பொதிய மேலகம்

பொதிய மேலகம்- உபுண்டு மென்பொருள் நடுவம் என்பது சிறந்ததொரு பொதிய மேலகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

பொதிய மேலகம் (Package manager) என்பது மென்பொருள் பொதிகளைக் கோர்த்து வைக்கும் சேமிப்பகம் ஆகும். இணையத்தின் வழியே இதிலிருந்து தேவையான மென்பொருட்களை நாம் பதிவிறக்கி நிறுவிக்கொள்ள இயலும். பொதுவாக லினக்சு வகைக்கணினிகளில், எடுத்துக்காட்டாக, உபுண்டு இயக்குதளங்கள் ஒவ்வொரு வெளியீட்டின் போதும், அடிப்படையானத் தேவைகளோடு வெளிவருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து கணினியில் நிறுவிய பிறகு, நமக்குத் தேவையான மென்பொருட்களை[1] அதன் பொதிய மேலகத்தில் இருந்து நிறுவிக் கொள்ளலாம். அதனதன் பொதிய மேலக மென்பொருட்களை நிறுவிக் கொள்வதால், கணினியில் இயக்கக் கோளாறுகள் பெரும்பாலும் வருவதில்லை.

மேற்கோள்கள்