பொதுவுடைமை அனைத்துலகம்
பொதுக் கொள்கைகள்
தத்துவங்கள்
பொதுவுடமைவாதிகள்
|
பொதுவுடைமை அகிலம் | |
---|---|
நிறுவனர் | விளாதிமிர் லெனின் |
தொடக்கம் | மார்ச்சு 2, 1919 |
கலைப்பு | மே 15, 1943 |
முன்னர் |
|
பின்னர் | பொதுவுடைமைத் தகவல் குழுமம் |
இளைஞர் அமைப்பு | இளைஞர் பொதுவுடைமை அகிலம் |
கொள்கை |
|
நிறங்கள் | Red |
பொதுவுடைமை அகிலம் (Communist International) (காமின்டெர்ன் (Comintern)), அல்லது மூன்றாம் அகிலம் (Third International) (1919–1943) என்பது ஓர் உலகளாவிய பொதுவுடைமை அமைப்பாகும். இது உலகப் பொதுவுடைமையை முன்னிறுத்தியது. இது தன் இரண்டாம் அகிலத்தில் "அறுதியாக அரசை ஒழிப்பதற்கு முன்னரான இடைநிலைக் கட்டமாக உலக முதலாளிய அரசுகளை, ஆயுதப் போராட்டம் உட்பட, அனைத்து வழிகளாலும் வீழ்த்தி, உலக சோவியத் குடியரசை நிறுவ" தீர்மானித்தது.[1] இது 1915 இல் லெனின் இடதுசாரிகளை அணிதிரட்டிய சிம்மர்வால்டு கருத்தரங்குக்குப் பிறகு, 1916 இல் இரண்டாம் அகிலத்தைக் கலைத்த பிறகு, சமவுடைமைப் புரட்சி செயல்பாட்டுக்கு வெளிப்படையாக ஆதரித்த தீர்மானக் கூற்றை ஏற்காதவர்களை எதிர்த்து உருவாக்கப்பட்டது.
இது 1919 இல் இருந்து 1935 வரை ஏழு உலகப் பேராயங்களைக் கூட்டியது. இது இதே காலகட்டத்தில் பதின்மூன்று அரசியல் பேரவைகளையும் தன் செயற்குழுவைக்கொண்டு நடத்தியது. இவை அளவில் பெரியதும் பெருந்திரளானதுமான உலகப் பேராயங்கள் நிறைவேற்றிய அதே செயல்நோக்கத்தையே செயல்படுத்தின. அமெரிக்காவையும் பெரும்பிரித்தானியாவையும் எதிர்ப்பதைத் தவிர்க்க, இசுட்டாலின் 1943 இல் இதைக் கலைத்தார்.
அமைப்பின் வரலாறு
இரண்டாம் அகிலத்தின் தோல்வி
தொழிலாளர் இயக்கங்களுக்குள் பல பத்தாண்டுகளாகவே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிவந்தாலும், முதல் உலகப் பெரும்போர் இவற்றைப் புரட்சி சார்ந்தவை எனவும் சீர்திருத்தம் சார்ந்தவை என்றும் இரண்டுச் சிறகங்களாகப் பிரித்துவிட்டது. சமவுடைமை இயக்கங்கள் ஆயுதந் தாங்கிய போரை மறுத்தன. ஆனால், பாட்டாளி மக்களின் அனைத்து வல்லாண்மைக்கு ஆதரவான தொழிலாளர்கள்,, போரின்போது முதலாளிய அரசுகளுக்குத் தீனியாகிப் போன இந்தத் தொழிலாளர்களை எதிர்த்தனர். குறிப்பாக 1882 முக்கூட்டு நேச இணைப்புகள் இரு பேரரசுகள் இணைந்தவொன்றாக விலளங்கியது. இதே வேளையில் எதிர்தரப்பு முக்கூட்டு இணைப்பு, பிரான்சையும் பிரித்தானியாவையும் உருசியாவையும் இணைத்தது. கார்ல் மார்க்சு தங்கள் பொதுவுடைமை அறிக்கையில் தொழிலாளர்களுக்கு நாட்டுப்பற்றைவிட உலக அளவில் ஒன்றுசேர வழிகாட்டினார். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ உலகப் பாட்டளி மக்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்தை முன்வைத்தார். பெருந்திரளான பெரும்பான்மையினர் இரண்டாம் அகிலத் தீர்மானங்களை ஆதரித்து வாக்கிட்டனர். இதில் உலகப் போருக்கு எதிராகப் பன்னாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டனர்.[2]
முதலாம் கால கட்டம் (1919 - 1924)
லெனின் தலைமையில் பொதுவுடைமை அனைத்துலகம் உருசியப் புரட்சியை போன்று இதர மேற்குலக நாடுகளிலும், உலகளாவிய நோக்கிலும் நடத்தவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது.
இரண்டாவது கால கட்டம் (1924 - 1928)
லெனின் 1924 ம் ஆண்டு இறக்கிறார். உருசியப் புரட்சி போன்று இதர மேற்குநாடுகளில் நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இசுராலின் அதிகாரத்துக்கு வருகிறார். இவர் சோவியத் ஒன்றித்தில் மட்டும் பொதுவுடைமை என்ற கருத்தை முன்வைக்கிறார். அனைத்துலகப் பொதுவுடைமை என்ற நோக்கத்தில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு என்று நோக்கம் மாற்றம் பெறுகிறது.
மூன்றாவது கால கட்டம் (1928 - 1935)
முதலாம் கட்டத்தில் மேற்குலக நாட்டுப் புரட்சிகள் தோல்வி பெறுகின்றன. இரண்டாம் கட்டத்தில் அந்த நாட்டு முதலாளித்துவ சக்திகள் வலுப் பெறுகின்றன. ஆகவே மூன்றாம் கட்டம் தொழிலாளர் புரட்சிக்கான கட்டம் என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. இந்தக் கொள்கையின் கீழ் மிதவாத இடதுசாரிகள் முதன்மை எதிரிகளாக சில பொதுவுடமைக் கட்சிகளால் பார்க்கப்பட்டன. Popular Front கொள்கை 1935 இல் முன்வைக்கப்பட்ட பின்னர், மூன்றாவது காலம் முடிவுக்கு வந்தது.
உலகப் பேராயங்களும் அரசியல் பேரவைகளும்
உலகப் பேராயங்கள்
நிகழ்ச்சி | நடந்த ஆண்டு | கால அளவு | இருப்பிடம் | பேராளர்கள் |
---|---|---|---|---|
நிறுவனப் பேராயம் | 1919 | மார்ச்சு 2–6 | மாஸ்கோ | 34 + 18 |
இரண்டாம் உலகப் பேராயம் | 1920 | ஜூலை 19 - ஆகத்து 7 | பெத்ரோகிராது & மாஸ்கோ | 167 + ≈53 |
மூன்றாம் உலகப் பேராயம் | 1921 | ஜூன் 22 - ஜூலை 12 | மாஸ்கோ | |
நான்காம் உலகப் பேராயம் | 1922 | நவம்பர் 5 - திசம்பர் 5 | பெத்ரோகிராது & மாஸ்கோ | 340 + 48 |
ஐந்தாம் உலகப் பேராயம் | 1924 | ஜூன் 1 - ஜூலை 8 | மாஸ்கோ | 324 + 82 |
ஆறாம் உலகப் பேராயம் | 1928 | ஜூலை 17 - செப்டம்பர் 1 | மாஸ்கோ | |
ஏழாம் உலகப் பேராயம் | 1935 | ஜூலை 25 - ஆகத்து 21 | மாஸ்கோ |
அரசியல் பேரவைகள்
நிகழ்ச்சி | நடந்த ஆண்டு | கால அளவு | இருப்பிடம் | பேராளர்கள் |
---|---|---|---|---|
முதல் அரசியல் பேரவை | 1922 | பிப்ரவரி 24 - மார்ச்சு 4 | மாஸ்கோ | 105 |
2 ஆம் அரசியல் பேரவை | 1922 | ஜூன் 7–11 | மாஸ்கோ | 41 + 9 |
3 ஆம் அரசியல் பேரவை | 1923 | ஜூன் 12–23 | மாஸ்கோ | |
4 ஆம் அரசியல் பேரவை | 1924 | ஜூன் 12 - ஜூலை 12–13 | மாஸ்கோ | |
5 ஆம் அரசியல் பேரவை | 1925 | மார்ச்சு 21 - ஏப்பிரல் 6 | மாஸ்கோ | |
6 ஆம் அரசியல் பேரவை | 1926 | பிப்ரவரி 17 - மார்ச்சு 15 | மாஸ்கோ | 77 + 53 |
7 ஆம் அரசியல் பேரவை | 1926 | நவம்பர் 22 - திசம்பர் 16 | மாஸ்கோ | |
8 ஆம் அரசியல் பேரவை | 1927 | மே 18–30 | மாஸ்கோ | |
9 ஆம் அரசியல் பேரவை | 1928 | பிப்ரவரி 9–25 | மாஸ்கோ | 44 + 48 |
10 ஆம் அரசியல் பேரவை | 1929 | ஜூலை 3–19 | மாஸ்கோ | 36 + 72 |
அரசியல் பேரவை | 1930 | பிப்ரவரி 25-?? | மாஸ்கோ | |
11 ஆம் அரசியல் பேரவை | 1931 | மார்ச்சு 26 - ஏப்பிரல் 11 | மாஸ்கோ | |
12 ஆம் அரசியல் பேரவை | 1932 | style="text-align:center;" ஆகத்து 27 செப்டம்பர் 15 | மாஸ்கோ | 38 + 136 |
13 ஆம் அரசியல் பேரவை | 1933 | நவம்பர் 28 - திசம்பர் 12 | மாஸ்கோ |
சார்புள்ள கூட்டங்கள்
நிகழ்ச்சி | நடந்த ஆண்டு | கால அளவு | இருப்பிடம் | பேராளர்கள் |
---|---|---|---|---|
ஆம்சுடெர்டாம் குழுமக் கருத்தரங்கு | 1920 | பிப்ரவரி 10–11 | ஆம்சுடெர்டாம் | 16 |
கீழை மக்கள் முதல் உலகப் பேராயம் | 1920 | செப்டம்பர் 1–8 | பாக்கு | 1,891 |
சேய்மைக் கிழக்கு மக்கள் உலகப் பேராயம் | 1922 | ஜனவரி 21 - பிபரவரி 2 | மாஸ்கோ & பெத்ரோகிராது | |
குடியேற்ற ஒடுக்கல், தனிவல்லாண்மை எதிர்ப்பு உலகப் பேராயம் | 1927 | பிப்ரவரி 10–15 | பிரசல்சு | 152 |
தனிவல்லாண்மை எதிர்ப்புக் குழு இரண்டாம் பேராயம் | 1929 | ஜூலை | பிராங்பர்ட் | |
நீக்ரோ தொழிலாளர் முதல் உலகப் பேராயம் | 1930 | ஜூலை 7–8 | அம்பர்கு | 17 + 3 |
அடிக்குறிப்புகள்
- ↑ Harold Henry Fisher (1955). The Communist Revolution: An Outline of Strategy and Tactics. Stanford UP. p. 13.
- ↑ David North and Joe Kishore (2008). The Historical & International Foundations of the Socialist Equality Party. Mehring Books. p. 13.
- ↑ Marxist History: "The Communist International (1919-1943)", accessed March 22, 2010
மேலும் படிக்க
- Carr, E.H. Twilight of the Comintern, 1930-1935. New York: Pantheon Books, 1982.
- Chase, William J. Enemies within the Gates? The Comintern and the Stalinist Repression, 1934-1939. New Haven, CT: Yale University Press, 2001.
- Gankin, Olga Hess and Harold Henry Fisher. The Bolsheviks and the World War: The Origin of the Third International. Stanford, CA: Stanford University Press, 1940.
- Haithcox, John Patrick. Communism and nationalism in India: MN Roy and Comintern policy, 1920-1939 (1971)
- Hallas, Duncan. The Comintern: The History of the Third International. London: Bookmarks, 1985.
- Hopkirk, Peter. Setting the East Ablaze: Lenin's Dream of a Empire in Asia 1984 (1984)
- James, C.L.R., World Revolution 1917-1936: The Rise and Fall of the Communist International. (1937). Duke University Press, 2017.
- Lazitch, Branko and Milorad M. Drachkovitch. Biographical dictionary of the Comintern (2nd ed. 1986)
- McDermott, Kevin. "The History of the Comintern in Light of New Documents," in Tim Rees and Andrew Thorpe (eds.), International Communism and the Communist International, 1919-43. Manchester, England: Manchester University Press, 1998.
- McDermott, Kevin. "Rethinking the Comintern: Soviet Historiography, 1987-1991," Labour History Review, vol. 57, no. 3 (Wintern 1992), pp 37–58.
- McDermott, Kevin, and J. Agnew. The Comintern: a History of International Communism from Lenin to Stalin. Basingstoke, 1996.
- Melograni, Piero. Lenin and the Myth of World Revolution: Ideology and Reasons of State 1917-1920, Humanities Press, 1990.
- Priestland, David. The Red Flag: A History of Communism. 2010.
- Smith, S. A. (ed.) The Oxford Handbook of the History of Communism (2014) ch 10 on Commintern
- Ulam, Adam B. Expansion and Coexistence: Soviet Foreign Policy, 1917-1973. Second Edition. New York: Praeger Publishers, 1974.
- Worley, Matthew et al. (eds.) Bolshevism, Stalinism and the Comintern: Perspectives on Stalinization, 1917-53. (2008)
- The Comintern and its Critics (Special issue of Revolutionary History Volume 8, no 1, Summer 2001)
Primary sources
- Davidson, Apollon, et al. (eds.) South Africa and the Communist International: A Documentary History. (2 vol. 2003.
- Degras, Jane T. The Communist International, 1919-43 (3 Vols. 1956); documents; online vol 1 1919-22; vol 2 1923-28
- Firsov, Fridrikh I., Harvey Klehr, and John Earl Haynes, eds. Secret Cables of the Comintern, 1933-1943. New Haven, CT: Yale University Press, 2014.
- Riddell, John (ed.): The Communist International in Lenin's Time, Vol. 1: Lenin's Struggle for a Revolutionary International: Documents: 1907-1916: The Preparatory Years. New York: Monad Press, 1984.
- Riddell, John (ed.): The Communist International in Lenin's Time, Vol. 2: The German Revolution and the Debate on Soviet Power: Documents: 1918-1919: Preparing the Founding Congress. New York: Pathfinder Press, 1986.
- Riddell, John (ed.) The Communist International in Lenin's Time, Vol. 3: Founding the Communist International: Proceedings and Documents of the First Congress: March 1919. New York: Pathfinder Press, 1987.
- Riddell, John (ed.) The Communist International in Lenin's Time: Workers of the World and Oppressed Peoples Unite! Proceedings and Documents of the Second Congress, 1920. In Two Volumes. New York: Pathfinder Press, 1991.
- Riddell, John (ed.) The Communist International in Lenin's Time: To See the Dawn: Baku, 1920: First Congress of the Peoples of the East. New York: Pathfinder Press, 1993.
- Riddell, John (ed.) Toward the United Front: Proceedings of the Fourth Congress of the Communist International, 1922. Lieden, NL: Brill, 2012.
வெளி இணைப்புகள்
- Comintern History Archive Marxists Internet Archive
- Lenin's speech: The Third, Communist International (ⓘ)
- Site Comintern Archives (ஆங்கிலம்)
- Site Comintern Archives (உருசிய மொழியில்)
- The Communist International Journal of the Comintern, Marxists Internet Archive
- Outline History of the Communist International
- The Internationale by R. Palme Dutt, 1964
- Report from Moscow, 3rd International congress, 1920 by Otto Rühle
- Article on the Third International from the Encyclopædia Britannica