மஞ்சள் குருகு
மஞ்சள் குருகு Yellow bittern | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இக்சோபிரைக்கசு
|
இனம்: | I. சினென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
Ixobrychus சினென்சிசு (கிமெலின், 1789) |
மஞ்சள் குருகு[2][3] (yellow bittern, Ixobrychus sinensis) எனப்படும் மணல் நாரை[4] அல்லது மஞ்சள் கொக்கு என்பது ஒரு சிறிய வகைக் குருகு. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதிகளிலும் ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன; பொதுவில் இவை வலசை போவதில்லை எனினும் வட பகுதிகளிலுள்ள சில பறவைகள் சிறிய தொலைவிற்கு உள்நாட்டு வலசை செல்கின்றன.
கள இயல்புகள்
உடல் தோற்றம்
செங்குருகைப் போன்று இதுவும் ஒரு சிறிய ஒல்லியான வகைக் குருகு; ஒட்டுமொத்த தோற்றத்தில் குருட்டுக் கொக்கு போல் இருந்தாலும், இது பறக்கும் போது இதன் மஞ்சள் கலந்த வெண் பழுப்பு நிற உடலும் கருத்த இறக்கைகளும் இதனை வேறுபடுத்திக் காட்டும்.[4]
வளர்ந்த ஆண்
புதர் போன்ற கருத்த கொண்டை; பின்புறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் உடையது. வால் சாம்பல் கலந்த கருமை நிறம் கொண்டது.
மேற்கோள்கள்
- ↑ BirdLife International (2012). "Ixobrychus sinensis". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22697303/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ தென் இந்திய பறவைகள் - கிரிமிட், இன்சுகிப், மகேஷ்வரன் - பக். 152:2 - BNHS (2005)
- ↑ தமிழில் பறவைப் பெயர்கள் – க. ரத்னம் – பக். 18:21
- ↑ 4.0 4.1 Handbook of the Birds of India and Pakistan – Salim Ali & Dillon Ripley – Vol. I (p. 86 ff : 57) – OUP (1968)
- Birds of India by Grimmett, Inskipp and Inskipp, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-04910-6
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் மஞ்சள் குருகு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.