பெரம்பூர் தொடருந்து நிலையம்

பெரம்பூர்
(சென்னை புறநகர் இரயில் மற்றும் தெற்கு இரயில்வே நிலையம்)
பெயர்ப் பலகை
பெரம்பூர் தொடருந்து நிலையம்
(சென்னை புறநகர் இரயில் மற்றும் தெற்கு இரயில்வே நிலையம்), பெரம்பூர்.
பொது தகவல்கள்
உரிமம்இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே.
தடங்கள்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைசெந்தரத் தரை நிலையம்.
தரிப்பிடம்உண்டு.
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுPER
பயணக்கட்டண வலயம்தென்னக தொடர் வண்டித் துறை.
வரலாறு
மின்சாரமயம்29 நவம்பர் 1979[1]
முந்தைய பெயர்கள்மதராசு தென் மராட்டிய தொடர் வண்டித் துறை.
பயணிகள்
பயணிகள் 201950,000/நாள்[2]

பெரம்பூர் தொடருந்து நிலையம் (Perambur railway station) இந்தியாவில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சென்னை புறநகர் இரயில்வே வலைப்பின்னலில் சென்னை கடற்கரை/சென்னை மத்திய-அரக்கோணம் பிரிவில் இது உள்ளது. பயணிகள் நிலையயமான இங்கு நகர இரயில்வே காலனி, தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை மற்றும் அதன் சார்பு இரயில் பெட்டி தொழிற்சாலை இரயில் நிலையம் , பெரம்பூர் இயந்திரப் பணிமனை இரயில் நிலையம் ஆகியனவும் உள்ளன. இவ்வழியாகச் செல்லும் புறநகர் இரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. தொலை தூர இரயில்களில் பலவும் இங்கு சில நிமிடங்கள் நின்று செல்கின்றன.

வரலாறு

பெரம்பூர் தொடருந்து நிலைய நடைபாதை எண் 1

இராயபுரம் இரயில் நிலையத்திற்கு அடுத்து மிகவும் பழமையான இரண்டாவது இரயில் நிலையமாக பெரம்பூர் தொடருந்து நிலையம் சென்னை மாநகரில் அமைந்துள்ளது. தெற்கு தொடர் வண்டி துறையின் இயந்திரம், பார வண்டி, வண்டி, இரயில் பெட்டி மற்றும் பணிமனைகள் போன்றவற்றுக்காக 1860 ஆம் ஆண்டுகளில் பெரம்பூர் இரயில் நிலையம் கட்டப்பட்டது.[2] 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் தேதி, சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் பிரிவின் பாதை மின்மயமாக்கப்பட்டு மின்சாரத் தொடர் வண்டி போக்குவரத்து தொடங்கியது.[1]

தொடருந்து நிலையம்

பெரம்பூர் இரயில் நிலைய பெயர்ப் பலகை
பெரம்பூர் இரயிநிலைய நுழைவாயில்

எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்' எழும்பூர் இரயில் நிலையம்', தாம்பரம் இரயில் நிலையம் மற்றும் மாம்பலம் ஆகிய இரயில் நிலையங்களுக்கு அடுத்ததாக ஐந்தாவது மிகப்பெரிய இரயில் நிலையமாக பெரம்பூர் இரயில் நிலையம் உள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒவ்வொரு நாளும், சுமார் 40,000 பயணிகள் த நிலையத்தைப் பயன்படுத்தினர்.[2][3] 140 புறநகர் இரயில் சேவைகள், 29 தொலைதூர இரயில் சேவைகள் என பெரம்பூர் நிலையம் பரபரப்புடன் செயல்படுகிறது.[2]

சேவைகள்

இரயில் எண் 66021 சென்னை சென்ட்ரல்-திருப்பதி உள்ளூர் விரைவு தவிர பெரம்பூர் நிலையத்தின் வழியாகச் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் இங்கு நிறுத்தப்படுகின்றன. பல நீண்ட தூர இரயில்கள் இந்த நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன.[4][5]

மேற்கோள்கள்