மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து
மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து (People's Democratic Front (Hyderabad)) என்பது ஐதராபாத் மாநிலத்தில் செயல்படும் இந்திய பொதுவுடைமைக் கட்சி ஆகும்.
ஐதராபாத்தில் உள்ள 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முதல் மக்களவைத் தேர்தலில் 7 இடங்களை இக்கட்சி வென்றது. இந்த ஏழு பேரில் தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டத்தில்முக்கிய பங்கு வகித்த பிரபல பிரமுகர்களும் இருந்தனர்.
மக்கள் ஜனநாயக முன்னணியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இராம்சந்தர் கோவிந்த் பரஞ்பே (பீர்)
- பாதம் யெல்லா ரெட்டி (கரீம்நகர்)
- டி. பி. விட்டல் ராவ் (கம்மம்)
- என். எம். ஜெயசூர்யா (மேதக்)
- இரவி நாராயண ரெட்டி (நல்கொண்டா )
- சுங்கம் அச்சலு (நல்கொண்டா-எஸ்சி)
- பெண்தயாள் இராகவ ராவ் (வாரங்கல்)