புத்ததேவ் பட்டாசார்யா
புத்ததேவ் பட்டாசார்யா বুদ্ধদেব ভট্টাচার্য | |
---|---|
2009இல் பட்டாசார்யா | |
மேற்கு வங்காள முதலமைச்சர் | |
பதவியில் 6 நவம்பர் 2000–மே 18 2011 | |
முன்னையவர் | ஜோதி பாசு |
பின்னவர் | மம்தா பானர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 மார்ச்சு 1944 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 08, ஆகத்து 2024 |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
வாழிடம் | பாம் அவெனியூ, கொல்கத்தா |
இணையத்தளம் | www.cpim.org |
As of சனவரி 27, 2007 மூலம்: [1] |
புத்ததேவ் பட்டாசார்யா (சிலநேரங்களில் புத்ததேவ் பட்டாசார்ஜி; Buddhadeb Bhattacharjee, 1 மார்ச் 1944 – 8 ஆகத்து 2024)[1][2] ஓர் இந்தியபொதுவுடமை அரசியல்வாதி. நவம்பர் 6, 2000 முதல் மே 18, 2011 வரை மேற்கு வங்காள முதலமைச்சராகப் பணியாற்றினார். சி.பி.எம் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் பணியாற்றினார்.
இளமையும் கல்வியும்
1944ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஓர் பெருமை வாய்ந்த குடும்பத்தில் பிறந்தார். புகழ்பெற்ற புரட்சிக்கவி சுகந்தா பட்டாசார்யா இவரது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர்.துவக்கக் கல்வியை சைலேந்திர சர்க்கார் வித்தியாலயாவில் பெற்றார்.[3] கொல்கத்தாவின் பிரெசிடென்சி கல்லூரியில் வங்காள இலக்கியம் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றவர்.[4]
அரசியல் வாழ்வு
1964ஆம் ஆண்டு தமது பட்டப்படிப்பை முடித்தவுடன் அரசியலில் சிபிஎம் முதன்மை உறுப்பினராக நுழைந்தார்.விரைவிலேயே சனநாயக இளைஞர் கூட்டமைப்பின் மாநில செயலராக நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களில் காசிப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்முறை முதன்முறையாக இடதுசாரி அமைச்சு மாநிலத்தில் பொறுப்பேற்றது. இவ்வமைச்சில் தகவல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். வங்காள இலக்கிய மேம்பாட்டிற்கு சிறப்பாகப் பணியாற்றினார்.1982ஆம் ஆண்டு தேர்தலில் காசிப்பூர் தொகுதியில் தோல்விகண்டபின் 1987ஆம் ஆண்டு ஜாதவ்பூர் தொகுதிக்கு மாறி அங்கு வெற்றி கண்டார்.
விருது
- பத்ம பூசண் விருது (2022)[5]
மேற்கோள்கள்
- ↑ "Former Bengal chief minister Buddhadeb Bhattacharjee passes away". பார்க்கப்பட்ட நாள் 8 August 2024.
- ↑ "The Marxist journey of 'Brand Buddha' Buddhadeb Bhattacharjee". The Times of India. 8 August 2024. https://timesofindia.indiatimes.com/city/kolkata/left-behind-the-marxist-journey-of-brand-buddha-buddhadeb-bhattacharjee/articleshow/112366309.cms.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-16. பார்க்கப்பட்ட நாள் 2010-12-07.
- ↑ Shri Buddhadeb Bhattacharjee
- ↑ "Padma Awards 2022: Full list of 128 recipients named for civilian honours". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-01-25.