மங்களூர் கோழிச் சுக்கா

மங்களூர் கோழிச் சுக்கா
மாற்றுப் பெயர்கள்துளு: கோரி சுக்கா, கோரி அசாதின, ஆங்கிலம்: (சிக்கன் சுக்கா) Chicken Sukka
வகைகறி
பரிமாறப்படும் வெப்பநிலைமுதன்மை உணவு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதுளு நாடு
முக்கிய சேர்பொருட்கள்கோழிக்கறி, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய்
வேறுபாடுகள்உலர்ந்த, பகுதி கிரேவி
சிக்கன் சுக்க அரை கிரேவி

மங்களூர் கோழிச் சுக்கா அல்லது 'கோரி சுக்கா/ கோரி அசாதினா (துளு) என்பது இந்திய உணவு வகையாகும். இந்த கோழி சுக்கா மங்களூர் மற்றும் உடுப்பி பகுதியில் தோன்றியதாகும். சுக்கா என்பது "சுக்கா" வார்த்தையாகும். இந்தியில் "சுகா" என்றால் "உலர்ந்த" என்று பொருள்படும். சில நேரங்களில் "கோரி அஜடினா " என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் இது உலர் மற்றும் பகுதி கிரேவி என இரண்டு மாறுபாடுகளில் தயாரிக்கப்படலாம்.[1]

தேவையான பொருட்கள்

கோழிச் சுக்கா தயாரிக்கத் தேவையான பொருட்கள்.[2]

தயாரிப்பு

மங்களூர் கோழிச் சுக்காவினை பின்வரும் முறையில் தயாரிக்கலாம்.[2]

  • கோழிக்கறியினை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகக் கழுவி, மஞ்சள், உப்பு, எலுமிச்சம் சாறு சேர்த்து ஊறவைக்கவேண்டும்.
  • மசாலா தூள் : உலர்ந்த வறுத்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம், சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு முதலியவற்றை மிக்சியில் இட்டு தூளாகப் பொடி செய்யவேண்டும்.
  • மசாலா பசை: 1 வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பசையாக அரைத்து, துருவிய தேங்காய் துளைச் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்.
  • ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய்யை இட்டு சூடாக்கவேண்டும். எண்ணெய் சூடான பின்னர், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.
  • இப்போது ஊறவைத்த கோழிக்கறியினைச் சேர்க்கவும். மசலாவினை கோழிக்கறியில் நன்றாக சேறுமாறு கிளறிவிட்டு சிறிது நேரம் சமைக்கவும்.
  • இப்போது அரைத்த மசாலா மற்றும் மசாலாத்தூள் சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை சமைக்கவும்.
  • கோழிக்கறி நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளைத் தூவி சூடாகப் பரிமாறவும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Charishma (2011-06-20). "Cherie's Stolen Recipes: kori aajadina/ chicken sukka". http://cheriesstolenrecipes.blogspot.com/2011/06/kori-aajadina-chicken-sukka.html. 
  2. 2.0 2.1 "Udupi Today: Sunday Special Recipe # 5: Kori Sukka (Dry Chicken With Coconut)" இம் மூலத்தில் இருந்து 2018-06-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180622164954/http://www.udupitoday.com/udtoday/variety.php?news=get&team_id=53.