
கட்டுமானத்திற்கு முன் 2020-இல் பிபிசிசி போக்குவரத்து மையம்

புக்கிட் பிந்தாங் நகர மையம் அமைக்கப்பட்டுள்ள தளம், முன்பு புடு சிறைச்சாலையின் (Pudu Prison) ஒரு பகுதியாக இருந்தது. புடு சிறைச்சாலை 1890-களில் 10 எக்டர் பரப்பளவில் கட்டப்பட்டது. புடு சிறைச்சாலை 115 வருடம் பழைமை வாய்ந்தது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது.[2]

இரண்டாவது உலகப் போரின் போது புடு சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான போர்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டனர். மலாயாவில் இருந்த ஐரோப்பியர்கள் பலர் இந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளும் செய்யப்பட்டனர். 1996-இல் 101 ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பின்னர், புடு சிறைச்சாலையை மூடுவதாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது.

புடு சிறைச்சாலை

புடு சிறைச்சாலையில் இருந்த கைதிகள் அனைவரும் சுங்கை பூலோ, காஜாங் சிறைச்சாலைகளுக்கு இடம் மாற்றப்பட்டனர். 1996-ஆம் ஆண்டில் புடு சிறைச்சாலை பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது; மற்றும் ஆசியாவிலேயே, பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்பட்ட முதல் சிறைச்சாலை எனும் பெயரையும் பெற்றது. பின்னர் அந்தச் சிறைச்சாலை 6 மாத காலத்திற்குத் தற்காலிகச் சிறை அருங்காட்சியகமாகவும் மாற்றப்பட்டது.

2010-ஆம் ஆண்டு சிறைச்சாலையின் சுவர்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்தச் சிறைச்சாலை, ஒரு காலத்தில் உலகின் மிக நீளமான சுவரோவியத்தையும் கொன்டிருந்தது. 2012-ஆம் ஆண்டில் முக்கியச் சிறை வளாகம் முழுமையாக இடிக்கப்பட்டது.[3]

வரலாற்று முத்திரை

இன்றும், அந்தச் சிறைச்சாலையின் பிரதான வாயில்கள் மட்டுமே இடிக்கப்படாமல் இன்னும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பிரதான வாயில்களுக்கு மீண்டும் வர்ணம் பூசப்பட்டு, அதன் அசல் வடிவம், ஒரு வரலாற்று முத்திரையாகத் தக்கவைக்கப்பட்டு பாதுகாக்கப் படுகிறது.[4]

கோலாலம்பூரின் பரபரப்பான வணிக வளாகத்தின் தங்க முக்கோணப் பகுதியில் அமைந்துள்ள புக்கிட் பிந்தாங் நகர மையத்தின் கட்டுமான வரைபடம், கோலாலம்பூர் மாநகராட்சியிடம் (DBKL) வழங்கப்பட்டது.

பிபிசிசி மேம்பாட்டு நிறுவனம் (BBCC Development Sdn Bhd) எனும் உள்ளூர் கூட்டு நிறுவனத்திடம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த நிறுவனமே மேம்பாட்டாளராகவும் அறிவிக்கப்பட்டது. பிபிசிசி மேம்பாட்டு கூட்டு நிறுவனத்தின் 66% பங்குரிமை, ஆர்என்எச் (RnH Berhad) நிறுவனத்திற்கு உரியது; 33% பங்குரிமை மலேசிய புறநகர் மேம்பாட்டுக் கழகம் எனும் உடா (Urban Development Authority) (UDA) நிறுவனத்திற்கு உரியது.[5][6]

கட்டி முடிக்கப்பட்டவை

  • பிபிசிசி போக்குவரத்து முனையம் - ( AG9  ஆங் துவா நிலையம்)
  • பிபிசிசி கேளிக்கை மையம் - (Zepp KL, GSC Cineplex, Malaysia Grand Bazaar)[7]
  • பல சுவையுணவு தெரு - Gourmet Street
  • லைப்ஸ்டைல் பேரங்காடி - Lifestyle Mall (Mitsui Shopping Park LaLaport BBCC)</ref>
  • 55-அடுக்கு மற்றும் 35-அடுக்கு, 215.1 மீ; - 155மீ குடியிருப்புகள் (Residential Suites; Lucentia Residences) - 2022[8]
  • 48-அடுக்கு & 245.5 மீ; அலுவலகக் கோபுரம் (The Stride Strata Office) - 2022[9]
  • 44-அடுக்கு மற்றும் 185 மீ; ஜப்பானிய தங்கறைத் தொகுதிகள் (Mitsui Serviced Suites) - 20242024[10][11]

கட்டுமானத்தில்

  • 31-அடுக்கு மாடி; (108 மீ உயரம்) 5 குடியிருப்புகள் (SWNK Houze) - 2025[12]
  • 50-அடுக்கு மாடி; & (259.5 மீ உயரம்) 3 குடியிருப்புகள் (குடியிருப்புத் தொகுதி) - 2026[13]
  • தங்கும் விடுதி, (123 மீ உயரம்) (தங்கும் விடுதி, (இல்டன் தங்கும் விடுதி) - 2025[14]
  • அலுவலகக் கோபுரம்; (192 மீ உயரம்) (ஓர் அலுவலகத் தொகுதி) - 2026[15]
  • 80-அடுக்கு மாடி கோபுரம்; (430.2 மீ உயரம்) (பிபிசிசி சிக்னேச்சர் கோபுரம்) - 2025/26[16]

மேலும் காண்க

காட்சியகம்

புக்கிட் பிந்தாங் நகர மையத்தின் காட்சிப் படங்கள்:

மேற்கோள்கள்

  1. Zakariah, Zarina (2017-06-20). "Construction begins on highly-anticipated Bukit Bintang City Centre | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
  2. "Prison break: Pudu's walls come down". The Straits Times (Singapore). 22 June 2010. 
  3. "Pudu Prison and the ghosts of Kuala Lumpur". Abandonedspaces.com (in ஆங்கிலம்). 2018-02-08. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  4. "Forgotten Pudu Jail - Aizuddin Saad | The Witness News". Aizuddinsaad.com. பார்க்கப்பட்ட நாள் 24 July 2022.
  5. Rosli, Lidiana (2016-01-23). "BBCC project to give priority to Bumiputera participation | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-23.
  6. "Bukit Bintang City Centre – News & Happenings". Bukit Bintang City Centre (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 23 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10.
  7. EcoWorld. "MGB | Colour Palette of Malaysia". MGB | Colour Palette of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  8. "Lucentia Residences". Bukit Bintang City Centre (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.
  9. "The Stride Strata Office | Bukit Bintang City Centre – Where Life Is Spectacular". Bukit Bintang City Centre (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  10. "Mitsui Serviced Suites | Project | Mitsui Fudosan (Asia)". Mitsui Fudosan (Asia) (in ஆங்கிலம்). Archived from the original on 4 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
  11. "Mitsui Serviced Suites - The Skyscraper Center". Skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
  12. "SWNK Houze". Bukit Bintang City Centre (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-03.
  13. "BBCC Phase 2 Serviced Apartments Tower 1 - The Skyscraper Center". Skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
  14. "UDA Holdings purchases RM295 mil hotel building in Bukit Bintang City Centre". Edgeprop.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  15. "BBCC Phase 2 Office Tower - The Skyscraper Center". Skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.
  16. "Bukit Bintang City Centre Signature Tower - The Skyscraper Center". Skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-20.

வெளி இணைப்புகள்