பேர்சிஃபார்மீசு

பெர்சிபார்மிசு
புதைப்படிவ காலம்:Late Cretaceous–recent
PreЄ
Pg
N
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெர்சிபார்மிசு
மாதிரி இனம்
ஐரோப்பிய ஈட்டி மீன், பெர்கா புளுவியாடிலிசு
லின்னேயசு, 1758
துணைவரிசை

உரையில்

பெர்சிபார்மிசு (Perciformes)(/ˈpɜːrsɪˌfɔːrmiːz/), என்பது பெர்கோமார்பா அல்லது அகாந்தோப்டெரி என்றும் அழைக்கப்படுகிறது. இது கதிர் மீனின் ஒரு வரிசை அல்லது மீப்பெரும் வரிசை ஆகும். இதனை ஒற்றை வரிசையாகக் கருதினால், இவை முதுகெலும்பு உயிரிகளை மிக அதிகமாக கொண்டுள்ள வரிசையாகும், இதில் 41% எலும்பு மீன்கள் உள்ளன. பெர்சிபார்மிசு என்றால் "பரண் போன்றது" என்று பொருள். பெர்சிபார்மிசு என்பது "பரண் போன்ற" பெர்கோமார்பு மீன்களை கொண்ட உட்கிளையான பெர்கோமார்பாவில் உள்ள ஒரு வரிசையாகும். இவை அனைத்து நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளிலும் காணப்படும். சுமார் 10,000 சிற்றினங்கள் இந்தக் குழுவில் உள்ளன. இந்த வரிசையில் சுமார் 160 குடும்பங்கள் உள்ளன. இது முதுகெலும்புகளுக்குள் இருக்கும் எந்த வரிசையினைக் காட்டிலும் அதிகம் ஆகும்.[1] இது 7 மிமீ (1⁄4 அங்குலம்) அளவுடைய சிண்ட்லேரியா பிரீவிபிங்குயிசு முதல் 5 மீ (15 அடி) நீளமுடைய மார்லின் வரையிலான முதுகெலும்புகளின் மிகவும் மாறுபட்ட அளவிலான மீன்களைக் கொண்ட வரிசையாகும். கிரெட்டேசியசின் பிற்காலத்தில் முதன் முதலாகத் தோன்றி பல்வேறு வகையில் பரவிக் காணபப்டுகின்றன. இந்த குழுவின் நன்கு அறியப்பட்ட மீன்களாக பெர்ச் மற்றும் ஈட்டி மீன் (பெர்சிடே), கொடுவா மற்றும் களவாய் மீன் (செர்ரானிடே) உள்ளன.[2]

பண்புகள்

முதுகு மற்றும் குத துடுப்புகள் முன்புற முள்ளெலும்பு மற்றும் பின்புற மென்மையான-கதிர் பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. இவை பகுதி அல்லது முழுமையாக பிரிக்கப்படலாம். இடுப்பு துடுப்புகள் வழக்கமாக ஒரு முள்ளெலும்பு மற்றும் ஐந்து மென்மையான கதிர்களைக்கொண்டுள்ளன. இவை வழக்கத்திற்கு மாறாக கன்னத்தின் கீழ் அல்லது வயிற்றின் கீழ் முன்னோக்கி அமைந்துள்ளன. செதில்கள் பொதுவாக டீனாய்டு செதிகளாகவும் (தொடுவதற்கு கடினமானது), இருப்பினும் சில நேரங்களில் இவை சைக்ளோயிட் செதில்களாகவும் (தொடுவதற்கு மென்மையானது) அல்லது வேறுவிதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

வகைப்பாட்டியல்

பெர்சிபார்மிசின் வகைப்பாடு சர்ச்சைக்குரியது. கிளைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பாரம்பரியமாக வரையறுக்கப்பட்டபடி, பெர்சிபார்மிசு இணைதொகுதிமரபு வகையினைச் சார்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது. இசுகார்பேனிபார்மிசு, டெட்ராடோன்டிபார்மிசு மற்றும் தட்டை மீன்கள் ஆகியவை துணைவரிசைகளாக சேர்க்கப்பட வேண்டிய பிற வரிசைகள். தற்போது அங்கீகரிக்கப்பட்ட துணைப்பிரிவுகளில், பல இணைதொகுதிமரபு ஆகவும் இருக்கலாம். இவை பொதுவாக உலகில் உள்ள மீன்கள் (Fishes of the World) என்ற மேற்கோள் பனுவலைப் பின்பற்றி, துணைக்குடும்பம்/மீப்பெரும் வரிசையாகத் தொகுக்கப்படுகின்றன.[1][3][4][5]

பெர்சிபார்மிசு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில்
போமாகேந்தது செமிசர்சுலேடசு
நெல்சன் 2015[5] பெட்னாகூர்-ரோட்ரிகசு மற்றும் பலர்2017[6]
  • துணைவரிசை பெர்கொய்டேய்
    • பெருங்குடும்பம் பெர்கோய்டியா
      • சென்ட்ரோபோமிடே (ஸ்னூக்ஸ்)
      • லத்திடே (Lates)
      • ஜெரிடே (Mojarras)
      • சென்ட்ரோஜெனிடே (False scorpionfishes)
      • பெர்சிலிடே (Southern basses)
      • ஹோவெல்லிடே (Oceanic basslets)
      • அக்ரோபோமாடிடே (Lanternbellies)
      • எபிகோனிடே (Deepwater cardinalfishes)
      • பாலிபிரியோனிடே (Wreckfishes)
      • லேடியோலாப்ராசிடே (Asian sea-basses)
      • முல்லிடே (Goatfishes)
      • கிளௌகோசோமாடிடே (Pearl perches)
      • பெம்பெரிடே (Sweepers)
      • ஒப்லெக்னாதிடே (Knifejaws)
      • குஹ்லிடே (Flagtails)
      • பேத்திக்ளூபீடே (Bathyclupeids)
      • டாக்சோடிடே (Archerfishes)
      • அரிப்பிடே (Australasian salmon (kahawai))
      • டிசிஸ்டிடே (Galjoen fishes)
      • கைபோசிடே (Sea chubs)
      • டெராபோன்டிடே (grunters or tigerperches)
      • Percichthyidae (temperate perches)
      • சினிபெர்சிடே (Chinese perches)
      • எனோப்ளோசிடே (Oldwives)
      • பெண்டாசெரோடைடே (Armourheads)
      • டைனோபெர்சிடே (Cavebasses)
      • பான்ஜோசிடே (Banjofishes)
      • சென்ட்ராச்சிடே (Sunfishes)
      • செரானிடே (Sea basses and Groupers)
      • பெர்சிடே (Perches)
      • லாக்டரிடே (False trevallies)
      • டைனோலெஸ்டிடே (Long-finned pikes)
      • ஸ்கம்ப்ரோபிடே (Gnomefishes)
      • பொமடோமைடே (Bluefishes)
      • Bramidae (Pomfrets)
      • Caristiidae (Manefishes)
    • Possibly related to Acanthuriformes
      • Monodactylidae (Moonfishes)
      • Priacanthidae (Bigeyes (catalufas))
    • Families which may have a relationship to Acanthuroidei, Monodactylidae, and Priacanthidae
      • Leiognathidae (Ponyfishes, slimys, or slipmouths)
      • Chaetodontidae (Butterflyfishes)
      • Pomacanthidae (Angelfishes)
      • Malacanthidae (Tilefishes)
      • Haemulidae (Grunts)
      • Hapalogenyidae (Barbeled grunters)
      • Lutjanidae (Snappers)
      • Caesionidae (Fusiliers)
    • Superfamily Cirrhitoidea
      • Cirrhitidae (Hawkfishes)
      • Chironemidae (Kelpfishes)
      • Aplodactylidae (Marblefishes)
      • Cheilodactylidae (Morwongs)
      • Latridae (Trumpeters)
    • Superfamily Cepoloidea
      • Cepolidae (Bandfishes)
    • Superfamily Siganoidea
      • Scatophagidae (Scats)
      • Siganidae (Rabbitfishes)
  • துணைவரிசை Notothenioidei
    • Bovichtidae (Temperate icefishes)
    • Pseudaphritidae (Catadromous icefishes)
    • Eleginopsidae (Patagonian blennies)
    • Nototheniidae (Cod icefishes)
    • Harpagiferidae (Spiny plunderfishes)
    • Artedidraconidae (Barbeled plunderfishes)
    • Bathydraconidae (Antarctic dragonfishes)
    • Channichthyidae (Crocodile icefishes)
  • வரிசை பெர்சிபார்மிசு (incl. காஸ்டெரோஸ்டிஃபார்ம்ஸ்; ஸ்கார்பேனிஃபார்ம்ஸ்)
    • துணைவரிசை செரானோய்டேய்
      • செரானிடே
    • துணைவரிசை பெர்கொய்டேய்
      • டிரச்சினிடே
      • நிபோனிடே
      • பெர்சிடே
    • துணைவரிசை Normanichthyoidei
      • Normanichthyidae
    • துணைவரிசை நோதோதெனியோடேய்
      • ஆர்டிடிட்ராகோனிடே
      • பாத்திட்ராகோனிடே
      • போவிச்டிடே
      • சன்னிச்தைடே
      • எலிஜினோப்சிடே
      • கர்பாகிபெரிடே
      • நோட்டோதெனிடே
      • பெர்கோபிடே
      • சூடாபிரிடிடே
    • துணைவரிசை Platycephaloidei
      • Hoplichthyidae
      • Bembridae
      • Parabembridae
      • Platycephalidae
      • Plectrogeniidae
    • துணைவரிசை Bembropoidei
      • பெம்ப்ரோபிடே
    • துணைவரிசை ட்ரைக்லியோடேய்
      • பெரிசுடெடிடே
      • ட்ரைகிளிடே
    • துணைவரிசை ஸ்கார்பேனாய்டி
      • அபிசுடிடே
      • அப்லோஆக்டினிடே
      • கொங்கியோபோடிடே
      • Eschmeyeridae
      • ஞானசாந்திடே
      • நியோசுபாசுடிடே
      • பாட்ரிசைட்
      • பெரினிடே
      • Synanceiidae
      • டெட்ராரோகிடே
      • ஸ்கார்பேனிடே (incl. காரகன்திடே)
      • செபாசுடிடே
      • செடார்சிடே
      • சான்க்ளோரிஞ்சிடே
    • துணைவரிசை கோட்டாய்டி
      • Infraorder அனோப்லோபோமடேல்சு
        • அனோப்லோபோமாடிடே
      • Infraorder ஜோர்கேல்சு
        • அனார்ஹிசாடிடே
        • Bathymasteridae
        • கிரிப்டகாந்தோடிடே
        • யூலோபிடே
        • ஜோர்சிடே
        • போலிடே
        • Ptilichthyidae
        • Zaproridae
        • Stichaeidae
        • Scytalinidae
      • Infraorder Gasterosteales
        • Hypoptychidae
        • Aulorhynchidae
        • Gasterosteidae
      • Infraorder Zaniolepidales
        • Zaniolepididae
      • Infraorder Hexagrammales
        • Hexagrammidae
      • Infraorder Cottales
        • நார்மனிச்தைடே
        • டிரைகோடோன்டிடே
        • சைக்ளோப்டெரிடே
        • லிபரிடே
        • ஜோர்டானிடே
        • ரம்போகோட்டிடே (Ereuniidae)
        • இசுகார்பேனிச்தைடே
        • அகோனிடே (incl. Hemitripteridae)
        • கோட்டிடே (incl. Abyssocottidae, Comephoridae; Cottocomephoridae)
        • சைக்ரோலூட்டிடே (incl. Bathylutichthyidae)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Nelson, J. S. (2006). Fishes of the World (4 ed.). Hoboken, NJ: John Wiley & Sons. ISBN 978-0-471-25031-9.
  2. "Perciform - Form and function". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2019-02-14.
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2015). "Perciformes" in FishBase. August 2015 version.
  4. "ADW: Perciformes". animaldiversity.ummz.umich.edu. Animal Diversity Web.
  5. 5.0 5.1 J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 430–467. ISBN 978-1-118-34233-6.
  6. Betancur-R, Ricardo; Wiley, Edward O.; Arratia, Gloria; Acero, Arturo; Bailly, Nicolas; Miya, Masaki; Lecointre, Guillaume; Ortí, Guillermo (6 July 2017). "Phylogenetic classification of bony fishes". BMC Evolutionary Biology 17 (1): 162. doi:10.1186/s12862-017-0958-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1471-2148. பப்மெட்:28683774.