பூண்டு அழுத்தி

பூண்டு நசுக்கியும், நசுங்கிய பூண்டும் படத்தில் காணலாம்.
பல பூண்டு அழுத்தியின் துளைகளில், பூண்டு தங்காமல் இருக்க ஊசி போன்ற அமைப்பு இருக்கும்.

பூண்டு அழுத்தி அல்லது பூண்டு நசுக்கி (garlic press; garlic crusher) என்பது சமையலறை ஏனங்களில் ஒன்றாகும். இது பூண்டுகளின் தோலைத் தானாகப் பிரித்தெடுத்து, எளிதில் நசுக்கி, பூண்டினைப் பயன்படுத்த உதவுகிறது. சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளரான கார்ல் சைசெட்டு (Karl Zysset, 1907–1988) இதனைக் கண்டறிந்தார். இதனை முதன்முதலாக இவரது நிறுவனம் (Zyliss) அறிமுகப்படுத்தியது.[1][2]

சிறப்புகள்

பூண்டின் தோலினை உரிக்கத் தேவையில்லை. கத்தியை விட பாதுகாப்பானது. சிறுவரும் இதனைப் பயன்படுத்தலாம். இக்கருவியின், சிறு சிறு துளைகள் வழியே தோலில்லாப் பூண்டு நசுங்கி வருவதால், நேரடியாக உணவில் பயன்படுத்த இயலுகிறது.

மேற்கோள்கள்