பெரிய காட்டு ஆந்தை

பெரிய காட்டு ஆந்தை
பெரிய காட்டு ஆந்தை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Bubo
இனம்:
B. nipalensis
இருசொற் பெயரீடு
Bubo nipalensis
Hodgson, 1836

பெரிய காட்டு ஆந்தை (Forest Eagle Owl, Bubo nipalensis) என்பது தென்கிழக்காசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் ஒரு பெரிய இரவாடி பறவையாகும்.

உடலமைப்பு

பெரிய காட்டு ஆந்தையானது ஆந்தைகளில் ஒரு பெரிய இனமாகும். இதன் நீளம் 50 முதல் 65 செமீ (20 முதல் 26 அங்குலம்) வரை இருக்கும். இது சராசரியாக உலகின் ஆறாவது நீளமான ஆந்தையாகும், மேலும் தற்போது உயிருடன் காணப்படும் ஆந்தை இனங்களில் ஒன்பதாவது நீளமான இறக்கைகளைக் கொண்டது. இந்த இனத்தின் பரவலாக அறிவிக்கப்பட்ட எடை 1.3 முதல் 1.5 கிலோ (2.9 முதல் 3.3 பவுண்டுகள்) ஆகும். ஒருகால் அது ஆண் பறவையின் எடையாகவும் இருக்கலாம். இப்பறவையின் அலகு மஞ்சள் நிறத்தில் இருக்கும். விழிப்படலம் பழுப்பாகவும், கால் விரல்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இப்பறவை உடலின் மேற்பகுதி ஆழ்ந்த பழுப்பாக சீரான வெளிர் மஞ்சள் கோடுகளோடு காணப்படும். தலையில் கறுப்பும் வெள்ளையுமாக கலந்த நிறத்தில் இரண்டு கொம்புகள் செங்குத்தாக நிற்கக் காணலாம். உடலின் கீழ்ப்பகுதி சிவப்பும் மஞ்சளும் தோய்ந்த வெண்மையாக இருக்கும். தொண்டையிலும் மார்பிலும் கறுப்புப் பட்டைக் கோடுகள் காணப்படும். வயிற்றில் கறுப்புப் பட்டைகள் இடைவெளிவிட்டுத் தெளிவாகக் காணப்படும். கால்கள் தூவிகளால் முழுவதும் மூடப்பட்டிருக்கும். இதன் கண்கள் பழுப்பு நிறமாகவும் இந்தியக் கழுகு ஆந்தையின் கண்கள் ஆரஞ்சு நிறமாகவும் இருப்பதைக் கொண்டு இரண்டையும் வேறுபடுத்தி அறியலாம்.[2]

பெரிய காட்டு ஆந்தையின் ஓவியம்

காணப்படும் பகுதிகளும் உணவுவும்

மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைசார்ந்த பசுமைமாறா அடர்காடுகளில் மட்டும் காணப்படும். பகலில் உயரமான மரத்தின் அடத்தியான கிளைகளில் தூங்கியபடி பொழுதைக்கழிக்கும். இரவில் வெளிப்பட்டு காடை, கௌதாரி, முயல் ஓணான், பாம்பு ஆகியவற்றை வேட்டையாடுவதோடு மலைவாழ் மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து அவர்கள் வளர்க்கும் கோழி, புறா, பூனை ஆகியவற்றையும் தூக்கிச் செல்லும். காட்டில் இறந்து கிடக்கும் புலி முதலான பெரிய விலங்குகளின் இறைச்சியையும் தின்பதுண்டு. ஆழ்ந்த குரலில் நெடுந்தொலைவு கேட்கும்படியாக ஹீட் ஹீட் எனக் கத்தும்.

இனப்பெருக்கம்

இளம் பெரிய காட்டு ஆந்தை

திசம்பர் முதல் சனவரி முடிய வயதான பெரியமரப் பொந்துகளிலும், கழுகு முதலான பறவைகள் கட்டிய பழைய கூட்டிலும், பாறை இடுக்குளிலும், மலைக்குகைகளிலும் தரையிலும் ஒரு முட்டை மட்டும் இடும். முட்டை வெண்மை நிறத்தில். கூட்டை நெருங்குபவர்களைக் கோபத்தோடு தாக்கும்.[3]

தென் இந்தியா -பிலிகிரிரங்கா மலை அருகே காணப்படும்பெரிய காட்டு ஆந்தை

மேற்கோள்கள்

  1. "Bubo nipalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {cite web}: Invalid |ref=harv (help)
  2. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 262–263.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:76

வெளி இணைப்புகள்

  • cryptozoology.com: Devil Bird. Retrieved 2006-DEC-23.