பள்ளிவாசல்

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இடம்பெற்றுள்ள பத்ஷாகி பள்ளிவாசல், அதன் மையத்தில் ஐவான் , மூன்று கவிகைமாடம் (domes), மற்றும் தெளிவாய்த் தெரிகின்ற ஐந்து பள்ளிவாயில் தூபிகள் (மனோரா)

பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.

முசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Mosque". The Oxford Dictionary of Islam. (2014). Ed. John L. Esposito. Oxford University Press. 
  2. Longhurst, Christopher E; Theology of a Mosque: The Sacred Inspiring Form, Function and Design in Islamic Architecture, Lonaard Journal. Mar 2012, Vol. 2 Issue 8, p3-13. 11p. "Since submission to God is the essence of divine worship, the place of worship is intrinsic to Islam's self-identity. This 'place' is not a building per se but what is evidenced by the etymology of the word 'mosque' which derives from the Arabic 'masjid' meaning 'a place of sujud (prostration).'
  3. Colledge, R. (1999). The mosque. In: Mastering World Religions. Macmillan Master Series. Palgrave, London. https://doi.org/10.1007/978-1-349-14329-0_16 "A mosque is a building where Muslims bow before Allah to show their submission to His will. It is not necessary to have a building to do this. Muhammad said that 'Wherever the hour of prayer overtakes you, you shall perform the prayer. That place is the mosque'. In his early days in Makkah there was no mosque, so he and his friends would pray anywhere."